வங்கி செக்கில் இருக்கும் ரகசிய பாதுகாப்பு அம்சங்கள்: CTS-2010 செக் பேப்பர் மோசடியை தடுப்பது எப்படி?

உங்க பேங்க் செக் பேப்பருக்கு பின்னாடி இவ்வளவு பெரிய டாப் லெவல் டெக்னாலஜி ஒளிஞ்சிருக்கா?
வங்கி செக் - Bank Cheque Security
வங்கி செக் - Bank Cheque Security
A.N.ராகுல்

A.N.ராகுல், பொறியியல் பட்டதாரி. கல்கி ஆன்லைன் அறிமுகப்படுத்திய வளர்ந்து வரும் இளம் எழுத்தாளர். தமிழின் மீதுள்ள ஆர்வத்தால் எழுத்துத் துறையில் இணைந்த இவர், பொழுதுபோக்கு மற்றும் பொது அறிவு சார்ந்த பயனுள்ள தகவல்களைத் தாய்மொழியில் கல்கி ஆன்லைன் வாசகர்களுக்குத் தொகுத்து வழங்கி வருகிறார்.

Updated on: 

சென்னை டூ கன்னியாகுமரி வரைக்கும் இருக்குற எல்லாரும் மளமளன்னு யுபிஐ (UPI), கூகுள் பே, நெட் பேங்கிங்னு டிஜிட்டல் மோடுக்கு மாறிட்டாலும், இன்னும் பெரிய பிசினஸ் டீல்களுக்கும், முக்கியமான பணம் கொடுக்கல் வாங்கலுக்கும் பேங்க் செக் பேப்பர் (Cheque leaf) தான் என்னைக்குமே கெத்து.

ஆனா, நம்ம அன்றாட வாழ்க்கையில் கையில் வச்சிருக்குற இந்த சாதாரண செக் பேப்பர் பின்னாடி எவ்வளவு பெரிய ‘டாப் லெவல் பாதுகாப்பு டெக்னாலஜி’ ஒளிஞ்சிருக்குன்னு உங்களுக்குத் தெரியுமா? நம்ம இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கொண்டு வந்த ‘CTS-2010 விதிமுறைப்படி’, பெரிய அளவிலான பண மோசடிகளையும், டூப்ளிகேட் செக்குகளையும் ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்த பல அதிரடி வித்தைகள் இந்த ஒரு சின்ன பேப்பருக்குள்ள இருக்கு.

கண்ணுக்குத் தெரியாத அந்தப் பாதுகாப்பு விஷயங்கள்:

நம்ம செக் பேப்பரை நல்லா வெளிச்சத்துல தூக்கிப் பார்த்தா "CTS-INDIA" அப்படிங்குற வாட்டர்மார்க் (Watermark) பளிச்சுன்னு தெரியும். செக் பேப்பர் தயாரிக்கிற தொழிற்சாலையிலேயே இந்த வாட்டர் மார்க்கை வச்சிடுவாங்க, அதனால இதை சாதாரணமா ஜெராக்ஸ் எடுக்கவே முடியாது.

அடுத்தது, "VOID Pantograph" அப்படின்னு ஒரு தரமான தொழில்நுட்பம். சும்மா பார்க்கும்போது சாதாரணமாக தெரியும் இந்த செக்கை யாராவது கலர் ஜெராக்ஸோ, இல்ல இன்னும் நல்ல தெளிவான ஸ்கேனோ பண்ண நினைச்சா, அந்த ஜெராக்ஸில் "VOID" அல்லது "COPY" அப்படின்னு சீக்ரெட்டா இருக்குற வார்த்தை பெருசா வந்து விழுந்துடும்.

அதேபோல், இந்த வங்கி செக் எல்லாம் ‘கெமிக்கலுக்கு ரியாக்ட் ஆகுற மாதிரி’ (Chemical sensitivity) கொண்ட ஸ்பெஷல் பேப்பரால் செய்யப்படுது. யாராவது பேனா இங்க்கை அழிக்க ஆசிட், ப்ளீச் அல்லது கெமிக்கல்ஸை பயன்படுத்தினால், அந்த இடமே கலர் மாறி மோசடியை காட்டி கொடுத்துடும். அதுமட்டும் இல்லாம, வங்கியோட லோகோ கண்ணுக்குத் தெரியாத UV மையால (Invisible Ink) அச்சிடப்பட்டிருக்கும், இதை UV லைட்ல (UV Light) காட்டும்போது மட்டும்தான் பார்க்க முடியும்.

வங்கி செக் - Bank Cheque Security
வங்கி செக் - Bank Cheque Security

இது போதுமா? இல்ல இன்னும் நாம அலர்ட்டா இருக்கணுமா?

நிச்சயம் நாம எப்போதுமே ரொம்ப அலர்ட்டா இருக்கணும்! பேங்க் என்னதான் ஹை-டெக் பாதுகாப்பு கொடுத்தாலும், நாம அவசரப்பட்டு கையெழுத்து போட்ட பிளாங்க் செக் (Blank cheque) வச்சிருந்தாலோ, இல்ல பாதுகாப்பில்லாமல் தெரியாத யார்கிட்டயாவது கொடுத்தாலோ ஈஸியா ஏமாந்துடுவோம்.

தொழில்நுட்பம் இந்த பேப்பரைக் காப்பாத்தும், ஆனா நாமதான் நம்ம அக்கவுண்டில் இருக்கும் பணத்த பத்திரமா பாத்துக்கணும்.

எல்லா பேங்க் செக்கும் ஒரே மாதிரிதானா?

ஆமாங்க, இந்தியாவில் இருக்குற எல்லா கமர்ஷியல், கூட்டுறவு பேங்குகள் இந்த CTS-2010 பாதுகாப்பு விதிகளை கட்டாயம் பின்பற்றணும். ஆனா, பேங்க் தங்களோட சொந்த பிராண்டிங்குக்காக (Branding) எக்ஸ்ட்ரா பாதுகாப்பு விஷயங்களையோ, மைக்ரோ லெட்டரிங் (Micro-lettering) எனப்படும் கண்ணுக்குத் தெரியாத ‘சிறு எழுத்துக்களையோ’ சேர்த்துக்கலாம்.

இதையும் படியுங்கள்:
பான் கார்டு 10 இலக்க எண்ணில் இருக்கும் ரகசியம்: 4வது எழுத்து என்ன சொல்கிறது?
வங்கி செக் - Bank Cheque Security

உங்களுக்குத் தெரியாத சுவாரஸ்ய உண்மை!

இப்ப நீங்க பேங்க்ல போடுற செக், பழைய காலம் மாதிரி அந்தந்த பேங்க் பிராஞ்சுக்கு வண்டியிலயோ, கூரியர்லயோ நேரடியா போகாதுங்க. நீங்க தந்த செக்கை அப்படியே கட் பண்ணிட்டு (Cheque Truncation System), அதோட தெளிவான டிஜிட்டல் இமேஜை மட்டும்தான் நெட் மூலமா பேங்க்குக்கு அனுப்பி கிளியர் பண்றாங்க.

இந்தத் தகவல்கள் எல்லாம் எவ்ளோ நிஜம்?

சும்மா வாட்ஸ் அப் குரூப்ல வர்ற வதந்தியை வச்சு நான் இதை எழுதலைங்க! இதெல்லாம் 100% உண்மை. ஏன்னா, நம்ம ரிசர்வ் பேங்க் வெப்சைட்ல (rbi.org.in) இருக்குற ஒரிஜினல் தகவல்களையும், ஜேபி மோர்கன் பேங்க் (jpmorgan.com) சொன்ன செக்யூரிட்டி டிப்ஸையும் வச்சுத்தான் இதை எழுதியிருக்கேன். டக்ஸ் குரு (taxguru.in), ஐஆர்டிஎஸ்ஏ (irtsa.net) போன்ற பெரிய வெப்சைட்ல இருக்குற கவர்மெண்ட் ரூல்ஸ் எல்லாமே இதுக்கு ஒரு நல்ல புரூஃப் (Proof). அதனால் உங்களுக்கு

இன்னும் தெளிவா தகவல் வேணும் நா இந்த வெப்சைட்களில் போய் பார்த்து தெரிஞ்சிக்கோங்க.

இந்த தகவல்களை விரிவாக அறிந்துகொள்வதன் மூலம், உங்கள் வங்கிக் கணக்கின் பாதுகாப்பை உறுதிசெய்வதோடு, போலியான செக் மோசடிகள் மற்றும் பண இழப்புகளிலிருந்து உங்களையும் உங்கள் பிசினஸையும் முழுமையாகப் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

இதையும் படியுங்கள்:
UPI புதிய கட்டணம்: உங்க அக்கவுண்டில் இருந்து பணம் பிடிப்பார்களா? NPCI அளித்த நிம்மதி விளக்கம்!
வங்கி செக் - Bank Cheque Security