‘Ducati Desmo 450 MX’ – இந்தியாவில் களமிறங்கியது ரேசிங் உலகின் புதிய ராஜா!

டுகாட்டி நிறுவனம், டெஸ்கோ 450 எம்.எக்ஸ்.(Ducati Desmo 450 MX) என்ற புதிய ரேஸ் மோட்டர் சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. ரூ.17.23 லட்சம் விலையில் ரேஸ் பிரியர்களுக்கு ஒரு ட்ரீட்!
Ducati Desmo 450 MX
Ducati Desmo 450 MXimage credit-bikewale.com
Published on

டுகாட்டி (Ducati) நிறுவனம் அதிவேக செயல்திறன், தனித்துவமான வடிவமைப்பு மற்றும் பந்தய பாரம் பரியத்திற்கு புகழ்பெற்ற ஒரு பிரீமியம் மோட்டார் சைக்கிள் உற்பத்தி நிறுவனமாகும். வோக்ஸ்வாகன் குழுமத்தின் (Audi) கீழ் உள்ள இந்நிறுவனம், Panigale, Monster, Multistrada, மற்றும் Scrambler போன்ற மாடல்களுக்கு பெயர் பெற்றது. இந்தியாவில், பெங்களூரு போன்ற நகரங்களில் பெரிய டீலர்ஷிப்களைக் கொண்டு, 2026-ல் 10 புதிய பைக்குகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

இந்த நிறுவனத்தின் பைக்குகள் இத்தாலிய வடிவமைப்பு, சக்திவாய்ந்த எஞ்சின்கள் மற்றும் 'Desmodromic' வால்வு தொழில்நுட்பம் ஆகியவற்றிற்கு பெயர் பெற்றது. டுகாட்டி மோட்டார் சைக்கிள்கள் வேகம், நுணுக்கம் மற்றும் சிக்கலான தொழில்நுட்பத்தின் சங்கமமாக கருதப்படுகிறது. மேலும் ரேஸ் பிரியர்களுக்காக உருவாக்கப்படும் இந்த பைக் உலகளவில் பெயர் பெற்றது.

இந்நிலையில் டுகாட்டி நிறுவனம், டெஸ்கோ 450 எம்.எக்ஸ்.(Ducati Desmo 450 MX) என்ற புதிய ரேசிங் மோட்டர் சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. டெஸ்கோ 450 எம்.எக்ஸ். என்பது டுகாட்டியின் முதல் மோட்டோகிராஸ் (Motocross) பைக் ஆகும்.

இதையும் படியுங்கள்:
Kawasaki-ன் சிறந்த ஆல்-ரவுண்டர் ஸ்போர்ட்ஸ் பைக் 'Ninja 650'..!
Ducati Desmo 450 MX

இந்த பைக் ரேசிங் பயன்பாட்டிற்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளதால், இதனைப் பொதுச் சாலைகளில் ஓட்ட முடியாது என்பதை வாடிக்கையாளர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று நிறுவனம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. அதாவது மிகவும் சவாலான ஆஃப்-ரோடு நிலப்பரப்புகளில் அதீத செயல்திறன் கொண்ட பைக்கை ஓட்ட விரும்பும் தொழில்முறை மோட்டோகிராஸ் வீரர்கள் மற்றும் பந்தய ஆர்வலர்களை இலக்காகக் கொண்டு இந்த பைக் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் நவீன கால ரேஸ் வீரர்களுக்குத் தேவையான பல முக்கிய தொழில்நுட்ப வசதிகள் இந்த பைக்கில் இடம்பெற்றுள்ளன.

ஆஃப்-ரோடு மற்றும் ரேசிங் பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மாடலில் 449.6cc, திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர் டெஸ்மோட்ரோமிக் என்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 62 பிஎச்பி பவரையும், 9,400 rpm மற்றும் 53.5 Nm டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இதனுடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. கரடுமுரடான சாலைகளில் கூட நம்பிக்கையுடன் ஓட்டுவதற்கு வலுவான அலுமினியம் பிரேம்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

முன்பக்கத்தில் 260 மிமீ டிஸ்க் மற்றும் பின்பக்கத்தில் 240 மிமீ டிஸ்க் ஆகியவை பிரேக்கிங்கைக் கையாளுகின்றன. கரடுமுரடான பாதைகளில் சிறந்த நிலைத்தன்மையை வழங்குவதற்காக இந்த பைக்கின் முன்பக்கத்தில் 310mm டிராவல் கொண்ட 49mm Showa USD போர்க்குகளும், பின்பக்கத்தில் 129mm டிராவல் கொண்ட சஸ்பென்ஷனும் வழங்கப்பட்டுள்ளன.

உயர் செயல்திறன் கொண்ட ரேசிங் பைக்கில் அகிராபோவிக் (Akrapovič) எக்ஸாஸ்ட், ரைடிங் மோடுகள், டிராக்ஷன் கன்ட்ரோல் மற்றும் லான்ச் கன்ட்ரோல், Wi-Fi மாட்யூல் மற்றும் 104 கிலோ எடை போன்ற சிறந்த அம்சங்களைக் கொண்டுள்ளது.

MotoGP மற்றும் WorldSBK சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்ற Ducati-ன் ரேசிங் பைக்குகளின் தொழில்நுட்ப அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு Ducati Desmo 450 MX மோட்டார் சைக்கிள் உருவாக்கப் பட்டுள்ளது.

2026-ம் ஆண்டிற்கான வரையறுக்கப்பட்ட மாடல்கள் (Limited Edition) சந்தைக்கு வந்துள்ள நிலையில் இந்தியாவில் சுமார் ரூ.17.23 லட்சம் (ஷோரூம் விலை) என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
வேகத்தின் உச்சம்: பந்தயக் களத்திற்காகவே பிறந்த ரேசிங் பைக்!
Ducati Desmo 450 MX

இந்த டுகாட்டி டெஸ்மோ 450 எம்.எக்ஸ் பைக், டெல்லி, பெங்களூரு, சென்னை மற்றும் புனே உள்ளிட்ட இந்தியாவில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு டுகாட்டி டீலர்ஷிப்களில் மட்டுமே கிடைக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com