ஆண்களின் உடல் ஆரோக்கியத்தில் வைட்டமின் B12 மிகவும் முக்கியமானதாகும். இந்த சத்து இல்லை என்றால் என்னாகும்? இல்லை என்பதற்கான அறிகுறிகள் என்னென்ன? போன்றவற்றைப் பார்ப்போம்.
ஆரோக்கியமாக இருக்க உடலுக்கு பல சத்துக்கள் தேவை. வைட்டமின் ஏ, டி, சி ஆகியவை மிகவும் முக்கியம். அதில் ஒன்றுதான் இந்த வைட்டமின் பி12. இந்த வைட்டமின் பி12 ரத்த சிவப்பணுக்கள் மற்றும் டிஎன்ஏ - உருவாக்குவதில், நரம்புகளை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் என பலவற்றிலும் முக்கியமான பங்கை ஆற்றுகிறது. இந்த பி12 சத்து இல்லையென்றால், இது இரத்த சோகை , சோர்வு, நரம்பியல் சிக்கல்கள் போன்றவற்றை உண்டு செய்யும்.
வைட்டமின் பி12 இல்லையென்பதற்கான அறிகுறிகள் பற்றி பார்ப்போம்.
உணர்வின்மை:
வைட்டமின் பி12 உடலில் குறைந்தால், இரவு நேரத்தில் காலில் உணர்வின்மை ஏற்படும். பெரும்பாலும் நீரிழிவு நோயுடன் இதைத் தொடர்பு படுத்தி பார்ப்பார்கள்.
பலவீனமான கால்கள்:
தசை பலவீனம் அடைந்து கால்களையும் அது பலவீனமாக்கும்; முழு உடல் ஒருங்கிணைப்பையும் கீழ் உடலின் கால்களிலும் பாதங்களிலும் செலுத்துவதால் இவை ஒட்டுமொத்த வலிமையை பாதிக்கலாம். இதனால் கால் மற்றும் பாதங்களில் வலி அதிகமாக இருக்கும். குறிப்பாக கால்கள் மிகவும் பலவீனமாக இருக்கும்.
நடப்பதில் சிரமம்:
மாலை அல்லது இரவு நேரங்களில் நடப்பதில் சிரமம் ஏற்பட்டால், அதற்கு காரணம் வைட்டமின் பி12 குறைப்பாடுதான்.
கூச்ச உணர்வு:
ஆண்களுக்கு இரவு நேரங்களில் கால்களில் கூச்சம் ஏற்பட்டால் வைட்டமின் பி12 சரிபார்ப்பது நல்லது.
வைட்டமின் பி12 குறைப்பாடு இருப்பவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்:
1. கீரை வகைகள்
2. பெர்ரி பழங்கள்
3. வாழைப்பழம்
4. தானியங்கள்
5. பால்
6. முட்டை
7. தயிர்
8. சீஸ்
9. ஈரல்
10. சால்மன், டுனா மீன்
இந்த உணவுகளை வழக்கமாக எடுத்துக்கொண்டால் வைட்டமின் பி12 அளவு உடலில் அதிகமாகும். மேற்சொன்ன அறிகுறிகள் அனைத்தும் சரியாகிவிடும்.