sugar 
ஆரோக்கியம்

வெள்ளை சர்க்கரை, வெல்லம், கருப்பட்டி - எது உடலுக்கு நல்லது? 

கிரி கணபதி

இனிப்புகள் உணவுக்கு ஒரு சிறப்பான சுவையை அளிப்பதுடன், உடலுக்கு ஆற்றலையும் தருகின்றன. வெள்ளை சர்க்கரை, வெல்லம், கருப்பட்டி போன்ற பல வகையான இனிப்புகள் இருக்கின்றன. ஆனால், இதில் எந்த இனிப்பு சிறந்தது? எது உடலுக்கு நல்லது? என்பது பற்றி பலருக்குத் தெரிவதில்லை. இந்தப் பதிவில் வெள்ளை சர்க்கரை, வெல்லம், கருப்பட்டி ஆகியவற்றின் ஊட்டச்சத்து மதிப்பு, நன்மைகள், தீமைகள் போன்றவற்றை விரிவாக ஆராய்ந்து, உடலுக்கு நல்லது என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம். 

வெள்ளை சர்க்கரை என்பது சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை. இது கரும்பு அல்லது சர்க்கரைவள்ளிக் கிழங்கில் இருந்து தயாரிக்கப்படுகிறது. வெள்ளை சர்க்கரையில் தனிமங்கள், வைட்டமின்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் மிகக் குறைவாகவே இருக்கும். இது வெறும் அதிக கலோரிகளை மட்டுமே வழங்கும். எனவே, இது பல தீமைகளை மட்டுமே வழங்கக்கூடியது. 

வெல்லம், கரும்புச்சக்கையை நீராவிப்படுத்தி தயாரிக்கப்படும் ஒரு இயற்கை இனிப்பாகும். வெள்ளை சர்க்கரையை விட வெல்லத்தில் இரும்பு, கால்சியம் போன்ற சில கனிமங்கள் அதிகமாக இருக்கும். எனவே, வெள்ளம் செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது. இதில் உள்ள இரும்பு ரத்த சோகையைத் தடுக்க உதவும். மேலும், இதன் கால்சியம் உள்ளடக்கம் எலும்புகளை வலுப்படுத்துகிறது. சர்க்கரையைப் போலவே வெல்லத்திலும் அதிக கலோரி உள்ளது. 

கருப்பட்டி, பனை மரத்தின் சாற்றில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு இயற்கை இனிப்பாகும். இது வெல்லத்தைவிட குறைந்த கலோரி இருக்கும். ஆனால் கருப்பட்டியில் இரும்பு, கால்சியம், பொட்டாசியம் போன்ற பல கனிமங்கள் நிறைந்துள்ளன. கருப்பட்டியில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன. உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியைத் தருகிறது. மேலும், இது செரிமானத்தை மேம்படுத்தி வயிற்றுப்போக்கு, வயிற்று வலி போன்ற பிரச்சனைகளைத் தடுக்கிறது. 

எது நல்லது? 

வெள்ளை சர்க்கரை, வெல்லம் மற்றும் கருப்பட்டி ஆகியவற்றில் கருப்பட்டிதான் ஊட்டச்சத்து மதிப்பு அதிகமாக கொண்டுள்ளது. ஆனால், எந்த இனிப்பை தேர்வு செய்வது என்பது ஒருவரின் தேவை, உடல் நிலை ஆகியவற்றைப் பொறுத்து அமையும். உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் இனிப்புகளை முற்றிலுமாகத் தவிர்ப்பது நல்லது.

சர்க்கரை நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனைப்படி குறைவாகவே இனிப்புகளை உட்கொள்ள வேண்டும். வெள்ளை சர்க்கரையை விட வெல்லம் மற்றும் கருப்பட்டியை தேர்வு செய்வது நல்லது. ஆனால், அதிக அளவில் எந்த இனிப்பையும் உட்கொள்ளக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

50 வயதுக்கு பிறகு மகிழ்ச்சியாக வாழ்வதற்கான தந்திரங்கள்! 

சளி பிரச்சினையை அடித்து விரட்டும் செலவு ரசம்! 

Dry Shampoo பயன்படுத்துவது நல்லதா? கெட்டதா?

நூற்றாண்டு கடந்தும் பெருமாளுக்கு சமர்ப்பிக்கப்படும் திருப்பதி குடையின் விசேஷம் தெரியுமா?

அது என்னது Index Fund? லாபம் மட்டுமே தரும் முதலீடு! 

SCROLL FOR NEXT