What to do if the gums suddenly bleed? https://tamil.webdunia.com
ஆரோக்கியம்

பல் ஈறுகளில் திடீரென இரத்தக் கசிவு ஏற்பட்டால் என்ன செய்யலாம்?

ஜெயகாந்தி மகாதேவன்

ல் ஈறுகளில் ஏற்படும் திடீர் இரத்தக் கசிவைத் தடுக்க பின்பற்ற வேண்டிய எட்டு வழிமுறைகளை இந்தப் பதிவில் பார்ப்போம்.

ஈறுகளில் உண்டாகும் எரிச்சலைப் போக்க தினமும் காலையில் எழுந்தவுடனும், இரவு படுக்கப் போகும் முன்பும் என இரண்டு முறை பல் துலக்குவது அவசியம்.

தினமும் பல் துலக்குவதற்கு முன்பு மெல்லிய நூலிழை கொண்டு பற்களுக்கு இடையே சிக்கி உள்ள உணவுப் பொருள்கள், பாக்டீரியாக்கள் மற்றும் பிளேக்குகளை அகற்றுவது (Flossing) அவசியம். இது இரத்தம் கசிவதை குறைக்க உதவும்.

மருத்துவர் பரிந்துரைக்கும் திரவத்தை அவர் வழிகாட்டுதல்படி உபயோகித்து வாயை கொப்புளிப்பது பாக்டீரியாக்களை அகற்றி, வாய் சுகாதாரத்தையும் ஈறுகளின் ஆரோக்கியத்தையும் காக்கும்.

ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உண்பதால் ஈறுகளும் மொத்த வாய்ப் பகுதியும் ஆரோக்கியம் பெறும்.

தேவையான அளவு தண்ணீர் குடிப்பதும் பாக்டீரியாக்களை வெளியேற்றி, வாய்க்குள் வறட்சித் தன்மை ஏற்படாமல் பாதுகாக்க உதவும்.

புகை பிடித்தலும், புகையிலை மெல்லுதலும் ஈறுகளில் கோளாறு உண்டுபண்ணக் கூடியவை. அவை இரண்டும் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டியவை.

பல் துலக்க மிருதுவான பிரஷ் உபயோகித்து ஈறுகளில் சிதைவு உண்டாகாமல் பார்த்துக்கொள்வது அவசியம்.

குறிப்பிட்ட இடைவெளியில் பல் மருத்துவரை சந்தித்து முழு வாய் பரிசோதனை செய்துகொள்வது அவசியம். அதன் மூலம் பற்களில் பிரச்னை ஏற்படும் அறிகுறி தென்பட்டால் கண்டுபிடித்து சரி செய்துகொள்ள முடியும்.

இப்படி எல்லாம் பற்களையும் ஈறுகளையும் பார்த்துப் பார்த்துப் பராமரித்து வாய் நலம் காப்போம்... வாழ்வோம் 'பல்'லாண்டு!

பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற வீராங்கனை பெண்ணே அல்ல… வெளியான அதிர்ச்சி தகவல்!

இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் சாப்பிடுவோர் ஜாக்கிரதை!

மன அமைதியுடன் வாழ இந்த வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்!

உஷார் மக்களே! கடவுச்சொற்களைப் பலப்படுத்துங்கள்!

அதற்குள்ளேயே ஞாயிற்றுக்கிழமை ஓடிவிட்டதா என்று நினைப்பவரா நீங்கள்!

SCROLL FOR NEXT