What to do for urinary problems caused by coughing and sneezing? https://ta.quora.com
ஆரோக்கியம்

இருமினால், தும்மினால் வெளிப்படும் சிறுநீர் பிரச்னைக்கு என்ன செய்வது?

கே.எஸ்.கிருஷ்ணவேனி

சிலருக்கு தும்மினாலோ அல்லது இருமினாலோ சில சொட்டுக்கள் சிறுநீர் வெளிப்பட்டு அவர்களை சங்கடத்திற்கு உள்ளாக்கும். இதனை வெளியில் யாரிடமும் சொல்லவும் தயங்குவார்கள். இதற்கான தீர்வு என்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

சிறுநீர் கசிவு என்பது தூங்கும்போது படுக்கையில் ஏற்படுவது மட்டுல்ல, சிலருக்கு அதிக எடையை தூக்கும்போதும், சத்தம் போட்டு சிரிக்கும்போதும், இருமும்போதும், மாடிப்படி ஏறும்போதும் என பல சந்தர்ப்பங்களில் சிறுநீர் வெளிப்பட்டு அவதிக்குள்ளாவார்கள். இதனைக் கட்டுப்படுத்தவும் இயலாமல் வெளியில் சொல்லவும் முடியாமல் சங்கடப்படும் நிலை ஏற்படும்.

இதனால் உடல் அளவிலும் மன அளவிலும் அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இந்தப் பிரச்னைக்கு காரணம் pelvic floor muscles எனப்படும் கர்ப்பப்பை மற்றும் சிறுநீர் பையை சுற்றி உள்ள தசைகளின் பலவீனம் காரணமாகவே சிறுநீரை கட்டுப்படுத்த முடியாமல் ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்த தசைகள் பலவீனம் அடைவதற்கு பல காரணங்கள் உள்ளன. அவை:

1. உடல் பருமன்: உடல் எடை அதிகம் இருந்தால் pelvic floor musclesகள் பலவீனமாகி இந்த பிரச்னை ஏற்படும். இதற்கு உடல் எடையை குறைப்பது அவசியம்.

2. சர்க்கரை வியாதி கட்டுப்பாடு இல்லாமல் இருப்பது: சர்க்கரை வியாதியை கட்டுக்குள் கொண்டு வர மருத்துவரை கலந்தாலோசித்து மாத்திரைகளுடன் உடற்பயிற்சியும் செய்வது நல்ல பலனைத் தரும்.

3. ஆஸ்துமா பிரச்னை: ஆஸ்துமா பிரச்னை இருந்தாலும், அடிக்கடி இருமல் வருவதால் அடிவயிற்றில் பிரஷர் அதிகமாகி சிறுநீர் வெளிப்படும். இதற்கு மூச்சுப் பயிற்சியும் தகுந்த மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகளை எடுத்துக் கொள்வதும்தான் சிறந்த தீர்வு.

4. அடிக்கடி காபி, டீ குடிப்பது: அடிக்கடி காபி, டீ குடிப்பது ப்ளாடரை ஹைப்பராக ஸ்டிமுலேட் பண்ணும். இதற்கு காபி, டீ  குடிப்பதை குறைத்துக் கொள்ளுதல் நல்லது. அத்துடன் காஃபின், சாக்லேட், காரமான உணவுகள், செயற்கை இனிப்புகள் ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது.

5. கர்ப்ப கால பிரச்னை: கர்ப்ப காலத்தில் ப்ளாடர் பாதிக்கப்பட்டாலும் இப்பிரச்னை தோன்றும். வயதாக ஆக பெல்விக் மசில்ஸ் பலவீனமாகி நடக்கும்போதும், பலமாக சிரிக்கும்போதும் இப்பிரச்னை தலை தூக்கும். சிறுநீரகத்தில் கற்கள், சிறுநீரகத் தொற்று (இன்ஃபெக் ஷன்) ஆகியவற்றாலும் சிறுநீர் சொட்டு சொட்டாக வெளியேறும். இதற்கெல்லாம் சரியான தீர்வு அடி வயிறு தசைகளை பலமாக்க  உடற்பயிற்சி செய்வதுதான்.

6. மலச்சிக்கல்: மலச்சிக்கல் இருந்தாலும் இம்மாதிரியான பிரச்னை ஏற்படும். இதற்கு நார்ச்சத்து மிகுந்த உணவுகளை எடுத்துக் கொள்வதும் மன அழுத்தம் இன்றி இருப்பதும் நல்ல பலனைத் தரும்.

7. உடற்பயிற்சி: பெல்விக் தசைகளை வலுப்படுத்த கெகல் (kegel) என்னும் உடற்பயிற்சியை மேற்கொள்ள சிறந்த பலன் கிடைக்கும். இதனை எந்த நேரத்திலும் செய்யலாம். சிறுநீர் கழித்து விட்டு கடைசியாக உள்ளிழுத்து திரும்பவும் ரிலாக்ஸ் பண்ணுவதுதான் இந்த கெகல் என்ற பயிற்சி. இந்தப் பயிற்சியை சும்மா உட்கார்ந்து கொண்டிருக்கும்போதோ, டிவி பார்த்துக் கொண்டிருக்கும் போதோ கூட செய்யலாம். அத்துடன் அடிவயிற்றை பலப்படுத்தவும் சில மூச்சுப் பயிற்சிகள் செய்யலாம்.

இளம் வயதினரைத் தாக்கும் புற்று நோய்கள் என்னென்ன தெரியுமா? 

கென்யாவில் 'தேனீ வேலி' - யானைகளையும் மனிதர்களையும் காக்கும் நல்முயற்சி!

விண்வெளியில் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக இருக்க முடியுமா?

தொற்று நோய்களைப் புரிந்துகொள்வது எப்படி?

வரமிளகாய் வத்தக்குழம்பும், ஸ்பைசி தொண்டக்காய் வறுவலும்!

SCROLL FOR NEXT