

"டேய்.., சூப்பரா ஒரு பிசினஸ் ஐடியா சொல்லுடா, உடனே இறங்கிடலாம்", இப்படி நம்ம பிரண்ட்ஸ் குரூப்லயோ, டீக்கடை பேச்சுலயோ, ஆஃபீஸ் பிரேக் டைம்லயோ அடிக்கடி இந்த வார்த்தைய கேட்டிருப்போம். எல்லாரும் பிசினஸ்னா ஏதோ ஒரு 'மேஜிக் ஐடியா' கிடைச்சா போதும், உடனே கோடீஸ்வரன் ஆகிடலாம்னு நினைக்கிறாங்க.
ஆனா, பல வருஷம் அடிபட்டு ஜெயிச்ச அனுபவத்தோடு பிசினஸ் பண்றவங்க சொல்ற உண்மை என்னன்னா, பிசினஸ்ங்கிறது ஐடியாவுல இருந்து ஆரம்பிக்கிறது இல்ல; உங்களை நீங்க முழுசா புரிஞ்சுக்கிறதுல இருந்துதான் ஆரம்பிக்குதுனு சொல்றாங்க!
முதல் கேள்வி 'என்ன பிசினஸ்?' இல்ல, 'என்ன பிரச்னை?'
நாம முதல்ல நமக்குள்ள கேட்க வேண்டிய கேள்வி, "நான் என்ன தொழில் தொடங்கலாம்?"ங்கிறது இல்ல; "மக்களோட எந்தப் பிரச்னைய தீர்க்க எனக்கு இயல்பாவே ஆர்வம் இருக்கு?"ங்கிறதுதான்.
உலகத்துல ஜெயிச்ச எல்லாப் பெரிய பிசினஸும் வெறும் பொருட்களை விக்கிறதை விட, கஸ்டமர்ஸோட அன்றாட சின்னச் சின்ன கஷ்டங்களுக்கு தீர்வு கொடுக்குறதால தான் பெருசா வளருது. சோ, மக்கள் இன்னைக்கு எதுக்கு அதிகம் செலவு பண்றாங்கனு பார்க்குறதைவிட, எங்க அதிகம் கஷ்டப்படுறாங்கனு பார்த்தா அங்கதான் உண்மையான பிசினஸ் வாய்ப்பு ஒளிஞ்சிருக்கும்.
அதுமட்டுமில்ல, ஒரு பிசினஸ் உங்க கேரக்டருக்கு செட் ஆகுமானு பார்க்கணும். உங்க பலம் என்ன, எவ்வளவு ரிஸ்க் எடுக்க முடியும், பணத்தை எப்படி மேனேஜ் பண்ணுவீங்க, உங்க கம்யூனிகேஷன் ஸ்டைல் என்ன, எதிர்காலத்துல நாம எப்படி வாழணும்னு நினைக்கிறோம், இப்படி இதெல்லாம் ரொம்ப முக்கியம்.
ஒரு பிசினஸ்ங்கிறது வெறும் வருமானம் தர்ற விஷயம் மட்டுமல்ல; அது உங்க டெய்லி வாழ்க்கையோட ஒரு அங்கமாவே மாறிடும். நாலு பேர்கிட்ட கலகலப்பா பேசுறவங்களுக்கு செட் ஆகுற சேல்ஸ் பிசினஸ், அமைதியா உட்கார்ந்து ரிசர்ச் பண்றவங்களுக்கு செட் ஆகாது. இதத்தான் பிசினஸ் உலகத்துல ‘Founder-Market Fit’ னு சொல்வாங்க.
பேப்பர்ல சூப்பரா தெரியுற ஐடியா கூட, உங்க கேரக்டருக்கு ஒத்துவரலைனா அது ஒரேடியா ஊத்திக்கும். அதனாலதான் ஒரே பிசினஸை ஆரம்பிக்கிற ரெண்டு பேர்ல ஒருத்தர் பெரிய அளவுல ஜெயிக்கிறதும், இன்னொருத்தர் தோக்குறதும் நடக்குது.
பணத்தைத்தாண்டி இருக்கும் முக்கியமான 4 விஷயங்கள்:
பிசினஸ் தொடங்க பணம் மட்டும்தான் மூலதனம்னு பலர் நினைக்கிறாங்க. ஆனா, பிசினஸ்ல ஜெயிச்சவங்க எல்லாம் இந்த 4 முக்கியமான விஷயங்களை வச்சுதான் ஆரம்பிக்கிறாங்க:
அறிவு (Knowledge)
இருக்கிற தொடர்புகள் (Network/Relationships)
நேரம் (Time)
பணம் (Capital)
கையில பெரிய பணம் இல்லாமலேயே, நல்ல ஆழமான தொழில் அறிவையும்,நல்ல பழக்கவழக்கங்களையும் வச்சு ஜெயிச்சவங்க இங்க நிறைய பேர் இருக்காங்க. அதனால, பிசினஸ்ல இறங்குறதுக்கு முன்னாடி உங்ககிட்ட இதுல எது ஸ்ட்ராங்கா இருக்கு, எதை இன்னும் வளர்த்துக்கணும்னு தெளிவா கணக்குப் போட்டுப் பாருங்க.
நீங்க எந்த மாதிரி பிசினஸ் பண்ணப் போறீங்க?
நம்ம திறமைய வச்சு பண்ற பிசினஸ் (Skill-based), சர்வீஸ் பண்ற பிசினஸ் (Service), தயாரிப்பு (Product), இல்ல டீம் வச்சு நடத்துற சிஸ்டம் சார்ந்த பிசினஸ் (System-based), இதுல நீங்க எத தேர்ந்தெடுக்கப் போறீங்கனு தெளிவா இருக்கணும்.
சில பிசினஸ்ல நீங்க தினமும் நின்னு வேலை பார்த்தாதான் வண்டி ஓடும்; சிலதுல சரியான ஆட்களையும், சிஸ்டத்தையும் வச்சு நடத்தலாம். இந்த வித்தியாசம் தெரியாம இறங்குனா, சில வருஷத்துலயே நமக்கு மன உளைச்சலும், சலிப்பும் தட்டிடும்.
நிரந்தர வெற்றிக்கு தேவையான அடிப்படை விஷயங்கள்:
மார்க்கெட்ல டிரெண்டிங்ல இருக்குற பிசினஸ்ஸ கண்மூடித்தனமா ஃபாலோ பண்றதை விட, நம்மள நாமளே எடை போட்டுப் பார்க்குறது, பணத்த சரியா மேனேஜ் பண்றது (Financial Discipline), இப்போ ட்ரெண்ட்ல இருக்குற வாடிக்கையாளர்களைப் புரிஞ்சுக்கிறது, புது விஷயங்களைக் கத்துக்கிறது, அப்புறம் பொறுமைனு; இப்படி இந்த அடிப்படை விஷயங்கள் ரொம்ப முக்கியம்.
உங்க திறமை, கையில இருக்கிற பலம், மக்களோட தேவைனு இந்த மூணும் ஒண்ணா சேர்ற இடத்த கரெக்டா பிடிச்சிட்டீங்கன்னா, உங்க பிசினஸ் லாபம் தர்றது மட்டுமில்லாம, பல வருஷத்துக்கு அசைக்க முடியாத அளவுக்கு ஸ்ட்ராங்கா நிக்கும்!
சோ, அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காம, இந்த அடிப்படை விஷயங்களை முதல்ல சரி பண்ணிட்டு களத்துல இறங்குங்க; வெற்றி நிச்சயம்!