எஃப்.டி வட்டிக்கு இனி TDS பிடிக்கக்கூடாதா? 15G, 15H ரத்து: புதிய Form 121 பற்றி தெரியுமா?

வங்கி வைப்பு நிதி வட்டிக்கு வரி பிடித்தம் செய்யப்படாமல் தப்பிக்க ஏப்ரல் மாதத்திலேயே இதைச் செய்யுங்கள்!
Form 121 - Income Tax Form 121
Form 121 - Income Tax Form 121
ஷாராஜ்

இலக்கியவாதி மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர். 6 சிறுகதைத் தொகுப்புகள், 5 நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு, மூன்று சிறார் கதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். நாவல் போட்டிகளிலும், ஓவியப் போட்டிகளிலும் ஓரிரு பரிசுகள் / விருதுகள் / பதக்கங்கள் பெற்றுள்ளார். இவரது உலக சிறுவர் கதைகள் மற்றும் நாட்டுப்புறக் கதைகள், 2024-ல், ஓர் அங்குலச் சிறுவன், அமேஸான் கானகத்தில் வழி மறந்த சிறுமி, ஆகாயத்தைத் தின்ற மனிதர்கள் ஆகிய மூன்று நூல்களாக வெளியாகியுள்ளன. இவ் வரிசையில் இன்னும் சில தொகுப்புகள் வரவுள்ளன.

Updated on: 

நடுத்தர மற்றும் மேல் நடுத்தர வர்க்க மக்களின் பாதுகாப்பான சேமிப்பு மற்றும் முதலீட்டுத் தேர்வுகளில் எப்போதும் முதலிடம் வகிப்பது வங்கிகளில் மேற்கொள்ளப்படும் 'ஃபிக்சட் டெபாசிட்' (Fixed Deposit - FD) எனப்படும் நிரந்தர வைப்பு நிதியாகும். பங்குச்சந்தை போன்ற அபாயங்கள் எதுவும் இன்றி, நிலையான வட்டி வருமானத்தைத் தருவதால், பெரும்பாலானோர் தங்கள் பணத்தை இதில் முதலீடு செய்கின்றனர்.

ஆனால், இந்த வைப்பு நிதியிலிருந்து கிடைக்கும் வட்டி வருமானத்திற்கு வங்கிகள் 'டிடிஎஸ்' (TDS - Tax Deducted at Source) எனப்படுகிற, ‘மூலத்தில் வரி பிடித்தம்’ செய்யும். உங்கள் மொத்த வருமானம் வரி செலுத்தும் வரம்பிற்குள் வரவில்லை என்றாலும்கூட, சில நேரங்களில் இந்த டிடிஎஸ் பிடிக்கப்பட்டுவிடும்.

டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படுவதற்கான வரம்புகள்

வங்கியிலிருக்கும் உங்களின் நிரந்தர வைப்பு நிதிக்கு வழங்கப்படும் வட்டி வருமானம் ஒரு குறிப்பிட்ட தொகையைத் தாண்டும்போது, வருமான வரிச் சட்டத்தின்படி வங்கியே அந்த வட்டித் தொகையிலிருந்து குறிப்பிட்ட சதவீதத்தை வரியாகப் பிடித்து அரசுக்குச் செலுத்தும். இதற்கான வரம்புகள் வயதைப் பொறுத்து மாறுபடுகின்றன.

60 வயதிற்கு உட்பட்ட தனிநபர்களுக்கு: ஒரு நிதியாண்டில் ஒரே வங்கியில் பெறப்படும் மொத்த எஃப்.டி வட்டி வருமானம் ரூ.50,000-ஐத் தாண்டும்போது 10% டிடிஎஸ் பிடிக்கப்படும். (முன்பு ரூ.40,000/- என்ற வரம்பில் இருந்த இது தற்போது ரூ.10,000/- கூட்டப்பட்டுள்ளது).

60 வயதைக் கடந்த மூத்த குடிமக்களுக்கு: ஒரு நிதியாண்டில் பெறப்படும் மொத்த எஃப்.டி வட்டி வருமானம் ரூ.1,00,000-ஐத் தாண்டும்போது 10% டிடிஎஸ் பிடிக்கப்படும். (முன்பு ரூ.50,000/- என்ற வரம்பில் இருந்த இது தற்போது ரூ. ஒரு லட்சம் என வரம்பு இரட்டிப்பாக உயர்த்தப்பட்டுள்ளது. இது மூத்த குடிமக்களுக்குப் பெரும் நிவாரணம்).

வங்கிக் கணக்கில் உங்கள் பான் கார்டு (PAN) விவரங்களை இணைக்கத் தவறினால், 10 சதவீதத்திற்குப் பதிலாக 20 சதவீதம் வரை அதிகப்படியான டிடிஎஸ் பிடிக்கப்படும்/படலாம்.

Form 121 - Income Tax Form 121
Form 121 - Income Tax Form 121

எப்போது டிடிஎஸ் பிடிக்கப்படாது?

உங்கள் வட்டி வருமானம் மேலே குறிப்பிடப்பட்ட வரம்புகளுக்குள் (ரூ.50,000 அல்லது மூத்த குடிமக்களுக்கு ரூ.1,00,000) இருந்தால் வங்கிகள் டிடிஎஸ் பிடிக்காது. அதுமட்டுமின்றி, உங்கள் மொத்த ஆண்டு வருமானமே வருமான வரி விலக்கு வரம்பிற்குள் இருக்கும்பட்சத்தில், உங்களுக்கு எந்த வரிப் பொறுப்பும் இல்லை என்பதால் டிடிஎஸ் பிடிக்கப்பட வேண்டிய அவசியமில்லை.

