பெண்களே... எத்தனை பொறுப்புகள் இருந்தாலும் எவ்வளவு வேலைகள் இருந்தாலும் உங்களுக்கு என்று ஒரு நேரத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள்.
அது உங்கள் நேரம்.
உங்களுக்குப் பிடித்ததைச் செய்யுங்கள். ஆடுங்கள், பாடுங்கள், ஓவியம் வரையக் கற்றுக்கொள்ளுங்கள். வீணை வாசிக்க கற்றுக்கொள்ளுங்கள்... இப்படி என்னவெல்லாம் பிடிக்குமோ அத்தனையும் செய்யுங்கள். பிடித்தமான உறவுகளிடம்/நட்புகளிடம் பேசுங்கள்.
வாழ்க்கையை அனுபவியுங்கள். உங்களுக்கான இன்பத்தை மற்றவர்களுக்காக தொலைத்து விடாதீர்கள்.
நீங்கள் மகிழ்வாய் இருந்தால் மட்டுமே மற்றவர்களை மகிழ்விக்க முடியும்!
வாழ்க்கை ஒரே ஒரு முறைதான். அனுபவித்து வாழுங்கள்.
என் குடும்பத்துக்கு நான் தேவை. நான் இல்லை என்றால் என் வீடு தடுமாறி விடும் என்று நினைப்பது எல்லாம் நம் மனதின் அறியாமை.
யார் இறந்தாலும் அவரை சார்ந்து இருப்போர் சிறிது நாட்களில் அவரின்றி வாழ பழகி விடுவார்கள். இதுதான் யதார்த்தமான உண்மை. மற்றவர்களைப் பார்த்துக் கொள்வதுதான் தன் முதல் கடமை என்று உங்களை நீங்கள் கவனிக்காமல் விட்டு விடாதீர்கள்.