ATM-ல் பணம் வராமலே கணக்கில் கழிந்ததா? இதோ உங்களுக்கான RBI-ன் அதிரடி விதிகள்!

பணத்தை இழக்காமல் திரும்பப் பெறுவது எப்படி? ரிசர்வ் வங்கியின் முக்கிய வழிகாட்டுதல்கள் மற்றும் நஷ்டஈடு விவரங்கள்!
ஏடிஎம் பணம் - ATM cash withdrawal failed,
ஏடிஎம் பணம் - ATM cash withdrawal failed,
A.N.ராகுல்

அனைவருக்கும் வணக்கம் என் பெயர் ராகுல் நான் ஒரு பொறியியல் பட்டதாரி, தமிழின் மீது உள்ள ஆர்வத்தால் எழுத்து துறையில் என்னை இணைத்துள்ளேன். என்னுடைய பொதுவான குறிக்கோள் நான் செய்யும் விஷயங்களால் மற்றவர்கள் பலனடைய வேண்டும் என்பதே, அதை என் தாய்மொழி மூலம் இந்த எழுத்து துறையின் வாயிலாக பங்காற்ற விரும்புகிறேன். ஆக வாசகர்களே நீங்கள் என் சேகரிப்புகளை பொழுதுபோக்கு, பொது அறிவு என்று எந்த கண்ணோட்டத்தில் பார்த்தாலும் இறுதியில் நீங்கள் பெரும் அந்த திருப்திகரமான உணர்வே, நான் எழுதுவதற்கு கிடைத்த பலன்.

Updated on: 

என்னோட ஃபிரண்ட் அடிக்கடி ஏடிஎம் மெஷின் பயன்படுத்திப் பணம் எடுக்குற வழக்கம் இருக்குறதால, இந்த விஷயம் எனக்கு கொஞ்ச நாள் முன்னாடிதான் அவங்க மூலமா தெரிஞ்சது.

ஒரு நாள் அவன் ஏடிஎம் முன்னாடி நின்னு, கார்டைப் போட்டுட்டுப் பணம் வரும்னு வெயிட் பண்ணும்போது... மெஷின்ல சத்தம் மட்டும்தான் கேட்டுட்டு இருக்கு…. பணம் வெளிய வரவே இல்லை!. கொஞ்ச நேரத்துல அவனோட மொபைலுக்கு பணம் எடுத்தாச்சுனு மெசேஜ் வந்தப்போ அவனுக்கு செம ஷாக்கா ஆகிடுச்சு.

சோ, இத படிக்கிற நீங்களும் அடிக்கடி ஏடிஎம் போறவங்களாவோ, இல்ல உங்க பிரண்ட்ஸுக்கோ இந்த நிலைமை கண்டிப்பா ஏதாச்சும் ஒரு நாள் நடந்திருக்கும். ஆனா, ரீசண்டா இதப்பத்தின ஆர்பிஐ (RBI) ரிசர்வ் பேங்க் வெப்சைட்ல படிச்சப்போதான் தெரிஞ்சது, நாம இதப்பத்தி பெருசா பயப்படத் தேவையில்லைனு!

நம்ம இந்திய ரிசர்வ் வங்கியோட (RBI) ஒரிஜினல் ரூல்ஸ்படி, இந்த மாதிரி சொதப்புர ட்ரான்ஸாக்ஷன்ஸ் (Transactions) எல்லாமே பெரிய பிரச்னை தராதுங்க; அதுக்கு RBI சில ‘செக்யூரிட்டிஸ் நமக்கு கொடுத்திருக்காங்க’.

ஆர்பிஐயோட டர்ன் அரவுண்ட் டைம் (TAT) ரூல்ஸ் படி, மெஷின்ல இருந்து பணம் வராம, நம்ம அக்கவுண்ட்ல மட்டும் பணம் கட் ஆகிடுச்சுன்னா. அந்த பணத்த T+5 நாட்களுக்குள் பேங்க் உங்க கணக்குல கண்டிப்பா திருப்பி அனுப்பிடனும். இங்க 'T' என்கிறது ‘பணம் போன’ தேதியைக் குறிக்கும்.

ஒருவேளை இந்த அஞ்சு நாளுக்குள்ள பேங்க் பணத்தைத் தராட்டி, லேட்டாகும் ஒவ்வொரு நாளுக்கும் எக்ஸ்ட்ரா ₹100 அவங்க (பேங்க்) தரணும், அதுவும் தானாவே அக்கவுண்ட்ல ஏறிடும். நாம இதுக்காக எந்த ‘கம்பளைண்ட்டும்’ பேங்க்ல எழுதி கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை.

