வேகத்தின் உச்சம்: பந்தயக் களத்திற்காகவே பிறந்த ரேசிங் பைக்!

அதிநவீன பைக்குகளை வடிவமைக்கும் கே.டி.எம். நிறுவனம் தனது புதிய மேம்படுத்தப்பட்ட 990 ஆர்சிஆர் டிராக் மோட்டர் சைக்கிளை (2026 KTM 990 RC R Track) இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தி உள்ளது.
2026 KTM 990 RC R Track
2026 KTM 990 RC R Trackimage credit- turbocharged.in
Published on

கே.டி.எம். (KTM) என்பது 1934-ல் ஆஸ்திரியாவில் தொடங்கப்பட்ட, பந்தயத் தரத்திலான பைக்குகளுக்குப் புகழ்பெற்ற முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமாகும். இந்தியாவில் 2007 முதல் பஜாஜ் ஆட்டோவுடன் (Bajaj Auto) கூட்டு சேர்ந்து, சாகச மற்றும் பந்தய பைக்குகளை (Duke, RC, Adventure) தயாரித்து விற்பனை செய்கிறது. தற்போது பஜாஜ் ஆட்டோ, கே.டி.எம். நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளைக் கொண்டுள்ளது.

இந்தியாவின் மகாராஷ்டிராவில் உள்ள சக்கன் ஆலையில் சிறிய ரக கே.டி.எம். பைக்குகள் தயாரிக்கப்பட்டு, உலகெங்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கே.டி.எம். பைக்குகள் அவற்றின் அதிரடி வேகம், அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் தனித்துவமான ஆரஞ்சு நிற வடிவமைப்பிற்காக இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.

இளைஞர்களை கவரும் வகையில் அதிநவீன பைக்குகளை வடிவமைக்கும் கே.டி.எம். (KTM) நிறுவனம் தனது புதிய மேம்படுத்தப்பட்ட 990 ஆர்சிஆர் டிராக் மோட்டர் சைக்கிளை (2026 KTM 990 RC R Track) இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தி உள்ளது.

இதையும் படியுங்கள்:
Off-road பிரியர்களுக்கு... அதிரடி அம்சங்களுடன் 'KTM 390 Adventure R' வெளியீடு!
2026 KTM 990 RC R Track

அந்த வகையில் 2026 KTM 990 RC R Track என்பது தெருக்களுக்கு ஏற்றது அல்ல, பந்தயங்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு பந்தயத் தடம் (track-only) மோட்டார் சைக்கிள் ஆகும். மேலும் இந்த மாடலில் ஹெட்லைட், டெயில்லைட் மற்றும் டர்ன்-இண்டிகேட்டர்கள் போன்ற கூறுகள், பக்கவாட்டு ஸ்டாண்ட் ஆகியவை அகற்றப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் அனைத்தும் இலகுவாகவும், டிராக்கிற்கு தயாராகவும் மாற்றுவதற்காக செய்யப்படுகின்றன. இது தவிர, சவாரி செய்பவருக்கு மிகவும் ஆக்ரோஷமான மற்றும் உறுதியான சவாரியை வழங்குவதற்கு ஏற்ற வகையில் மாற்றப்பட்டுள்ளது.

இந்த பைக்கிற்கு சக்தி அளிப்பது அதே 947cc, திரவ-குளிரூட்டப்பட்ட, இணை-இரட்டை (DOHC பேரலல் ட்வின்)மோட்டார் ஆகும், இது 135bhp (10,000 RPM)பவரையும் மற்றும் 105 என்.எம். (7,000 RPM)டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. இது வழக்கமான KTM 990 RC R ஐ விட 5bhp மற்றும் 3Nm அதிகம். அதிக எடை குறைப்பை அடைய KTM இலகுரக அக்ரபோவிக் எக்ஸாஸ்ட்டையும் பயன் படுத்தியுள்ளது.

