இளைஞர்களுக்கான வங்கி சேவையா? மத்திய அரசின் "Banking for Youth" திட்டம் – முழு விவரங்கள்!

Gen Z இளைஞர்களைக் கவர பொதுத்துறை வங்கிகள் களமிறங்கும் புதிய திட்டம் பற்றிய செய்தி.
வங்கி சேவை - Banking for Youth
வங்கி சேவை - Banking for Youth
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on: 

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2ஆம் தேதி முதல் பொதுத்துறை வங்கிகள் (PSBs) ஒரு மாத கால சிறப்பு பிரச்சார இயக்கத்தைத் தொடங்க வேண்டும் என்று அறிவித்துள்ளார்.

இந்த இயக்கத்திற்கு Banking for Youth "இளைஞர்களுக்கான வங்கி சேவை" என்று பெயரிடப்பட்டுள்ளது. Gen Z எனப்படும் இன்றைய இளம் தலைமுறையினரையும் (16 வயதுக்கு மேற்பட்டவர்கள்), புதிய முதலீட்டாளர்களையும் பொதுத்துறை வங்கிகளின் (PSBs) பக்கம் ஈர்த்து அவர்களை முறையான வங்கி சேவைக்குள் கொண்டு வருவதே இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கமாகும்.

பொதுத்துறை வங்கிகள் தங்களுடைய வழக்கமான 'அரசு வங்கி' என்ற பொதுவான பிம்பத்தை மாற்றி, இன்றைய தலைமுறை இளைஞர்களின் தேவைகளுக்கு ஏற்ப எளிய மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்துடனான சேவைகளை வழங்க வேண்டும் என்பதே இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கமாக சொல்லப்படுகிறது.

இளம் தலைமுறையினர் தங்களின் கணக்குகளைத் தொடங்கவும், அவர்களை ஈர்க்கவும் மத்திய நிதி அமைச்சகம் பொதுத்துறை வங்கிகளுக்கு சில முக்கிய வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளன.

இதையும் படியுங்கள்:
30 வயசுக்கு மேல முதலீடு செஞ்சா இவ்ளோ லாபமா.. உங்களுக்கு யாரும் சொல்லாத உண்மை!
வங்கி சேவை - Banking for Youth

இந்த இயக்கத்தின் முக்கிய அம்சங்கள்:

16 வயதிற்கு மேற்பட்ட இளம் குடிமக்கள் மற்றும் கல்லூரி மாணவர்களை இலக்காகக் கொண்டு இந்த இயக்கம் செயல்படும்.

வெறும் கணக்கு தொடங்குவதோடு நிறுத்தாமல், கல்லூரிப் பருவம் முதல் வேலைக்குச் செல்லும் வரை இளைஞர்களுடன் நீண்ட கால உறவை வங்கிகள் ஏற்படுத்த வேண்டும். வங்கிகள் நேரடியாக கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்குச் சென்று இந்த பிரச்சாரத்தை நடத்தவேண்டும்.

வங்கிகள் தங்களின் கிளைகளில் இளைஞர்கள் தேடி வருவதற்காகக் காத்திருக்காமல், நேரடியாகக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் திறன் மேம்பாட்டு மையங்களுக்குச் சென்று புதிய கணக்குகளைத் தொடங்குதல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

யுவா கியோஸ்க்குகள் (Yuva Kiosks):

இளம் வாடிக்கையாளர்களுக்கு உதவவும், அவர்களின் நிதி சார்ந்த தேவைகளை வழிகாட்டவும் வங்கி கிளைகளில் பிரத்யேக "யுவா கியோஸ்க்குகள் அல்லது "யுவா வங்கி மித்ரா" (Yuva Banking Mitra) வசதிகள் ஏற்படுத்தப்படும்.

Gen Z இளைஞர்களின் வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறு தள்ளுபடி வவுச்சர்கள் மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களுடன் இணைந்து இலவச ஆன்லைன் படிப்புகளை வங்கிகள் வழங்கலாம்.

16 வயதுக்கு மேற்பட்ட இளம் குடிமக்களை இலக்காகக் கொண்டு கிரெடிட் ஸ்கோரின் (Credit Scores) முக்கியத்துவம், கடன் ஒழுக்கம், அரசாங்கத்தின் கடன் திட்டங்கள் மற்றும் முறையான நிதிச் சூழல் குறித்த விழிப்புணர்வை இளைஞர்களிடம் ஏற்படுத்த வேண்டும்.

வங்கி சேவை - Banking for Youth
வங்கி சேவை - Banking for Youth

24/7 டிஜிட்டல் பேங்கிங்:

ஸ்மார்ட் போன் மற்றும் UPIஐ அதிகம் பயன்படுத்தும் இந்தத் தலைமுறைக்கு ஏற்ப எளிமையான மற்றும் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய டிஜிட்டல் சேவைகள் முன்னிலைப்படுத்தப்படும்.

ஒரு மாணவர் கல்வி பயிலும் காலத்திலிருந்து வேலைக்குச் செல்லும் காலம் மற்றும் அதற்கு அப்பாலும் வங்கிகளுடன் ஒரு நீண்ட காலத் தொடர்பை உருவாக்க இந்த இயக்கம் வழிவகை செய்கிறது.

இந்த ஒரு மாத கால இயக்கம், இளைஞர்களின் முதல் வங்கிக் கணக்கு, முதல் சம்பளம், உயர்கல்வி, தொழில்முனைவோர் பயணம் மற்றும் அவர்களின் முதல் முதலீடு என வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் பொதுத்துறை வங்கிகள் அவர்களுடன் பயணிக்க வழிவகை செய்கிறது.

இந்த இயக்கம் இந்திய வங்கிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பின் கீழ், இந்தியாவில் உள்ள அனைத்து 12 பொதுத்துறை வங்கிகளாலும் தங்களின் பிராந்திய வலிமைக்கேற்ப தனித்தனி உத்திகளுடன் செயல்படுத்தப்பட உள்ளது.

இதையும் படியுங்கள்:
பங்குச்சந்தை வீழ்ச்சி இனி கவலையில்லை! சாமானியர்களுக்கான செபியின் 'லைஃப் சைக்கிள் ஃபண்ட்'!
வங்கி சேவை - Banking for Youth
logo
Kalki Online
kalkionline.com