

தீபாவளி போனஸ் கைக்கு வந்ததும் நகை, நிலம் என சேமிப்புகளில் போட வேண்டும் என நிறையப் பேர் நினைக்கிறார்கள். அந்த வகையில் மருத்துவக் காப்பீடும் ஒரு முதலீடுதான்.
அவசர நேரத்தில் கை கொடுக்கும் மருத்துவக் காப்பீடு பற்றி நிறையத் தவறான நம்பிக்கைகள் இருக்கின்றன. அந்த அவ நம்பிக்கைகளை முதலில் உடைப்பது அவசியம்.
மொத்தக் குடும்பத்துக்கும் மருத்துவக் காப்பீடு
குடும்பத்தில் சம்பாதித்துக் கொடுக்கும் நபர் எவரோ , அவருக்கு மட்டும் காப்பீடு இருந்தால் போதும் என பலர் நினைக்கிறார்கள். பெரும்பாலும் இவர்கள் தாங்கள் பணி புரியும் அலுவலகத்தில் ஏதேனும் ஒரு காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்திருப்பார்கள்.
இன்றைய கால கட்டத்தில் குழந்தைகள் முதல் முதியவர் கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் திடீர் மருத்துவ தேவை இருக்கலாம். மொத்தக்குடும்பத்துக்கும் மருத்துவ காப்பீடு எடுப்பதே சிறந்தது.
எனக்கு அலுவலகத்தில் மருத்துவ காப்பீடு செய்திருக் கிறார்கள். வீட்டுக்கு தனியாக நான் ஏன் எடுக்க வேண்டும்? என்று பலர் கேட்பது உண்டு. அலுவலகத்தில் இணையும் குரூப் இன்சூரன்ஸ் திட்டங்களுக்கு உச்சபட்ச எல்லை உண்டு.
ஒரு லட்ச ரூபாய் 2 லட்சம் ரூபாய் என நிர்ணயம் செய்திருப்பார்கள். அதைத் தாண்டிய தேவை எழும்போது இது போதாது. சில அலுவலகங்களில் குடும்பத்துக்கே காப்பீடு செய்வார்கள். அது இருந்தால் போதுமானது.
காப்பீட்டில் பார்க்க வேண்டியது
பிரீமியம் எவ்வளவு என்று பார்த்தே நிறைய பேர் மருத்துவ காப்பீடு எடுக்கிறார்கள். ஆனால் காப்பீடு எடுப்பவர் களின் வயது மற்றும் மொத்த காப்பீட்டு தொகை ஆகியவற்றை பொறுத்ததே பிரீமியம்.
எத்தனை மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம். எந்தெந்த சிகிச்சைகள் இந்தக் காப்பீட்டில் அடங்கும் என்பது போன்ற விஷயங்களையே முக்கியமாகப் பார்க்க வேண்டும்.
எதற்கும் தயாராக இருப்பது
எனக்கு எந்த நோயும் இல்லை எங்கள் குடும்பமே ஆரோக்கியமாக உள்ளது. நான் ஏன் மருத்துவ காப்பீடு? எடுக்க வேண்டும் என்று சிலர் கேட்பார்கள்.
ஆரோக்கியமாக இருப்பவர்களை கூட எதிர்பாராத நோய்கள் தாக்கலாம். விபத்து போன்றவை எல்லோருக்கும் பொதுவானது எதற்கும் தயாராக இருப்பது நல்லதுதானே?
சரியான பாலிஸியைத் தேர்ந்தெடுத்தல்
மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றால்தான் காப்பீட்டில் தொகை பெறலாம் என நிறைய பேர் நினைக்கிறார்கள்.
ஆனால், ஸ்பெஷலிஸ்ட்டிடம் ஆலோசனை பெறுவது, தடுப்பூசி போடுவது, பல் சிகிச்சை, பரிசோதனை செலவுகள், காது கேட்கும் கருவி பொருத்துதல், கண் பரிசோதனன போன்றவற்றுக்கும் மருத்துவ காப்பீடு கிடைக்கும்.
நமக்கு ஏற்ற விதத்தில் இப்படி நமக்கு தேவையானதை தரும். சரியான பாலீசியை சொல்லி தேர்ந்தெடுக்க வேண்டும்.
மருத்துவக் காப்பீடு கட்டாயம்
கொரோனா காலத்தில் அக்கம்பக்கம் உள்ளவர்கள் பாலீசி போட்டதால் பணச் செலவு குறைந்தது.
அதே மாதிரி இருதய அறுவை சிகிச்சை பெற்றவர்கள், சிறுநீரகக்கல் ஆபரேஷன், பித்தப்பை கல் ஆபரேஷன், கண் ஆபரேஷன், மூட்டுவலி ஆபரேஷன், புற்று நோய், காய்ச்சல் என அனைவரும் ஒவ்வொருவருக்கும் தங்கள் குடும்பத்தில் ஏற்பட்டதால் இதைத் தெரிந்துகொண்டு குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் காப்பீடு எடுத்து விட்டனர்.
மருத்துவ காப்பீடு எடுக்கும்போது ஏற்கனவே இருக்கும் நோய்கள் பற்றி தெளிவாக குறிப்பிட வேண்டும் .
இதய நோய், சர்க்கரை நோய் என ஏதும் இருப்பின், அதற்கு ஏற்கனவே பெறும் சிகிச்சைகள் பற்றி குறிப்பிட வேண்டும்.
பழைய நோய்களுக்கான சிகிச்சைகள் ஒரு குறிப்பிட்ட காத்திருப்பு காலத்துக்குப் பிறேகே காப்பீட்டு செலவு வரம்புக்குள் வரும் முன்கூட்டியே உண்மையை சொல்லாவிட்டால் அபாய நேரங்களில் உதவி கிடைக்காமல் போகலாம்.
இதை எல்லாம் தெரிந்து கொண்டு வீட்டில் உள்ள அனைவரும் புரிந்து கொண்டு மருத்துவக் காப்பீடு கட்டாயமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
எங்கள் வீட்டிலும் அனைவருக்கும் எடுத்து தக்க சமயத்தில் எங்களுக்கு இந்த காப்பீடு உதவியது என்பேன்.
இந்த வழிகாட்டியைப் படிப்பதன் மூலம், உங்கள் தீபாவளி போனஸ் தொகையைச் சரியான முறையில் பயன்படுத்தி, எதிர்பாராத மருத்துவச் செலவுகளிலிருந்து உங்கள் குடும்பத்தின் மொத்தச் சேமிப்பையும் பாதுகாக்கும் தெளிவான முடிவை நீங்கள் எடுக்க முடியும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
Reference: