
தற்போதை காலகட்டத்தில் பணவீக்கத்தை கருத்தில் கொண்டு, மக்கள் கார்கள் வாங்குவதற்கு முன் பல்வேறு அம்சங்களை யோசனை செய்கிறார்கள். இதனால்தான், ஒரு காரை வாங்கும்போது, மக்கள் அதன் விலை, தோற்றம் மற்றும் அம்சங்களை மட்டுமல்லாமல், வாங்கிய பிறகு ஏற்படும் செலவுகளையும், அதாவது அதன் மைலேஜ் போன்ற பல விஷயங்களை யோசனை செய்கிறார்கள்.
அதன்படி கார் வாங்குவதற்கான உங்கள் பட்ஜெட் (மைலேஜ் கார்கள்) சுமார் ரூ. 7 லட்சம் ஆக இருந்து, குறைந்த எரிபொருளில் அதிக தூரம் செல்லும் காரை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், சந்தையில் அதற்கேற்ப பல சிறந்த தேர்வுகள் (Best mileage cars) உள்ளன என்பதை அறிந்து நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள்.
ரூ.7 லட்சத்திற்கும் குறைவான விலையில் மாருதி சுசூகி ஸ்விஃப்ட், டாடா டியாகோ, மாருதி செலரியோ ஆகிய கார்கள் அதிக மைலேஜ் வழங்குகின்றன. மாருதி ஸ்விஃப்ட் 24.8 கி. மீ, டாடா டியாகோ 20.09 கி. மீ, செலரியோ 25.24 கி. மீ வரை மைலேஜ் தருகிறது. எனவே, உங்கள் தேவைக்கு ஏற்ப சிறந்த தேர்வுகளை செய்யலாம்.
இந்தியாவில் கிடைக்கும் மிகவும் பிரபலமான மற்றும் குறைந்த எரிபொருள் செலவைக் கொண்ட நடுத்தர குடும்ப கார் ஆகும்.
ஆரம்ப விலை: ₹4.70 லட்சம் முதல் டாப் மாடல் ரூ.6.75 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) விற்பனை செய்யப்படுகிறது.
மைலேஜ்: பெட்ரோல் மாடல் லிட்டருக்கு சுமார் 24.97 முதல் 26 கி.மீ வரை மைலேஜ் தரும்; சிஎன்ஜி (CNG) மாடல் கிலோவுக்கு 34.43 கி.மீ வரை மைலேஜ் வழங்கும்.
சிறப்பம்சங்கள்: ஏபிஎஸ் (ABS with EBD) மற்றும் 6 ஏர்பேக்குகள் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்டீயரிங் மவுண்டட் கண்ட்ரோல்ஸ் மற்றும் பவர் விண்டோஸ் கொடுக்கப்பட்டுள்ளன.
ஆரம்ப விலை: எக்ஸ்-ஷோரூம் விலை தோராயமாக ரூ.4.99 லட்சம் முதல் ரூ.6.97 லட்சம் வரை விற்கப்படுகிறது.
மைலேஜ்: பெட்ரோல் வேரியண்ட்கள் தோராயமாக 23.56 கி.மீ முதல் 25.19 கி.மீ வரை மைலேஜ் தருகின்றன மற்றும் சிஎன்ஜி மாடல்கள் 34.05 கி.மீ வரை மைலேஜ் வழங்குகின்றன.
சிறப்பம்சங்கள்: 341 லிட்டர் அளவுக்கு விசாலமான லக்கேஜ் இடவசதியைக் கொண்டுள்ளது. 5 பேர் தாராளமாகப் பயணிக்கக்கூடிய இடவசதி கொண்டது. எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் (ESC) மற்றும் ஹில் ஹோல்டு அசிஸ்ட் (Hill Hold Assist - சில வேரியண்ட்களில்).
ஆரம்ப விலை: காரின் எக்ஸ்-ஷோரூம் விலை தோராயமாக ரூ.5.6 லட்சம் முதல் தொடங்குகிறது. மாநில வரியைப் பொறுத்து ஆன்-ரோடு விலை (On-road price) மாறுபடும்.
மைலேஜ்: பெட்ரோல் என்ஜின் சுமார் 20.1 கி.மீ/லிட்டர் வரை மைலேஜ் தருகிறது. இதன் சிஎன்ஜி மாடல் சுமார் 28.06 கி.மீ வரை மைலேஜ் வழங்குகின்றன.
சிறப்பம்சங்கள்: உறுதியான கட்டமைப்பு (Solid Build), 6 ஏர்பேக்குகள் (Airbags), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), 360-டிகிரி கேமரா மற்றும் பாதுகாப்புத் தரத்தில் (4-Star Safety) சிறந்து விளங்குகிறது.
மைலேஜ்: தோராயமாக 22.3 கி.மீ/லிட்டர் வரை மைலேஜ் தருகிறது. இதன் சிஎன்ஜி மாடல் சுமார் 33.61 கிமீ முதல் 34.47 கிமீ வரை மைலேஜ் வழங்குகிறது.
விலை: அடிப்படை மாடல் எக்ஸ்-ஷோரூம் விலை தோராயமாக ரூ. 5.99 லட்சம் முதல் தொடங்குகிறது.
சிறப்பம்சங்கள்: பிரீமியம் தோற்றம் மற்றும் வலிமையான 1.2-லிட்டர் இசட்-சீரிஸ் (Z-Series) பெட்ரோல் இன்ஜின் கொண்ட ஹேட்ச்பேக் கார். பாதுகாப்பு மற்றும் டிரைவிங் வசதிக்காக அடாப்டிவ் குரூஸ் கண்ட்ரோல் மற்றும் லேன் கீப் அசிஸ்ட் போன்ற நவீன தொழில்நுட்ப வசதிகள் உள்ளன.
விலை: இந்தியாவில் இதன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ.5.84 லட்சத்தில் தொடங்குகிறது.
மைலேஜ்: மேனுவல் மாடல் சுமார் 24.8 முதல் 25.35 கி.மீ வரை மைலேஜ் தரும். AMT ஆட்டோமேட்டிக் மாடல் சுமார் 25.75 கி.மீ வரை மைலேஜ் வழங்கும்.
சிறப்பம்சங்கள்: இது ஒரு 5 சீட்டர் பிரீமியம் ஹேட்ச்பேக் கார் ஆகும். அனைத்து வேரியண்ட்டுகளிலும் 6 ஏர்பேக்குகள் (Airbags), இஎஸ்பி (ESP), மற்றும் ஹில் ஹோல்டு அசிஸ்ட் (Hill Hold Assist) போன்ற பாதுகாப்பு வசதிகள் தரமாக தரப்பட்டுள்ளன.
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.