ஸ்டாண்டர்டு மாடலுடன் ஒப்பிடும்போது, இந்த பதிப்பில் அதிக திறன் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. ரேசிங் கியர் பாக்ஸ், மிச்சலின் பவர் ஸ்லிக் டயர்கள், டபிள்யூ.பி.ஏபெக்ஸ் சஸ்பென்ஷன், அட்ஜஸ்டபிள் ஸ்டீயரிங் டேம்பர், இரு சக்கரங்களிலும் பிரெம்போ (Brembo) பிரேக்குகள் மற்றும் ட்ராக்-ஸ்பெக் எலக்ட்ரானிக்ஸ் (3 Custom Modes) உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

KTM 990 RCR பைக்கில் உள்ள சஸ்பென்ஷன் இரு முனைகளிலும் WP Apex யூனிட்களைக் கொண்டுள்ளது, முழு சரிசெய்தல் வசதியுடன், ரைடர்ஸ் டிராக்-லெவல் பயன்பாட்டிற்கு தங்கள் விருப்பப்படி அமைப்புகளை மாற்றலாம். அகிராபோவிக் (Akrapovič) எக்ஸாஸ்ட் மற்றும் ரேஸ்-ஸ்பெக் ஏரோடைனமிக்ஸ், வலுவான, 320 மிமீ பிரெம்போ 4-பிஸ்டன் காலிப்பர்களும் பொருத்தப் பட்டுள்ளன. பிரேக்கிங் அமைப்பில் பிரெம்போ ஹைப்யூர் காலிப்பர்களுடன் 320mm முன் மற்றும் 240mm பின்புற டிஸ்க் பிரேக் உள்ளது. இது மிச்செலின் பவர் ஸ்லிக் டயர்களிலும் இயங்குகிறது. அட்வென்சர் மோட்டார் சைக்கிள் என்பதால் அதற்கேற்ப சஸ்பென்ஷன் வடிவமைக்கப் பட்டுள்ளது.

அம்சம் வாரியாக, KTM 990 RC R டிராக்கில் 4.2-இன்ச் TFT கன்சோல் உள்ளது. இதில் லாஞ்ச் கண்ட்ரோல், வீலி கண்ட்ரோல், டிராக்ஷன் கண்ட்ரோல், வீல் ஸ்லிப், என்ஜின் பிரேக்கிங் கண்ட்ரோல் மற்றும் தனிப்பயன் டிராக் மோடுகள் கூட அடங்கும்.

ஒட்டுமொத்தமாக, இந்த மாற்றங்களுடன், KTM 990 RC R டிராக் வழக்கமான 990 RC R ஐ விட 14 கிலோ எடை குறைவாக உள்ளது. இந்த குறிப்பிடத்தக்க எடை குறைப்பு, மற்ற மாற்றங்களுடன், இந்த பைக் சாகச ரைடர்களுக்கு மிகவும் திறமையானதாக மாற்றும் என்பதில் சந்தேகமில்லை.

அதேபோல் கே.டி.எம். நிறுவனம் டியூக் 200 மாடலில் புதிய ‘அத்லெட்டின் நீலம்’ நிறத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த மாடல் ஆரஞ்சு, கருப்பு மறறும் சில்வர் நிறங்களிலும் கிடைக்கிறது. புதிய பதிப்பில் அத்லெட்டிக் நீலம் மற்றும் ஆரஞ்சு நிற கிராபிக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
Kawasaki-ன் சிறந்த ஆல்-ரவுண்டர் ஸ்போர்ட்ஸ் பைக் 'Ninja 650'..!
2026 KTM 990 RC R Track

இந்த பைக்கில் 199.5 சி.சி. என்ஜின் உள்ளது. இது அதிகபட்சமாக எச்.பி. பவரையும், 19.3 என்.எம். டார்க்கையும் வழங்கும். 6-ஸ்பீடு கியர் பாக்ஸுடன் வரும் இந்த மாடலின் ஷோரூம் விலை சுமார் ரூ.1.94 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com