இருப்பினும், வங்கி அதிகாரிகளுக்கு உங்கள் மொத்த வருமானம் எவ்வளவு என்பது தெரியாது என்பதால், வட்டித் தொகை வரம்பைத் தாண்டும்போது அவர்கள் தானாகவே டிடிஎஸ் பிடித்துவிடுவார்கள். இந்தத் தவறான வரிப் பிடித்தத்தைத் தவிர்க்கவே சுய உறுதியளிப்புப் படிவம் பயன்படுகிறது.

பழைய படிவங்களின் முடிவு - புதிய Form 121 அறிமுகம்

கடந்த காலங்களில் 60 வயதிற்கு உட்பட்டவர்கள் 'Form 15G' படிவத்தையும், மூத்த குடிமக்கள் 'Form 15H' படிவத்தையும் சமர்ப்பித்து வந்தனர். ஆனால், ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வந்த புதிய வருமான வரிச் சட்டத்தின் கீழ், Form 15G மற்றும் Form 15H ஆகிய இரண்டு படிவங்களும் முழுமையாக நிறுத்தப்பட்டுவிட்டன.

அவற்றிற்குப் பதிலாக, அனைத்துத் தரப்பினருக்கும் 'Form 121' என்ற புதிய, ஒரே ஒருங்கிணைந்த படிவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 60 வயதிற்கு உட்பட்டோர், மூத்த குடிமக்கள் மற்றும் இந்து கூட்டு குடும்பத்தினர் (HUF) என அனைவரும் இனி இந்த Form 121 படிவத்தையே வங்கி நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். "

இதையும் படியுங்கள்:
பான் கார்டு 10 இலக்க எண்ணில் இருக்கும் ரகசியம்: 4வது எழுத்து என்ன சொல்கிறது?
Form 121 - Income Tax Form 121

எனக்கு இந்த நிதியாண்டில் கிடைக்கும் மொத்த வருமானம் வரி செலுத்தும் வரம்பிற்குள் வரவில்லை; எனவே என் வட்டி வருமானத்தில் டிடிஎஸ் பிடிக்க வேண்டாம்" என வங்கிக்குத் தெரிவிக்கும் சுயஉறுதிமொழிப் படிவமாக இது செயல்படுகிறது.

Form 121 படிவத்தை எப்போது மற்றும் எங்கே கொடுக்க வேண்டும்?

இந்தப் படிவத்தை எப்போது சமர்ப்பிக்க வேண்டும் என்பது மிக முக்கியமான கட்டமாகும். பலரும் நிதியாண்டின் இறுதியில் அல்லது வங்கி டிடிஎஸ் பிடித்தம் செய்த பிறகு இதைக் கொடுக்க முயல்கிறார்கள். அது தவறான அணுகுமுறை.

ஒவ்வொரு நிதியாண்டின் தொடக்கத்திலும், அதாவது ஏப்ரல் மாதத்திலேயே Form 121 படிவத்தை அந்தந்த வங்கிக் கிளையில் சமர்ப்பிக்க வேண்டும். நிதியாண்டின் இடையில் புதிதாக எஃப்.டி கணக்குத் தொடங்கினால், கணக்குத் தொடங்கும் அன்றே இதைக் கொடுத்துவிடுவது நல்லது.

வங்கி ஒருமுறை டிடிஎஸ் பிடித்து அரசுக்குச் செலுத்திவிட்டால், வங்கியால் அந்தப் பணத்தைத் திரும்பத் தரமுடியாது. அதன் பின் நீங்கள் வருமான வரித் தாக்கல் (ITR) செய்துதான் அந்தத் தொகையைத் திரும்பப் பெறமுடியும் (Refund). எனவே ஏப்ரல் மாதத்திலேயே இதைக் கொடுத்துவிடுவது பண இழப்பைத் தவிர்க்கும்.

இதையும் படியுங்கள்:
உங்கள் நிதி கட்டடம் பலமாக இருக்க வேண்டுமா? முதல் சம்பளத்தில் இந்த 5 தவறுகளைத் தவிர்க்கவும்!
Form 121 - Income Tax Form 121

ஆன்லைனிலும் கொடுக்கலாமா?

நிச்சயமாக! இதற்காக நீங்கள் வங்கிக்கு நேரில் செல்ல வேண்டிய கட்டாயமில்லை. தற்காலத்தில் அனைத்து முன்னணிப் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளும் ஆன்லைன் மூலமாகவே Form 121 சமர்ப்பிக்கும் வசதியை வழங்குகின்றன.

வங்கியின் இணையதள வங்கி (Net Banking) அல்லது மொபைல் செயலியில் (Mobile Banking App) லாக்-இன் செய்து, 'Services' அல்லது 'Tax Forms' பிரிவின் கீழ் சென்று சில நிமிடங்களில் Form 121 படிவத்தைப் பூர்த்தி செய்து சமர்ப்பித்துவிடலாம். இணைய வசதி இல்லாதவர்கள், தங்கள் வங்கிக் கிளைக்கு நேரில் சென்றும் இதற்கான இயற்பியல் படிவத்தைப் பூர்த்தி செய்து வழங்கலாம்.

மாறியுள்ள புதிய நடைமுறைகளைப் புரிந்துகொண்டு, சரியான நேரத்தில் Form 121 சமர்ப்பிப்பதன் மூலம், உங்களின் வட்டி வருமானம் டிடிஎஸ் பிடித்தம் இன்றி முழுமையாக உங்கள் கைகளுக்கே வந்து சேரும்.

இதையும் படியுங்கள்:
UPI புதிய கட்டணம்: உங்க அக்கவுண்டில் இருந்து பணம் பிடிப்பார்களா? NPCI அளித்த நிம்மதி விளக்கம்!
Form 121 - Income Tax Form 121
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.

Reference:

logo
Kalki Online
kalkionline.com