வைட்டமின் ஈ என்பது கொழுப்பில் கரையக்கூடிய ஒரு ஊட்டச்சத்து ஆகும். இது ஆக்சிஜனேற்ற பண்புகள் மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை இயக்குவதற்கு உதவுகிறது. சிவப்பு இரத்த அணுக்கள் உருவாக்குவதில் விட்டமின் ஈ முக்கியப் பங்கு வகிக்கிறது.
வைட்டமின் ஈ குறைபாட்டின் அறிகுறிகள்:
நரம்பு தசை பிரச்னைகள், அடிக்கடி சோர்வாக உணர்வது, இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைவது, தசை பிடிப்புகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், கண் பார்வை கோளாறுகள், முடி உதிர்வது வைட்டமின் குறைபாட்டின் அறிகுறிகளாகும்.
வைட்டமின் ஈ குறைபாடு ஏற்படச் காரணம்:
வைட்டமின் ஈ குறைபாட்டிற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று நமது மரபணுக்களில் உள்ளது. குடும்பத்தில் வைட்டமின் ஈ பற்றாக்குறை யாருக்கேனும் இருந்தால் அதன் அளவை தொடர்ந்து கண்காணிப்பது அவசியம்.
குறை மாத குழந்தைகளுக்கு இந்தப் பிரச்னைகள் ஏற்படலாம்.
தசை பிடிப்புகளை போக்கவும், சருமத்தை பளபளப்பாக வைக்கவும், உடற்பயிற்சியின் காரணமாக தசைகள் சேதமடையாமல் பாதுகாக்கவும் வைட்டமின் ஈ உடலுக்கு மிகவும் அவசியம். வைட்டமின் ஈ சப்ளிமெண்ட் காப்ஸ்யூல்கள் வடிவில் எடுத்துக் கொள்ளலாம். அதிகப்படியான வைட்டமின் ஈ எடுத்துக் கொண்டால் வாந்தி, வயிற்றுப்போக்கு, தசைவலி, அசாதாரண இரத்தப்போக்கு போன்றவை ஏற்படும். நாம் உட்கொள்ளும் வைட்டமின் ஈ அளவு நம் வயதைப் பொறுத்தும் மாறுபடும்.
குழந்தைகள் 4 முதல் 8 வயது வரை 7 மி.கி., 9 முதல் 13 வயது வரை 11 மி.கி., கர்ப்பிணிப் பெண்கள் 15 மி.கி., தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் 19 மி.கி. நாள் ஒன்றுக்குத் தேவைப்படும். இருப்பினும் வைட்டமின் ஈ சப்ளிமென்ட்டின் அளவை உங்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்வது நல்லது.
நம் தினசரி உணவில் வைட்டமின் ஈ நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.
வைட்டமின் ஈ சத்து நிறைந்த உணவுகள்:
பாதாம், வெண்ணெய், பச்சை காய்கறிகள், மாம்பழம் 9 மி.கி., அவகோடா, பூசணி விதைகள் 100 கிராமில் 2.18 மி.கி., ஆலிவ் ஆயில் 100 கிராமில் 14.35 மி.கி., கீரை வகைகள், பப்பாளி பழம், சூரியகாந்தி விதைகள் 100 கிராமில் 35.17 மி.கி., தக்காளி 100 கிராமில் 54 மி.கி., புரோக்கோலி, கிவி, வேர்க்கடலை மற்றும் வெண்ணெய் சுவையானது மட்டுமல்ல, இதில் 100 கிராமில் 9.1 மி.கி. வைட்டமின் ஈ சத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.