What is South Koreans fitness secret? Let's find out! Image Credits: AsiaOne
ஆரோக்கியம்

தென்கொரியர்களின் பிட்னஸ் ரகசியம் என்ன தெரியுமா?

நான்சி மலர்

தென்கொரியர்கள் அழகுப் பராமரிப்புக்கு மட்டும் பெயர் போனவர்கள் இல்லை; உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதிலும் கைதேர்ந்தவர்கள். இதற்காக பாரம்பரியமாக அவர்கள் பின்பற்றும் முறைகள் என்னென்ன என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

தென்கொரிய உணவுகள் இந்தியாவில் மிகவும் பிரபலமாகும். பாரம்பரிய உணவுகளான Kimichi, Bibimbab ஆகிய உணவுகள் ஆரோக்கியமான உணவுகளாகக் கருதப்படுகின்றன. கொரியர்கள் பதப்படுத்தப்பட்ட உணவுகளை கொஞ்சமாகவும், காய்கறிகளை அதிகமாகவும் உணவில் சேர்த்துக் கொள்கின்றனர். உணவுகளை பச்சையாகவும், நொதித்த உணவுகளையும் அதிகம் எடுத்துக்கொள்வது இவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துக்கிறது.

தென்கொரியர்கள் உணவு உண்பதில் அதிக அக்கறையுடனும், கவனத்துடனும் இருப்பார்கள். அதிகமாக கோதுமை, இனிப்பு, பால், சீஸ், வெண்ணெய் போன்றவற்றிக்கு ஸ்டிரிக்ட் ‘நோ’ சொல்லி விடுவார்கள். கோதுமையை உணவில் சேர்ப்பதை தவிர்த்து விட்டு, அதற்கு பதில் கோதுமை சேர்க்காத Dumplings, Pancakes ஐ உண்பார்கள். பச்சைப்பயிர் பயன்படுத்தி செய்யப்படும் நூடுல்ஸ்களை உண்பார்கள். Tofu, Mushroom ஆகியவற்றை கறிக்கு பதிலாக எடுத்துக்கொள்வார்கள்.

தென் கொரியர்களின் உணவு உண்ணும் முறை எடை குறைப்பதற்கு வெகுவாக உதவுவதாக சொல்லப்படுகிறது. ஏனெனில், கொழுப்பு மற்றும் இனிப்பு உணவுகளை குறைத்துவிட்டு அதிக காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்கின்றனர். காய்கறிகளில் அதிக நார்ச்சத்து மற்றும் கலோரி குறைவாக உள்ளது. இது எடைக்குறைப்புக்கு பெரிதும் உதவுகிறது.

கொரிய உணவுகளில் அதிகமாக காய்கறிகள் மற்றும் பழங்களை சேர்ப்பதும் குறைவான கொழுப்பு, சர்க்கரை, எண்ணெய்யை பயன்படுத்துவதால், சர்க்கரை வியாதி, இருதய நோய் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கிறது. பதப்படுத்தப்பட்ட உணவுகள், கொழுப்பு உணவுகள் எடுத்துக்கொள்ளாத காரணத்தால் இரத்த அழுத்தம், இரத்தத்தில் சர்க்கரை, கொழுப்பு ஆகியவை குறைந்து ஆரோக்கியமாக இருக்க வழி செய்கிறது. நொதித்த உணவுகளான கிமிச்சி போன்றவற்றை எடுத்துக்கொள்வதால் ஜீரண சக்திக்கு அதிகமாக உதவுகிறது.

தென் கொரியர்களின் உணவு முறை ரகசியம், உணவு உண்ணும்போது கவனமாகவும், அக்கறையாகவும் உண்ண வேண்டியது அவசியமாகும். இது செரிமான ஆரோக்கியத்திற்கும், எடைக்குறைப்பிற்கும் பெரிதும் உதவுகிறது. அதிகமாக காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ள வழியுறுத்துகிறது. முட்டைகோஸ், மிளகாய், கீரைகள், முள்ளங்கி ஆகியவற்றில் வைட்டமின், மினரல், ஆன்டி ஆக்ஸிடன்ட் போன்றவை இருப்பதால் இது Balanced diet ஆக இருப்பது மட்டுமில்லாமல் வீக்கம், இருதயப் பிரச்னை, ஸ்ட்ரெஸ் போன்றவை வராமல் பாதுகாக்கிறது.

நொதித்த உணவுகளில் அதிகம் ப்ரோபயாட்டிக் இருப்பதால் இதை எடுத்துக்கொள்வதன் மூலம் செரிமான ஆரோக்கியமாக செயல்படும். அதிகமாக பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் இனிப்புகளை எடுத்துக்கொள்ளாததால்தான் கொரியர்களால் உடல் பிட்டாக இருக்க முடிகிறது. ஆரோக்கியமான சமையல் முறையில் வறுப்பது, வேகவைப்பது, கிரில் செய்வது என்று எண்ணெய் பயன்படுத்துவதை குறைத்துக்கொள்வது ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

கொரியர்கள் உணவு உண்பதில் Portion size ல் கட்டுப்பாடுடன் இருப்பார்கள். வயிறு முழுமையாக நிரம்புவதற்கு முன்பே எழுந்துவிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழிமுறைகளை கடைப்பிடித்தால் நீங்களும் கொரியர்களைப் போல பிட்டான உடலமைப்பைப் பெறலாம்.

சரும ஆரோக்கியத்திற்கும் ஹார்மோன்களுக்கும் என்ன தொடர்பு? 

How to Make a Yummy Indian Sweet Dessert - ‘Coconut Ladoo’

இளமைக்கு நாங்க கியாரண்டி நீங்க ரெடியா?

பொதி சுமக்கும் கழுதைகள் பற்றிய சில தகவல்கள்!

Lunch Box Recipe:வரகரிசி பிரியாணி வித் சுரைக்காய் பப்பு செய்யலாமா?

SCROLL FOR NEXT