கே. எஸ். சுதாகர்
கே.எஸ்.சுதாகர் - தெல்லிப்பழை, யாழ்ப்பாணம், இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தற்போது அவுஸ்திரேலியாவில் வசித்து வருகின்றார். இலங்கை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பட்டதாரியான இவர்,1983 இல் இருந்து சிறுகதை, கவிதை, கட்டுரை, பத்தி எழுத்து, குறுநாவல், விமர்சனம் போன்ற துறைகளில் எழுதி வருகின்றார்.
முப்பதுக்கும் மேற்பட்ட சர்வதேச சிறுகதைப்போட்டிகளிலும், மூன்று குறுநாவல் போட்டிகளிலும் பரிசு பெற்றிருக்கின்றார்.
`எங்கே போகின்றோம்? (குமரன் பதிப்பகம்)’, `சென்றிடுவீர் எட்டுத்திக்கும்’ (மித்ர பதிப்பகம்), `பால்வண்ணம்’ (எழுத்து பிரசுரம்) சிறுகதைத் தொகுதிகளும், `வளர் காதல் இன்பம்’ (எழுத்து பிரசுரம்) குறுநாவலும் அச்சில் வெளிவந்திருக்கின்றன.