அட்வென்ச்சர் உலகில் புதிய ராஜா: ‘BMW F 450 GS’ இந்தியாவில் அறிமுகம்!

BMW மோட்டோராட் நிறுவனம், இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட BMW F 450 GS அட்வென்ச்சர் பைக்கை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
BMW F 450 GS
BMW F 450 GSimage credit -bikewale.com
Updated on

பி.எம்.டபிள்யூ (BMW) மோட்டோராட் நிறுவனம், தற்போது இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பி.எம்.டபிள்யூ எப் 450 ஜி.எஸ் (BMW F 450 GS) அட்வென்ச்சர் பைக்கை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. பைக் டெலிவரிகள் ஜூன் முதல் தொடங்க திட்டமிடப் பட்டுள்ளது. இது இந்தியாவில் தயாரிக்கப்படும் (Made-in-India) பிரீமியம் அட்வென்ச்சர் பைக் ஆகும். டிவிஎஸ் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்த புகழ்பெற்ற GS தொடரின் புதிய நுழைவு நிலை (entry-level) மாடலாக, முந்தைய G 310 GS மாடலுக்கு பதிலாக வருகிறது. இந்த பைக்குகள் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் (TVS Motor) ஹோசூர் ஆலையில், பிஎம்டபிள்யூ தரக்கட்டுப்பாட்டின் கீழ் தயாரிக்கப்படுகின்றன.

மூன்று வேரியண்ட்களில் கிடைக்கும் இந்த பைக்கின் அறிமுக விலை சுமார் ரூ.4.70 லட்சம் முதல் ரூ.5.30 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதாவது, பேஸ் மாடல் (Base) ₹4.70 லட்சமும், எக்ஸ்க்ளூசிவ் மாடல் (Exclusive) ₹4.90 லட்சம் எனவும் ஜிஎஸ் டிராபி மாடல் GS Trophy ₹5.30 லட்சம் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
பி எம் டபிள்யூவின் ஸ்டைலான புதிய படைப்பு ‘BMW X3 30 xDrive M Sport Pro’!
BMW F 450 GS

பி.எம்.டபிள்யூ நிறுவனத்தின் வழக்கமான ஜி.எஸ். வடிவமைப்பு பாணியில், இந்த பைக் உறுதியான மற்றும் நவீன, தோற்றத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. மிகவும் லகுவான மற்றும் கையாளுவதற்கு எளிதான வகையில் சுமார் 178 கிலோ எடைகொண்ட இலகுரக ஸ்டீல் ட்ரெல்லிஸ் பிரேமில் கட்டமைக்கப்பட்டுள்ளதால், கரடுமுரடான பாதைகள் மற்றும் அன்றாட பயணங்களில் கையாள மிகவும் எளிதாக இருக்கும். முழு எல்.இ.டி. விளக்குகள், ஸ்மார்ட்போன் இணைப்பு வசதியுடன் கூடிய 6.5 இன்ச் TFT டிஸ்ப்ளே, 19-இன்ச் முன்பக்க மற்றும் 17-இன்ச் பின்பக்க சக்கரங்கள் உள்பட பல அம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.

BMW நிறுவனம் இந்த பைக்கில் ஏபிஎஸ் புரோ (ABS Pro) (கார்னரிங் ஏபிஎஸ்), டைனமிக் டிராக்ஷன் கண்ட்ரோல்(Rain, Road, Enduro, Enduro Pro), இன்ஜின் பிரேக் கண்ட்ரோல் மற்றும் ஆன்டி-ஹாப்பிங் கிளட்ச் உள்ளிட்ட விரிவான பாதுகாப்பு தொகுப்பை வழங்கியுள்ளது.

மெக்கானிக்கலாக, புதிய 420cc இணை இரட்டை சிலிண்டர் என்ஜின் (பேரலல்-ட்வின் (parallel-twin), லிக்விட்-கூல்டு என்ஜின்)கொண்ட இந்த பைக், அதிகபட்சமாக 48 எச்பி பவரையும், 43 Nm டார்க்கையும் (Torque) வெளிப்படுத்தும்.

6 ஸ்பீடு கிளர்பாக்சுடன் இணைக்கப்பட்டுள்ள ஆப்-ரோடு பயணங்களிலும் மென்மையான செயல்திறனை வழங்குகிறது. இந்த பைக்கின் சிறப்பு அம்சம் என்னவென்றால் Easy Ride Clutch (ERC). அதாவது இது கிளட்ச் லிவரை பயன்படுத்தாமலேயே கியர் மாற்ற வழிவகுக்கிறது.

நீண்ட பயணங்களுக்கு ஏற்ற சஸ்பென்ஷன் அமைப்பு, பல்வேறு ரைடிங் மோடுகள் மற்றும் ஸ்டேபிளான பிரேக்கிங் ஆகியவை இதன் பயண அனுபவத்தை மேம்படுத்துகின்றன. மேலும் இதில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய பிரேக் மற்றும் கியர் லீவர்கள், பெரிய GS மாடல்களைப் போன்ற ரேலி சீட் மற்றும் விண்ட்ஷீல்டு போன்ற கூடுதல் பாகங்களும் உள்ளன.

BMW F 450 GSவின் இலகுரக வடிவமைப்பு ஆன்-ரோடு மற்றும் ஆஃப்-ரோடு ஆகிய இரண்டிலும் சிறந்த கட்டுப்பாடு மற்றும் வசதியை உறுதி செய்கிறது.

இதையும் படியுங்கள்:
கார்களை மறுசுழற்சி செய்யும் BMW!
BMW F 450 GS

BMW F 450 GS, இந்திய சந்தையில் இது கேடிஎம் 390 அட்வென்ச்சர் (KTM 390 Adventure), ராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் 450 (Royal Enfield Himalayan 450) மற்றும் ஹோண்டா NX500 போன்ற முன்னனி பைக் மாடல்களுடன் போட்டியிடுகிறது.

logo
Kalki Online
kalkionline.com