What to do to keep fat in moderation https://stock.adobe.com
ஆரோக்கியம்

கொழுப்புச் சத்தை அளவோடு வைத்திருக்க செய்ய வேண்டியது என்ன?

இந்திராணி தங்கவேல்

மது உடலில் அளவோடு கொழுப்புச் சத்து இருக்க வேண்டியது மிகவும் அவசியம். கொழுப்பு கூடுதலாகும்பொழுதுதான் உடலில் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. கொழுப்புச்சத்தை சரியாகப் பராமரிக்க எடுக்க வேண்டிய உணவுகள் மற்றும் உடற்பயிற்சிகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

புரோட்டின், புரதச்சத்துள்ள உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். கொட்டைகள் கொலஸ்ட்ராலை குறைக்கும் என்று பல நாடுகளில் தனித்தனியாக நடத்தப்பட்ட ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஆதலால் பாதாம் பருப்பு, வேர்க்கடலை, அக்ரூட்  போன்றவற்றை சாப்பிடுபவர்களின் இரத்தத்தில் மொத்த கொழுப்பின் அளவு 5.1 சதவிகிதம் குறைவதாக ஆய்வுகள் கூறுவதால் இதுபோன்ற நட்ஸ் வகைகளையும், சுண்டல் ராஜ்மா பீன்ஸ் போன்ற பருப்பு வகைகளையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

அதேபோல், பச்சை காய்கறிகள், கீரை வகைகள் ஆகியவற்றையும் தினசரி உணவில் கலந்து சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான நகம், முடி போன்றவை வளர்வதற்கான ஊட்டச்சத்துக்களுடன், நுண் சத்துக்கள் அனைத்தும் இவற்றின் மூலம் கிடைக்கப் பெறலாம். இதனால் கொலஸ்ட்ராலை அதிகரிக்க விடாமல் சமநிலையில் வைத்திருக்க முடியும்.

வேலை செய்யும் இடம், கல்லூரி, ஷாப்பிங் மால் போன்ற இடங்களில் லிப்ட் இருந்தால் அதை உபயோகிக்காமல் மேலே ஏறவும் இறக்கவும் படிக்கட்டுகளையே பயன்படுத்தினால் எடை  நன்றாகக் குறையும். இதனால் கலோரிகளை குறைக்க முடியும். ஒருவரின் எடை 95 கிலோ இருந்தால் தினசரி ஏழு மாடிக்கு இரண்டு முறை ஏறி இறங்குவதன் மூலம் 130 கலோரிகளை குறைக்க முடியும் என்கிறது ஆய்வு.

புல்தரை, சாலை, பீச் போன்ற இடங்களில் வேகநடை, ஓடிப் பழகுவது போன்றவற்றை செய்தல், ஜிம் மாதிரி பயிற்சிகள், பேஸ்கட் பால், டென்னிஸ், சைக்கிளிங், ஸ்கிப்பிங், புட்பால், ஸ்விம்மிங் போன்றவைகளில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஈடுபட்டால் கொழுப்பு வேகமாகக் கரையும்.

இரவு உறக்கம் குறைந்தால் உடலில் சேரும் கொழுப்பின் அளவு கூடுகிறது என்று பல ஆய்வுகளில் முடிவு செய்துள்ளனர். அதனால் இரவில் சரியான நேரத்திற்கு சாப்பிட்டு, மெல்ல நடை நடந்து சிறிது நேரம் தனியாக  தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு பத்து மணிக்குள் தூங்கச் சென்றால் நல்ல உறக்கம் வரும். பிறகு காலையில் சீக்கிரம் எழுந்திருக்கும் பழக்கமும் தினசரி வழக்கத்திற்கு வந்துவிடும். இதனால் கொலஸ்ட்ரால் வராமல் பாதுகாக்க முடியும்.

தினசரி சாப்பிடும் உணவுகளில் தயிர், பாலாடை, எண்ணெய் வகைகள், மாமிச வகைகளை முடிந்தவரை கட்டுப்படுத்த வேண்டும்.  பாமாயிலில் வறுத்து பொரித்ததை சாப்பிடாமல் இருப்பது நல்லது. எந்த வகை ஆயிலாக இருந்தாலும் அளவுக்கு அதிகமாக வறுத்தது பொரித்ததை சாப்பிடாமல் இருப்பது கொலஸ்ட்ராலை தொலைவே நிறுத்துவதற்கு நல்ல சந்தர்ப்பமாக அமையும். அதேசமயம் மோரைப் பெருக்கி, தண்ணீரைக் காய்ச்சி, நெய்யை நன்றாக உருக்கி சாப்பிடும் பழக்கத்தை மேற்கொண்டால் கொலஸ்ட்ரால் கூடாது.

மேலும், இதயம் ஆரோக்கியமாக செயல்பட வேண்டுமானால் நல்ல நடைப்பயிற்சியோடு, உடற்பயிற்சிகள், உண்ணும் உணவு, அதில் சேர்த்துக் கொள்ளும் கொட்டை வகைகள், தேவையான அளவு உடலை நீரேற்றமாக வைத்திருப்பது, வயதாக ஆக எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவுகளை எடுத்துக் கொள்வது என பழக்கமாக்கிக் கொண்டால் நம் இதயம் பலப்படுவதோடு, கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களும் பாதிப்படையாமல் அதன் கழிவுகளை வெளியேற்றும். இதனால் உடல் அக உறுப்புகள் சுத்தமாகும். ஆகவே, கொலஸ்ட்ராலை வரவிடாமல் தடுப்போம்; அதற்கான வழிமுறைகளை பின்பற்றி ஆரோக்கியமாக வாழ்வோம்!

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT