பான் கார்டு 10 இலக்க எண்ணில் இருக்கும் ரகசியம்: 4வது எழுத்து என்ன சொல்கிறது?

உங்கள் பான் கார்டில் ஒளிந்திருக்கும் முக்கிய குறியீடுகள் மற்றும் அதன் சுவாரஸ்யமான பின்னணி!
பான் கார்டு - PAN Card Number
பான் கார்டு - PAN Card Number
A.N.ராகுல்

அனைவருக்கும் வணக்கம் என் பெயர் ராகுல் நான் ஒரு பொறியியல் பட்டதாரி, தமிழின் மீது உள்ள ஆர்வத்தால் எழுத்து துறையில் என்னை இணைத்துள்ளேன். என்னுடைய பொதுவான குறிக்கோள் நான் செய்யும் விஷயங்களால் மற்றவர்கள் பலனடைய வேண்டும் என்பதே, அதை என் தாய்மொழி மூலம் இந்த எழுத்து துறையின் வாயிலாக பங்காற்ற விரும்புகிறேன். ஆக வாசகர்களே நீங்கள் என் சேகரிப்புகளை பொழுதுபோக்கு, பொது அறிவு என்று எந்த கண்ணோட்டத்தில் பார்த்தாலும் இறுதியில் நீங்கள் பெரும் அந்த திருப்திகரமான உணர்வே, நான் எழுதுவதற்கு கிடைத்த பலன்.

Updated on

க்கட்டுரை பான் கார்டு ஒரு சாதாரண அடையாள அட்டை அல்ல, வருமான வரித்துறையின் முக்கிய பாதுகாப்பு கருவி என்பதை விளக்குகிறது. முதல் மூன்று எழுத்துகள் உள்நாட்டு சீரிஸ், நான்காவது எழுத்து தனிநபர், நிறுவனம், அரசு போன்ற சட்ட நிலையை குறிக்கும். ஐந்தாவது எழுத்து பெயருடன் இணைந்து, அடுத்த நான்கு எண்கள் யூனிக் நம்பராகவும், கடைசி எழுத்து செக்சம் மூலம் போலி கார்டுகளைத் தடுக்க உதவுகிறது.

எனக்கு, உங்களுக்கு எப்படி ஆதார் கார்டு இந்தியர் என்று அடையாளத்தையும், பல வசதிகளை பெற ஹெல்ப்பா இருக்கோ; சேம் அதே மாறிதான் இந்த பான் கார்டும் இருக்கு. சாதாரணமா ஒரு பான் கார்டு வச்சி ஒருவரின் வருமானம், பேங்க் மூலம் அல்லது அவரின் பெயரில் நடக்கும் பண புழக்கங்கள்;

இந்த பான் கார்டு வச்சி தெரிஞ்சிக்கலாம். ஒரே லைன்ல சொல்லனும்னா ‘நீ பணம் சம்பாதிக்கிறியா, நீ பான் கார்டு கட்டாயம் வெச்சிகினும்’. சரி இந்த கார்ட சும்மா வச்சுக்கிட்டு இருந்த மட்டும் போதுமா? அதில் என்னென்ன இருக்குன்னு தெரிஞ்சிக்க வேண்டாமா? அப்படியென்ன அந்த 10 டிஜிட்டில் ரகசியம் இருக்கிறது?

நம்ம எல்லார்கிட்டயும் 'பான் கார்டு' (PAN Card) இருக்கும். பேங்க் அக்கவுண்ட் ஓபன் பண்றதுல இருந்து, வருமான வரி கட்டுறது வரைக்கும் இந்த கார்டு ரொம்ப முக்கியம்னு நமக்குத் தெரியும்.

ஆனா, அந்த கார்டுல பிரிண்ட் பண்ணி இருக்குற எழுத்துக்களுக்கும், நம்பர்களுக்கும் பின்னாடி ஒரு செம லாஜிக் இருக்கு; அது எத்தனை பேருக்குத் தெரியும்? அது சும்மா ஏதோ டைம் பாஸுக்கு போடப்பட்ட நம்பர் இல்ல. அதுல இருக்குற ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு அர்த்தம் இருக்கு. அது என்னன்னு இப்ப பார்ப்போம்!

இதையும் படியுங்கள்:
பங்குச்சந்தையில் 'காப்பி கேட்' முதலீடா? கிணற்றில் குதிப்பதற்குச் சமம்!
பான் கார்டு - PAN Card Number

முதல் 3 எழுத்துக்கள் (The Alpha Series):

பான் நம்பரோட முதல் மூணு எழுத்துக்கள் (உதாரணமா ABC, FGH) இப்படி ABCD வரிசையில இருக்கும். வருமான வரித்துறை தங்களோட வசதிக்காக உள்நாட்டில பயன்படுத்துற ஒரு சீரிஸ்தான் இது. இதுக்கும் உங்களோட ஊருக்கும் அல்லது வருமானத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

பான் கார்டு - PAN Card Number
பான் கார்டு - PAN Card Number

4-வது எழுத்து, நீங்க யார்? (The Status Character):

பான் கார்டுல இருக்குற நாலாவது எழுத்து ரொம்பவே முக்கியமானது. ஏன்னா, இந்த கார்டு யாருடையது, அவங்களோட சட்டப்பூர்வமான தகுதி என்னங்கிறதை இதுதான் சொல்லும்:

● P - தனிநபர்கள் (Individuals)

● C - நிறுவனங்கள் (Companies)

● H - இந்து கூட்டுக் குடும்பம் (HUF)

● T - அறக்கட்டளைகள் (Trusts)

● G - அரசு அமைப்புகள் (Government)

நீங்க வேணும்னா இப்போவே உங்க பான் கார்டை எடுத்துப் பாருங்க, அதுல 4-வது எழுத்து கண்டிப்பா 'P' (Person/Individual) என்றுதான் இருக்கும்!

5-வது எழுத்து - உங்களோட அடையாளம் (The Name Connector):

ஐந்தாவது எழுத்து உங்க பேரோட கனெக்ட் ஆனது. நீங்க ஒரு தனிநபரா இருந்தா, உங்களோட 'இனிஷியல்'(Initial) அல்லது குடும்பப் பெயரின் (Surname/Last Name) உடைய முதல் எழுத்துதான் இங்கே வரும். உதாரணமா, உங்க பேரு "குமார்" (Kumar) அப்படின்னா, காடோட 5-வது எழுத்து "K" என்று இருக்கும்.

இதுவே ஒரு கம்பெனியா இருந்தா, அந்த கம்பெனி பேரோட முதல் எழுத்து இங்கே வரும். வரி சமந்தமான விஷயங்கள(Tax) ஃபைல் பண்ணும்போது எந்த தப்பும் நடந்துடக் கூடாதுங்கிறதுக்காக, இந்த சூப்பர் ட்ரிக்கை வெச்சிருக்காங்க.

6 முதல் 9 வரை இருக்கும் எண்கள்:

அடுத்த நாலு டிஜிட் (6-வது எழுத்துல இருந்து 9-வது வரை) வெறும் நம்பர்ஸ்தான். 0001ல இருந்து 9999 வரைக்கும் இருக்குற நம்பர்ஸ ஒவ்வொரு கார்டுக்கும் தனித்துவமா (Unique) அலாட் பண்ணுவாங்க.

10-வது எழுத்து - டிஜிட்டல் கைரேகை (The Check Digit):

கடைசி எழுத்து ஒரு 'செக்சம்' (Checksum) ஃபார்முலா, அதாவது ஒரு Maths கால்குலேஷன் மூலமா உருவாக்கப்படுற டிஜிட். இதுக்கு முன்னாடி இருக்குற 9 எழுத்துக்களையும் செக் பண்ணி, அந்த கார்டு ஒரிஜினல்தானா அல்லது டூப்ளிகேட்டான்னு கண்டுபிடிக்க இது உதவும். ஒருத்தரோட பான் கார்டை இன்னொருத்தர் ஈஸியா ஃபோர்ஜரி (Fraud) பண்ணிடக் கூடாதுங்கிறதுக்காக இந்த டிஜிட்டல் லாக்கை வெச்சிருக்காங்க.

இதையும் படியுங்கள்:
மாதக் கடைசியில் கடன் வாங்காம வாழணுமா? இந்த 7 எளிய வழிகளை ட்ரை பண்ணுங்க!
பான் கார்டு - PAN Card Number

ஏன் இது இவ்வளவு முக்கியம்?

இந்திய வருமான வரிச் சட்டம் பிரிவு 139A இன் படி, இந்த பான் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது சும்மா ஒரு பிளாஸ்டிக் கார்டு இல்ல, பயங்கரமான கம்ப்யூட்டர் டெக்னாலஜி மூலமா டிசைன் பண்ணப்பட்ட ஒரு செக்யூரிட்டி சிஸ்டம் போன்றது.

உங்களுக்கு பான் கார்டு பத்தின இன்னும் விரிவான மற்றும் ஆதாரப்பூர்வமான தகவல்கள் வேணும்னா, டாக்ஸ் குரு (Tax Guru), டாக்ஸ் ஸ்கேன் (Taxscan), தி கரண்ட் இந்தியா (The Current India) போன்ற பேமஸ் ஆனா வெப்சைட்ல, சிஏ (CA) நிபுணர்கள் தெளிவா எழுதிய கட்டுரைகளைப் படித்துத் நீங்க தெரிஞ்சு கொள்ளலாம்.

இந்த வழிகாட்டியைப் படிப்பதன் மூலம் உங்கள் பான் எண்ணில் உள்ள ஒவ்வொரு குறியீட்டின் துல்லியமான அர்த்தத்தையும் கண்டறிந்து, வரி தாக்கல் மற்றும் நிதிச் செயல்பாடுகளின்போது தவறுகள் நேராமல் விழிப்புணர்வோடு செயல்பட முடியும்.

இதையும் படியுங்கள்:
கிரெடிட் கார்டு வலையா? உங்கள் பணத்தை பாதுகாக்கும் கடன் மேலாண்மை வழிகாட்டி!
பான் கார்டு - PAN Card Number
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.

Reference:

logo
Kalki Online
kalkionline.com