வங்கியில் அதிக பணப்பரிவர்த்தனை செய்றீங்களா? வருமான வரி நோட்டீஸ் வராமல் தப்பிப்பது எப்படி?

ரொக்கமாக பணம் டெபாசிட் செய்வது மற்றும் எடுப்பது குறித்த புதிய வருமான வரி விதிகள் மற்றும் ஆவணங்கள்!
பணப்பரிவர்த்தனை விதிகள் - Income tax cash deposit limit
பணப்பரிவர்த்தனை விதிகள் - Income tax cash deposit limit
வெங்கடராமன் ராமசுப்ரமணியன்

Venkataraman Ramasubramanian (வெங்கடராமன் ராமசுப்ரமணியன்) பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் மூத்த தொழில்நுட்ப கட்டமைப்பாளராகப் பணிபுரிகிறார். தமிழில் இரண்டு புத்தகங்கள் எழுதியுள்ளார். தமிழ்க் கோராவில் சான்றமை எழுத்தாளர் விருது பெற்றவர். மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பியல் பொறியியலில் இளங்கலைப் பட்டம், வணிக மேலாண்மையில் முதுகலைப்பட்டம், யோகாவில் முதுகலைப்பட்டம் பெற்றவர். பல்வேறு சிறுகதைப் போட்டிகளில் பரிசு வென்றுள்ளார். வேதாத்திரி மகரிஷி மனவளக்கலையில் துணைப் பேராசிரியராக சேவை செய்து வருகிறார். எழுத்துக்கலை, தனிமனித நிதி, தமிழ் ஆர்வலர்.

Updated on: 

நீங்கள் வங்கியில் ரொக்கமாக பணம் செலுத்துவதால் ஏதேனும் பிரச்னை வரும் என்று நினைக்கிறீர்களா? ஒரு பிரச்னையும் வராது. அதனைப் பற்றி விரிவாக பார்ப்போம்.

அதிக மதிப்புடைய நிதி பரிவர்த்தனைகள் ஏன் வருமான வரித்துறைக்கு தெரிவிக்கப்படுகின்றன?

ஏப்ரல் 1, 2026 முதல் வருமான வரிச் சட்டம் 2025 மற்றும் வருமான வரி விதிகள் 2026 அமலுக்கு வந்தன. அதன்படி அதிக மதிப்புடைய பணப் பரிவர்த்தனைகள் வருமான வரித்துறைக்கு தெரிவிக்கப்படும். பணப்பரிவர்த்தனை விதிகள் அறிக்கை(Statement of Financial Transactions - SFT)

என்பது வருமான வரி அமைப்பில் தகவல் தெரிவிக்கும் ஒரு ஏற்பாடு.‌ அதன்படி குறிப்பிட்ட நிறுவனங்கள், குறிப்பிட்ட வகையான நிதி பரிவர்த்தனைகளை வருமான வரி துறைக்கு தெரிவிக்கும். இந்தத் தகவல்கள் தனிநபர் வருமான வரித் தாக்கல் செய்யும்போது வருமான வரித் தாக்கல் நிதிப் பரிவர்த்தனைகளை ஒத்து உள்ளதா என்று சரிபார்க்கப்படும். அதன் மூலம் வரி ஏய்ப்பு தடுக்கப்படும்.

எத்தகைய அதிக மதிப்புடைய நிதிப் பரிவர்த்தனைகள் வருமான வரித்துறைக்கு தெரிவிக்கப்படும் ?

அதிக மதிப்புடைய நிதிப் பரிவர்த்தனைகள் பல்வேறு வகைகள் உள்ளன. அவை பின்வருமாறு.

அதிகமாக ரொக்கமாக பணத்தை வங்கியில் போடுவது.

அதிகமாக பணத்தை வங்கியின் வைப்பு நிதியில் போடுவது.

அதிகமான பணத்தைக் கடன் அட்டை பரிவர்த்தனை களுக்காக கட்டுவது.

அதிக மதிப்புடைய சொத்து வாங்குவது.

அதிக மதிப்புடைய பங்குகள், கடன் பத்திரங்கள், பரஸ்பர நிதிகள் போன்றவற்றை வாங்குவது.

சம்பந்தப்பட்ட நிறுவனங்களான வங்கிகள், பரஸ்பரநிதி நிறுவனங்கள் போன்றவை இந்த அதிக மதிப்புடைய நிதிப் பரிவர்த்தனைகளை வருமானவரித் துறைக்கு தெரிவிக்கும்.

இதையும் படியுங்கள்:
தவறான UPI கணக்கிற்குப் பணம் போய்விட்டதா? அதைத் திரும்பப்பெற இதோ எளிய வழிகள்!
பணப்பரிவர்த்தனை விதிகள் - Income tax cash deposit limit

நமது கட்டுரையின் தலைப்பான, வங்கி சார்ந்த அதிக பணப் பரிவர்த்தனைகள் சார்ந்த தகவல் தெரிவிப்புகளைப் பார்ப்போம்.

