கிரெடிட் கார்டு வலையா? உங்கள் பணத்தை பாதுகாக்கும் கடன் மேலாண்மை வழிகாட்டி!

நிதி நெருக்கடியைத் தவிர்த்து 30-40% வட்டி சுமையிலிருந்து தப்பிப்பது எப்படி?
நல்ல கடன் - Financial Freedom Tamil
நல்ல கடன் - Financial Freedom TamilImage credit - Gemini
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

ல்லா கடன்களும் ஆபத்தானவை அல்ல. நாம் வாங்கும் கடன் நம் சொத்தின் மதிப்பை உயர்த்துகிறதா அல்லது நம் வருமானத்தை அதிகரிக்கிறதா என்பதைப் பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது. நிதியியல் சுதந்திரத்தை அடைவதற்கு நம் பணத்தை சரியாக நிர்வகிப்பதற்கும், நல்ல கடன் மற்றும் கெட்ட கடன் ஆகியவற்றிற்கு இடையேயான வித்தியாசத்தை புரிந்துகொள்வது மிகவும் அவசியமாகும். நிதி ஆரோக்கியத்தை மேம்படுத்த நல்ல கடன் மற்றும் கெட்ட கடன் (Good Debt vs Bad Debt) பற்றிய தெளிவான புரிதல் அவசியமாகும். கடன் என்பது இயல்பாகவே தீமையானது அல்ல; அதை நாம் எதற்காகப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே அதன் தாக்கம் அமைகிறது.

1) நல்ல கடன் (Good Debt) என்றால் என்ன?

நல்ல கடன் என்பது முதலீட்டில் நல்ல வருமானத்தை வழங்கும் ஒன்றிற்கு நிதியளிக்கப் பயன்படுத்தப்படும் கடன் ஆகும். நல்ல கடன் என்பது எதிர்காலத்தில் நம் சொத்து மதிப்பை உயர்த்தவோ அல்லது வருமானத்தை ஈட்டவோ உதவும் முதலீடாகும். இவை நீண்ட காலத்தில் நமக்கு லாபத்தையே தரும்.

*வீட்டுக் கடன் (Home Loan):

பொதுவாக நிலம் அல்லது வீட்டின் மதிப்பு காலப்போக்கில் உயரும். அத்துடன் வீட்டுக் கடன்களுக்கு வட்டி விகிதம் குறைவு மற்றும் வருமான வரி விலக்குச் சலுகைகளும் கிடைக்கின்றன. வீடு வாங்குவதற்கான வீட்டுக் கடன் (Home Loan) காலம் செல்லச் செல்ல சொத்தின் மதிப்பை அதிகரிக்கும். இதனால் பணத்தின் மதிப்பு அதிகரிக்கும்.

*கல்வி கடன் (Education Loan):

உயர் கல்விக்காக வாங்கும் கடன் சம்பாதிக்கும் திறனை அதிகரிக்கும். வருமானம் மற்றும் முன்னேற்றத்தை பெற்றுத்தரும் கல்விக் கடன் நம் திறனை வளர்த்து, சிறந்த வேலை வாய்ப்பையும் உயர் வருமானத்தையும் நிச்சயம் பெற்றுத்தரும்.

*தொழில் கடன் (Business Loan):

ஒரு புதிய தொழிலைத் தொடங்க அல்லது இருக்கும் தொழிலை வளர்க்க வாங்கும் கடன், கூடுதல் வருமானத்தை உருவாக்க உதவும். தொழில் வளர்ச்சிக்காக வாங்கும் கடன்கள் முறையான திட்டமிடலின் கீழ் லாபத்தை ஈட்டித்தரும்.

இதையும் படியுங்கள்:
கழுத்தை நெரிக்கும் கடன் சுமை? தப்பிக்க இந்த 5 ஈஸி ஐடியாஸ் போதும்!
நல்ல கடன் - Financial Freedom Tamil

2) கெட்ட கடன் (Bad Debt) என்றால் என்ன?

கெட்ட கடன் என்பது மதிப்பு குறையும் பொருட்களுக்காகவோ அல்லது உடனடி நுகர்வு செலவுகளுக்காகவோ வாங்கப்படும் கடன் ஆகும். மதிப்பு வேகமாகக் குறையும் பொருட்களுக்காக அல்லது வருமானம் தராத ஆடம்பரச் செலவுகளுக்காக அதிக வட்டிக்கு வாங்கப்படும் கடன்கள் இவை. இவை நம்மை கடன் சுமைக்குள் தள்ளிவிடும்.

