பசி என்பது அனைவருக்கும் ஏற்படும் ஒரு முக்கியமான உணர்வு. ஆனால், அளவுக்கு அதிகமாக பசி எடுப்பதென்பது உடல் நலனை பாதித்து பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும். இன்றைய காலகட்டத்தில் உட்கார்ந்த நிலையிலேயே செய்யும் வேலைகள் அதிகரித்துவிட்டன. மேலும், தவறான உணவுப் பழக்கங்கள் போன்ற காரணங்களால் பலர் அதிக பசியால் அவதிப்படுகின்றனர். எனவே, பசியைக் கட்டுப்படுத்தும் முறைகள் பற்றி அனைவருமே தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
பசியைக் கட்டுப்படுத்தும் வழிகள்:
பசியை கட்டுப்படுத்த முழு தானியங்கள், பழங்கள், காய்கறிகள், புரதம் நிறைந்த உணவுகள் போன்ற சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது முக்கியம். இந்த உணவுகள் நீண்ட நேரம் பசியைத் தணித்து உடலுக்கு தேவையான சத்துக்களை அளிக்கும்.
மூன்று வேளை அதிக அளவு உணவு உண்ணாமல், உணவை பகுதியாகப் பிரித்து கொஞ்சம் கொஞ்சமாக உட்கொள்ளுங்கள். இது உங்கள் வயிற்றை நிரப்பி அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்கும்.
நார்ச்சத்து நிறைந்த உணவுகளை செரிமானத்தை எளிதாக்கி நீண்ட நேரம் பசியைத் தணிக்கும். தினசரி போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உடலில் நீர்ச்சத்தைப் பராமரித்து பசியை கட்டுப்படுத்த உதவும்.
இனிப்பு மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள் பசியை அதிகரிக்கச் செய்யும். எனவே, இந்த உணவுகளைக் குறைத்து ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளுங்கள். இது தவிர சில வாழ்க்கைமுறை மாற்றங்களையும் கட்டாயம் செய்ய வேண்டும்.
தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது உடல் எடையைக் குறைத்து பசியைக் கட்டுப்படுத்த உதவும். மேலும், தினசரி போதுமான தூக்கம் தூங்க வேண்டியது அவசியம். தினமும் 7 முதல் 8 மணி நேரம் தூங்குவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
மன அழுத்தம் என்பது உணவு உட்கொள்ளும் பழக்கத்தை பாதித்து அதிகமாக சாப்பிடத் தூண்டும். எனவே, மன அழுத்தத்தை நிர்வகிக்க தியானம், யோகா போன்ற நுட்பங்களைப் பின்பற்றுங்கள். உணவை எப்போதும் அவசர அவசரமாக சாப்பிடாமல், மெதுவாக நன்கு மென்று சாப்பிடுங்கள். உணவை உண்பதில் கவனம் செலுத்துவதன் மூலம் நீங்கள் எப்போது நிறைவாக உணரலாம்.
சில சூழ்நிலைகளில் பசியைக் கட்டுப்படுத்த உணவுப் பழக்கங்கள், வாழ்க்கை முறை மாற்றங்கள் செய்வது மட்டும் போதுமானதாக இருக்காது. இந்த சந்தர்ப்பங்களில் மருத்துவரின் ஆலோசனையை பெற்று மருத்துவ சிகிச்சை எடுக்கலாம்.
பசியைக் கட்டுப்படுத்துவது என்பது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமான பகுதி. மேற்கண்ட வழிகளைப் பின்பற்றுவதன் மூலம் நீங்கள் பசியைக் கட்டுப்படுத்தி உடல் எடையைக் குறைத்து ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம்.