சேமிப்புக் கணக்கில் ஒரு நிதி ஆண்டில் மொத்தமாக 10 லட்சம் அல்லது அதற்கு மேலாக ரொக்கமாக பணத்தை போடுவது (பான் எண் இருந்தால்), 5 லட்சம் அல்லது அதற்கு மேலாக ரொக்கமாக பணத்தைப் போடுவது (பான் எண் இல்லாமல் இருந்தால்.)

நடப்புக் கணக்கில் ஒரு நிதி ஆண்டில் மொத்தமாக 50 லட்சம் அல்லது அதற்கு மேலாக ரொக்கமாக பணத்தைப் போடுவது அல்லது 50 லட்சம் அல்லது அதற்கு மேலாக ரொக்கமாக பணத்தை எடுப்பது.

புதிய வைப்பு நிதிகளை ஒரு நிதி ஆண்டில் 10 லட்சம் அல்லது அதற்கு மேலாக தொடங்குவது.

வங்கியின் வரைவோலை (bank draft), வங்கியின் காசோலை (Banker's cheque), கொடுப்பனவு ஆணை(payment order) 10 லட்சம் அல்லது அதற்கு மேலாக ஒரு நிதி ஆண்டில் ரொக்கமாக வாங்குவது.

இந்தத் தகவல்கள் வருமான வரி விதி 114E படி பகுதி 285BA படி வருமான வரித் துறைக்கு தெரிவிக்கப்படும். இவ்வாறு தெரிவிப்பதற்கு படிவம் 61A பயன்படுத்தப்படும்.

ஒருவர் வருமான வரியை ஏய்க்க விரும்பி ரொக்க முதலீட்டை ஒரே தடவையில் செய்யாமல் பிரித்து பிரித்து செய்தாலும் கூட, அது ஒரு நிதி ஆண்டிற்கு மொத்தமாக கணக்கிடப்பட்டு வருமான வரித்துறைக்கு தெரிவிக்கப்படும்.

பணப்பரிவர்த்தனை விதிகள் - Income tax cash deposit limit
பணப்பரிவர்த்தனை விதிகள் - Income tax cash deposit limit

அதிக மதிப்புடைய வங்கிப் பரிவர்த்தனைகள் செய்தால் ஏதேனும் பிரச்னை வருமா?

இவ்வாறு குறிப்பிட்ட தொகையைத்தாண்டி முதலீடு செய்வதைக் குறித்து பயப்படத் தேவையில்லை. அரசாங்கம் இத்தகைய அதிக மதிப்புடைய முதலீடுகளைத் தடுக்கவில்லை. ஆனால், இத்தகைய அதிக மதிப்புடைய முதலீடுகள் சார்ந்த விபரங்களை ஒருவர் சரியாக வைத்திருக்க வேண்டும். அந்த அதிக பணத்தின் முகாந்திரம் சட்டப்படி சரியாகவும், சரியாக ஆவணப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

உதாரணமாக, 20 லட்ச ரூபாய் மதிப்புடைய வைப்பு நிதி முதலீடு பல்வேறு காரணங்களால் வந்திருக்கலாம்.

சொத்து விற்பனை ஆவணம்.

வங்கியிலிருந்து பணம் எடுத்ததற்கான சீட்டு(Withdrawal slip).

முன்பு வந்த தெரிவிக்கப்பட்ட வருமானம்.

பரிசாக வந்த தொகை.

ஒரு நிதி ஆண்டிற்கான வருமானங்கள் வருடாந்திர வருமான அறிக்கையில் (Annual Income Statement - AIS) வருமான வரித் துறையால் குறிப்பிடப்படும். ஒருவர் வருமான வரித்தாக்கல் செய்யும்பொழுது அவரது வருடாந்திர வருமானம் வருடாந்திர வருமான அறிக்கை வருமானத்தை ஒத்து இல்லை என்றால் வருமான வரித்துறை அவருக்கு அறிவிப்புக் கடிதத்தை(Notice) வழங்கும்.

இதையும் படியுங்கள்:
வங்கிக்கணக்கில் 10 லட்சம் டெபாசிட் செய்தால் ஐடி நோட்டீஸ் வருமா? வருமான வரித்துறையின் புதிய விதிகள்!
பணப்பரிவர்த்தனை விதிகள் - Income tax cash deposit limit

எனவே, நாம் அதிகமான மதிப்புடைய பணப் பரிவர்த்தனைகளைத் தைரியமாக செய்யலாம். அதற்கான முகாந்திரங்களை நாம் நம் வசம் வைத்திருக்க வேண்டும். மேலும், வருமான வரித் தாக்கலின் பொழுது நமது வருமானம் அதனை ஒட்டி இருக்கும்பொழுது நாம் நமது வரியைச் செலுத்த ஏதுவாக இருக்கும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.

Reference:

logo
Kalki Online
kalkionline.com