ஏடிஎம் பணம் - ATM cash withdrawal failed,
ஏடிஎம் பணம் - ATM cash withdrawal failed,

இதற்குப் பின்னாடி ஒரு செம சுவாரஸ்யமான அறிவியல் டெக்னாலஜி ஒளிஞ்சிருக்கு. மெஷின்ல பணம் வெளிய வராட்டி, அதோட ‘உள்ளே இருக்குற சென்சார்கள், மற்றும் ஏடிஎம் பணம் வெளிய வந்ததான்னு காட்டுற டிஜிட்டல் ரெக்கார்டு’ மூலமா ஒரு மெசேஜ் தானாவே பேங்குக்கு ஆன்லைன்ல போயிடும்.

அதனால நாம பேங்குக்கு போய் கம்ப்ளைன்ட் பண்றதுக்கு முன்னாடியே, 'நமக்குக் காசு வரலை' அப்படிங்கிற விஷயம் ‘நாம யூஸ் பண்ண ஏடிஎம் மெஷினுக்கே’ ஆன்லைன்ல தெரிஞ்சிடும். இப்படி நமக்குத் தெரியாம டிஜிட்டலா பேக்ரவுண்ட்ல (background) நடக்குற இந்த ஆட்டோமேட்டிக் செக்கிங்தான் ‘காசு கொஞ்ச நாளில்’ ரிட்டர்ன் ஆகுறதுக்கு காரணம்.

கொஞ்சம் உஷாரா இருந்த நல்லது! கார்டைச் மெஷின்ல செருகுறதுக்கு முன்னாடி ‘மெஷின் ஸ்கிரீன் ரொம்ப மெதுவா வேலை செய்யுதா அல்லது ஏதாச்சும் ‘எரர்(Error) மெசேஜ்’ காட்டுதான்னு ஒரு நிமிஷம் கவனிங்க. நெட்வொர்க் சுதப்பலா இருந்தா பக்கத்துல இருக்குற வேற ஏடிஎம் போயிடுங்க.

இதோட ‘பேங்க்கோட இருக்குற ஏடிஎம் மெஷினை’ பயன்படுத்துறது இன்னமும் ரொம்ப சேஃப். பிளஸ், உங்க மொபைல் நம்பரை பேங்க் அக்கவுண்ட்டோட லிங்க்ல வச்சிருந்தா அலர்ட் மெசேஜ் உடனே வரும், அதுவே பின்னாடி பெரிய ஆதாரமா மாறும்; நீங்களும் ரசீது, ஏடிஎம் ஐடி, டைம் இதெல்லாம் நோட் பண்ணிக்கோங்க.

சோ, ஏடிஎம்ல காசு வராம சொதப்புனா டக்குனு டென்ஷன் ஆகாம கூலா இருங்க. நாம உஷாரா இருந்தா நம்ம கஷ்டப்பட்டு சம்பாதிச்ச காசுக்கு எந்த நஷ்டமும் வராது.

இதையும் படியுங்கள்:
புது வீடு கட்ட போறீங்களா? முதல்ல இந்த சோதனையை செய்யலைனா பட்ஜெட் எகிறிடும்!
ஏடிஎம் பணம் - ATM cash withdrawal failed,

இனிமே ஏடிஎம் கார்டை உள்ள போடுறதுக்கு முன்னாடி இந்த சின்ன விஷயங்களை மனசுல வச்சுக்கோங்க.

இதெல்லாம் ரொம்ப சின்ன டிப்ஸ் மாதிரி தெரிஞ்சாலும், அவசர நேரத்துல நமக்கு வர்ற தேவையில்லாத ‘மென்டல் ஸ்ட்ரெஸ்ஸை’ இது மொத்தமா குறைச்சிடும். இந்த மாதிரி யூஸ்ஃபுல்லான விபரங்களை உங்க பிரண்ட்ஸ், ஃபேமிலிக்கும் ஷேர் பண்ணுங்க. “சோ, சேப்டியான பேங்கிங் விஷயங்கள ஃபாலோ பண்ணா இந்த மாதிரி சிக்கலில் இருந்து ரொம்ப ஈஸியா தப்பிச்சிடலாம் மக்களே!"

இதையும் படியுங்கள்:
மக்களே உஷார்..! கமிஷன் பணத்திற்கு ஆசைப்பட்டால் நீங்க ஜெயிலுக்கு போவது உறுதி..!
ஏடிஎம் பணம் - ATM cash withdrawal failed,
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.

Reference:

logo
Kalki Online
kalkionline.com