பட்ஜெட் விலை... ஐபோன் லுக்... 5 நிறங்களில் ஜொலிக்கும் ‘Realme Ai+ Pulse 2’!

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள ரியல்மி நிறுவனத்தின் Ai+ Pulse 2 மாடல் ஸ்மார்ட்போன் விற்பனையில் சந்தையை கலக்கி வருகிறது.
Realme Ai+ Pulse 2
Realme Ai+ Pulse 2image credit-gadgets360.com
Published on

ந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள ரியல்மி நிறுவனம், தனது அடுத்தகட்ட பாய்ச்சலுக்குத் தயாராகிவிட்டது. ஏற்கனவே சந்தையில் உள்ள ரியல்மி 16 சீரிஸ் மற்றும் பி சீரிஸ் வரிசையில், தற்போது ஏஐ பிளஸ் பல்ஸ் 2 மாடல் அனைவரையும் கவர்ந்து வருகிறது.

ரியல்மி இந்தியாவில் முன்னாள் சி.இ.ஓ.மாதவ் ஷெத் தொடங்கிய ஏ.ஐ.பிளஸ்(Ai Plus) நிறுவனம், தனது மூன்றாவது ஸ்மார்ட போனான பல்ஸ் 2 மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இது முன்னதாக வெளியான பல்ஸ் 1 மாடலின் அடுத்த பதிப்பாகும்.

ஏஐ பிளஸ் பல்ஸ் 2 (AI Plus Pulse 2) இரண்டு வகைகளில் விற்பனைக்கு வந்துள்ளது. 4 ஜி.பி.ரேம் மற்றும் 64 ஜி.பி. உள்நினைவக மாடல் ரூ.5,999 விலையில் அறிமுகமாகிறது. அதேபோல் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்நினைவக மாடல் ரூ.7,999 விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

எனினும் இந்த சிறப்பு விலைகள் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே பொருந்தும் என நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த வகையில் அதன் முதல் ஆன்லைன் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்து, சந்தையை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இதையும் படியுங்கள்:
சில்லரை விற்பனை மையங்களில் ஸ்மார்ட்போன் விற்பனை உயர்ந்தது! ஆச்சரியத்தில் ஃபிளிப்கார்ட், அமேசான்!
Realme Ai+ Pulse 2

முதல் வாய்ப்பைத் தவறவிட்ட வாடிக்கையாளர் களுக்காக, நிறுவனம் மற்றொரு வாய்ப்பை அறிவித்துள்ளது. அதாவது, AI Plus Pulse 2-ன் அடுத்த ஆன்லைன் விற்பனை நாளை (மார்ச் 19-ம்தேதி) நடைபெற உள்ளது. முதல் வாய்ப்பை தவறவிட்டவர்கள் இந்த வாய்ப்பை தவறவீடாதீர்கள் என்று நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. ஏனெனில் நவீன அம்சங்கள் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் மிகவும் குறைந்த விலையில் கிடைப்பது மிகவும் அரிது. குறைந்த விலை ஸ்மார்ட்போன் வாங்குபவர்களிடையே இந்தத் ஸ்மார்ட்போன் ஏற்கனவே குறிப்பிடத்தக்க ஆர்வத்தை உருவாக்கியுள்ளதால், வரவிருக்கும் விற்பனையின் போதும் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்றே வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சமீபகாலமாக, செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் கருவிகள், பெரிய திரைகள் மற்றும் சக்திவாய்ந்த பேட்டரிகள் போன்ற நவீன அம்சங்களைக் கொண்ட மலிவு விலை ஸ்மார்ட்போன்கள், குறைந்த விலை பிரிவில் தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலான பயனர்களை ஈர்த்து வருகின்றன.

அந்த வகையில் ஏஐ பிளஸ் பல்ஸ் 2 மாடல் அனைவரும் கவரும், AI Plus Pulse 2, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவுடன் கூடிய ஒரு பெரிய 6.745 இன்ச் HD Plus டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது பல்ஸ் 1-இன் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் பேனலை விட ஒரு மேம்படுத்தலாகும். இது கேமிங் அல்லது வீடியோக்களைப் பார்க்கும்போது மென்மையான ஸ்க்ரோலிங் மற்றும் சிறந்த பார்வை அனுபவத்தை உறுதியளிக்கிறது.

மேலும் இதில் சென்சார் 5MP-இலிருந்து 8MP யூனிட்டாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இது செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளின் தரத்தை இன்னும் சற்றுத் தெளிவாகக் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏஐ பிளஸ் பல்ஸ் 2 மாடலின் சிறப்பு அம்சங்களை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போனில் 6.74 அங்கல எச்.டி.பிளஸ் தொடுதிரை, யுனிசோக் டி7250 புராஸ்ஸர் வழங்கப்பட்டுள்ளது. 120 ஹட்ஸ் ரெப்ரெஷ் ரேட் மற்றும் 450 நிட்ஸ் பிரகாசத்துடன் வரும் இந்த திரை, பல்ஸ் 1 மாடலில் இருந்த 90 ஹட்ஸ் திரையை விட ஒரு மேம்பட்ட அப்கிரேடாகும்.

கேமரா வசதிகளில், 50MP கேமரா மற்றும் முன்புறத்தில் 8 மெகாபிக்சல் செல்பி கேமரா இடம் பெற்றுள்ளது. இது பல்ஸ் 1 மாடலில் இருந்த 5 மெகா பிக்சல் கேமராவை விட மேம்பட்டது.

இந்த ஃபோனில் 50 மெகாபிக்சல் கொண்ட, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் இயங்கும் இரட்டை பின்புற கேமரா அமைப்பு உள்ளது. இதன் மூலம் தெளிவான புகைப்படங்களும், சிறந்த வீடியோ காலிங் அனுபவமும் கிடைக்கும்.

பேட்டரியை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போனில் 6000 எம்.ஏ.எச் திறன் கொண்ட பெரிய பேட்டரி வழங்கப் பட்டுள்ளது. இது அடிக்கடி சார்ஜ் செய்ய வேண்டிய தேவையைக் குறைக்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. 18 வாட்ஸ் சார்ஜிங் வசதி உள்ளது. AI Plus Pulse 2ன் வடிவமைப்பு இளைஞர்களை கவனத்தை ஈர்க்கும் வகையில் உள்ளது. செயல்திறனை உறுதிசெய்ய, யூனிசாக் டி7250 பட்ஜெட் சிப்செட் இதில் பயன் படுத்தப்பட்டுள்ளது. இது 1.8GHz வரையிலான கிளாக் வேகத்துடன் கூடிய ஆக்டா-கோர் CPU-வைக் கொண்டுள்ளது. இது அன்றாட பயன்பாட்டிற்கு ஏற்ற செயல்திறனை வழங்கும்.

வாடிக்கையாளர்களை கவரும் வகையில் வெளிவந்துள்ள இந்த ஸ்மார்ட்போன் நீலம், ஊதா, இளஞ்சிவப்பு, பச்சை மற்றும் கருப்பு ஆகிய ஐந்து வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது.

இதையும் படியுங்கள்:
நவம்பர் மாதம் ரிலீஸாகும் டாப் 3 ஸ்மார்ட் போன்கள்!
Realme Ai+ Pulse 2

மென்பொருள் அம்சங்களில் இந்த போனானது ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான நெக்ஸ்ட் குவாண்டம் ஓ.எஸ். (NxtQuantum OS)15-ல் இயங்கும் நிலையில், இது ஒரு குறிப்பிடத்தக்க மேம்படாக பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com