*கிரெடிட் கார்டு நிலுவைத் தொகை (Credit Card Debt):

கிரெடிட் கார்டு பில்களை முழுமையாக செலுத்தாமல், அடுத்த மாதத்திற்குத் தள்ளிப் போடும்போது 30% முதல் 40% வரை மிக அதிக வட்டி விதிக்கப்படுகிறது. கிரெடிட் கார்டு மற்றும் அவசரக்கால கடன்கள் போன்றவை மிகக்கடுமையான வட்டியைக் கொண்டுள்ளன.

நல்ல கடன் - Financial Freedom Tamil
நல்ல கடன் - Financial Freedom TamilImage credit - Gemini

*ஆடம்பர செலவுகளுக்கான தனிநபர் கடன்(Personal Loan for Luxury):

ஆடம்பரமானப் பயணங்கள், சுற்றுலா செல்வதற்கோ, விலையுயர்ந்த மொபைல் போன் அல்லது கேட்ஜெட்டுகள் வாங்குவதற்கோ தனிநபர் கடன் வாங்குவது தவறான நிதி முடிவாகும். அவசியமற்ற பொருட்களுக்கான தனிநபர் கடன்கள் எந்தவித வருமானத்தையும் தராது. இது நம்மை நிதி நெருக்கடியிலும், மீள முடியாத கடன் சுமையிலும் தள்ளிவிடும்.

*அதிக வட்டி தரும் உடனடிக் கடன்கள்:

மிகக் குறுகிய காலத்தில் அதிக வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டிய இந்த மொபைல் ஆப் கடன்கள் பெரிய கடன் வலையை உருவாக்குகின்றன.

*விலை உயர்ந்த கார் கடன்:

கார் வாங்கிய அடுத்த கணமே அதன் மதிப்பு குறையத் தொடங்கும். நம் தகுதிக்கு மீறிய சொகுசு காரை இஎம்ஐ-ல் வாங்குவது கெட்ட கடனாக மாறும்.

3) சிறந்த கடன் மேலாண்மை உத்திகள்:

*கிரெடிட் கார்டு போன்ற அதிக வட்டி கொண்ட கடன்களை முதலில் செலுத்தி முடிக்க வேண்டும். இப்படி அதிக வட்டி கடன்களை அடைப்பது நம் நிதி ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

*முக்கியமாக நம் மாதாந்திர வருமானத்தில் 30% முதல் 40%-க்கு மேல் இஎம்ஐ செலுத்த வேண்டிய கட்டாயம் இல்லாதவாறு கடன்களை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். அதாவது மாதாந்திரக் கடன் தவணை (EMI) நம் வருமானத்திற்குள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அளவுக்கு அதிகமான கடன்களைத் தவிர்க்க வேண்டியதும் அவசியம்.

இதையும் படியுங்கள்:
Credit card smart use: வட்டியே இல்லாம இலவசமா பர்சேஸ் பண்ண சூப்பர் ட்ரிக்ஸ் இதோ!
நல்ல கடன் - Financial Freedom Tamil

*எதிர்பாராத மருத்துவச்செலவுகள் அல்லது வேலை இழப்பு ஏற்படும்போது மீண்டும் கடன் வாங்காமல் இருக்க, செலவுகளைச் சமாளிக்க குறைந்தது 3 முதல் 6 மாத செலவுக்கான தொகையை அவசர நிதியாக (Emergency Fund), சேமித்து வைத்திருக்கவேண்டும்.

*ஒரு பொருளைக் கடனில் வாங்குவதற்கு முன், அது நம் வாழ்க்கைக்கு மிகவும் தேவையா அல்லது தற்காலிக ஆசையா என்று சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். கடன் வாங்குவது தப்பல்ல; ஆனால் அதை வருமானம் ஈட்டும் சொத்துக்களை உருவாக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வே நம்மை செல்வந்தராக்கும்.

இதையும் படியுங்கள்:
மாதக் கடைசியில் கடன் வாங்காம வாழணுமா? இந்த 7 எளிய வழிகளை ட்ரை பண்ணுங்க!
நல்ல கடன் - Financial Freedom Tamil
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.

Refrence:

logo
Kalki Online
kalkionline.com