பொதுவாக, ஒவ்வொரு தாயும் அறிவுள்ள குழந்தைகளைப் பெற வேண்டும் என்றே ஆசைப்படுவார்கள். அப்படி புத்திசாலித்தனமான குழந்தைகளைப் பெற, கர்ப்ப காலத்தில் சில உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதோடு, சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
குழந்தையின் மூளை வளர்ச்சி நன்றாக வளர, ஃபோலிக் அமிலம் நிறைய தேவை. திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, வைட்டமின் சி மற்றும் பச்சை காய்கறிகள் என ஃபோலிக் அமிலம் நிறைந்த இயற்கை உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். தினமும் நான்கு வகையான பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட வேண்டும். முடியாதவர்கள் மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ள ஃபோலிக் ஆசிட் சப்ளிமெண்ட்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
கர்ப்ப காலத்தில் கேரட், பீட்ரூட், தக்காளி, பருப்பு, வாழைப்பழம், வேர்க்கடலை, இறால் போன்றவற்றை சாப்பிட்டால் கருவில் இருக்கும் குழந்தை. நல்ல புத்திசாலித்தனத்துடன் பிறக்கும். அத்துடன் மாதுளம், பேரீச்சம்பழம், திராட்சை, பீன்ஸ் மற்றும் ஓட்ஸ் போன்ற உணவுகளை உட்கொள்வது உங்களுக்கு அதிக இரும்புச்சத்தையும் வழங்கிறது. கர்ப்பிணிப் பெண்கள் ஆறு முதல் பதினொரு வேளை ரொட்டி அல்லது தானியங்களைச் சாப்பிட வேண்டும். இது கர்ப்பிணிகளுக்குத் தேவையான ஆற்றலை வழங்குவதோடு, குழந்தையின் மூளை வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது.
கர்ப்பிணிகள் வைட்டமின் டி நிறைந்த உணவுகளை தவறாமல் சாப்பிட வேண்டும். வேகவைத்த முட்டை, மீன், இறைச்சி, முழு தானியங்கள், கீரை ஆகியவற்றில் வைட்டமின் டி உள்ளது. மேலும் காலை மற்றும் மாலை வேளையில் இளம் வெயில் நேரத்தில் வாக்கிங் செல்வதும் உடலுக்குத் தேவையான வைட்டமின் டி கிடைக்க உதவும். முட்டையில் கோலின் என்ற அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இது குழந்தைகளின் மூளை மற்றும் நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது. கர்ப்பிணிப் பெண்கள் தினமும் இரண்டு முட்டைகளை உட்கொள்ள வேண்டும்.
கர்ப்பிணிகள் பாதாம், வால்நட், பிஸ்தா, முந்திரி போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். நட்ஸில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள், புரதம், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு பயனுள்ளதாக இருக்கும். பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக கொழு கொழு என்று பிறக்க வேண்டுமா? வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை மீன் உணவு சாப்பிடுங்கள் என்கிறார்கள் ஸ்காண்டிநேவியா மருத்துவ ஆராய்ச்சியாளர்கள். இதிலுள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மூளை மற்றும் விழித்திரையின் வளர்ச்சிக்கு முக்கியமானவை. அதுமட்டுமின்றி, கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் மனச்சோர்வை இது தடுக்கிறது. ஒமேகா 3 கொழுப்பு அமிலத்தை உடலில் உற்பத்தி செய்ய முடியாது. எனவே, அதை உங்கள் உணவில் உட்கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். டுனா மற்றும் சால்மன் போன்ற எண்ணெய் மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன.
புத்திசாலி குழந்தைகளைப் பெற என்ன செய்ய வேண்டும்? இது பற்றி ஆய்வு மேற்கொண்ட தாய்லாந்து மருத்துவ ஆராய்ச்சியாளர்கள், குழந்தை பிறப்பதற்கு முன்பே நியூரோடிக் செல்கள் வளரத் தொடங்கிவிடுகிறது! அது 2 வயது வரை தொடர்ந்து வளர்கிறது. எனவே கரு வளர்ந்து 5 மாதம் ஆகும்போதே கர்ப்பிணிப் பெண்கள் நல்ல மெல்லிசையை கேட்கத் தொடங்க வேண்டும். அவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். ஆரோக்கியமான சூழ்நிலையில் வாழ வேண்டும். கரு வளரும்போது ஒளி வீச்சு அவர்களின் மூளையின் செல்கள் சரியான முறையில் வளர உதவுகிறது என்கிறார்கள். எனவே, அவ்வப்போது வயிற்றுப்பகுதியில் வெளிச்சம் பட விட வேண்டும்.
கர்ப்பம் தரித்தது முதல் பிரசவ தினம் வரை கர்ப்பிணிப் பெண்கள் மகிழ்ச்சியாக இருந்தால் அந்தப் பெண்ணிற்கு பிறக்கும் குழந்தை அறிவு மிகுந்த குழந்தையாக இருக்கும். மகிழ்ச்சியின்றி பயத்துடன் இருந்தால் முதிர்ந்த கருவின் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு குழந்தையின் ஐ.கியூவை பாதிக்கும் என்கிறார்கள். காரணம் தேவையற்ற பயம், அதிர்ச்சியால் ‘அடெகோலேமைன்’ (Atecholamin) என்கிற ஹார்மோன் அதிகம் சுரந்து முதிர்ந்த கருவைப் பாதித்து விடுகிறது என்பதை யுகான்டோன்சி மருத்துவ பல்கலைக்கழகம் ஓர் ஆய்வின் மூலம் நிரூபித்துள்ளது.
மேலும், மன அழுத்தத்தைத் தவிர்ப்பது, அதிக தண்ணீர் குடிப்பது, எடையை கட்டுக்குள் வைப்பது, புகைபிடித்தல் மற்றும் மது அருந்தும் பழக்கத்தைத் தவிர்ப்பது, முறையான நடைப்பயிற்சி ஆகியவையும் குழந்தையின் மூளை வளர்ச்சியை அதிகரிக்க உதவும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.