

உங்களால் சுலபமாகச் சம்பாதிக்க முடியுமா? எளிதாகவோ அல்லது சிரமப்பட்டோ பணம் சம்பாதிக்கும் ஒருவரின் திறன், பெரும்பாலும் அவர்களின் உள் மனப்பான்மைகளையும் (internal attitudes), வெளிச் சூழ்நிலைகளையும் (external circumstances) பொறுத்தே இருக்கிறது. பணத்தை எளிதாக சம்பாதிக்க திறன் உள்ளவர்கள்; பொதுவாக தன்னம்பிக்கையோடும், முடிவெடுப்பதில் தெளிவு, மற்றும் தங்களின் தொடர்ச்சியான செயல்களில் ஒரு உந்தலோடு செயல்பட்டு இருப்பர்.
அவர்கள் பெரும்பாலும் மன ஆற்றல், நன்னம்பிக்கை (optimism), மற்றும் மீள்தன்மை (resilience) பெற்றிருப்பார்கள்; காரணம் இவை அறிவியல் ரீதியாக ஒருவரின் உற்பத்தித்திறன்(productivity), சிக்கல் தீர்க்கும் குணத்தை வெளிப்படுத்துகிறது. வெளிப்புறத்தில் (Externally) அத்தகைய நபர்கள் வாய்ப்புகளை விரைவாகக் கண்டறிவார்கள், தங்களுக்கான ஒரு வலுவான தொடர்புகளை (strong networks) உருவாக்கிக்கொள்வார்கள் மற்றும் மாறிவரும் சூழல்களுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்வது போன்றவற்றில் மும்முரமாக இருப்பார்கள்.
நீங்கள் சம்பாதிக்கக் கஷ்டப்படுவீங்களா?
பணம் சம்பாதிக்கச் சிரமப்படுபவர்கள் பெரும்பாலும் மன அழுத்தம், தன்னம்பிக்கையின்மை, அல்லது சோர்வு போன்ற உள் அறிகுறிகளை உணர்கிறார்கள். இந்த மனநிலைகள் கவனத்தையும், படைப்பாற்றலையும் குறைத்து; வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வதை கடினமாக்குகின்றன. இந்தச் சிரமங்கள் அவர்களின் வருங்காலங்களில் அடிக்கடி ஏற்படும் பின்னடைவுகள், நிலையற்ற வருமான ஆதாரங்கள், அல்லது தொழில்முறை உறவுகளை சீர்குலைகிறது(difficulty in professional relationships) பின் சம்பாதிப்பதையும் கடினமாகலாம்.
நடத்தைசார் பொருளாதாரத்தில் (behavioral economics) மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள்படி; மன அழுத்தமும், நிச்சயமற்ற தன்மையும் (uncertainty) அவர்களின் கவனத்தை சுருக்கச் செய்யுமாம். இறுதியில் இது ஒருவரின் நிதி நிலையை மேம்படுத்தக்கூடிய வாய்ப்புகளைத் தவறவிடச் செய்கின்றன என்பதைக் காட்டுகின்றன.
வயதிற்கேற்ப இது மாறுபடுமா?: இந்த அறிகுறிகள் வயதுப் பிரிவுகளுக்கு ஏற்ப மாறுபடுகின்றன. இளம் வயதினர் (18–30) பெரும்பாலும் ஆற்றலுடனும், லட்சியத்துடனும் காணப்படுவார்கள்; ஆனால் அனுபவமின்மை அல்லது நிதி ஒழுக்கமின்மை(financial discipline) காரணமாகச் சிலர் சிரமப்படலாம். நடுத்தர வயதுடையவர்கள் (31–50) பொதுவாக தன்னம்பிக்கை யையும், பொறுப்புணர்வையும் சமநிலைப்படுத்து கிறார்கள்; அவர்கள் மன அழுத்தத்தை நன்கு கையாண்டால் சீராக சம்பாதிக்கமுடியும். ஆனால், குடும்ப அல்லது தொழில் ரீதியான அழுத்தங்கள் இடையில் சிரமங்களை உருவாக்கக்கூடும்.
முதியவர்கள் (51 மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்) தாங்கள் திரட்டிய திறன்கள், தொடர்புகள் அல்லது முதலீடுகளைச் சார்ந்திருந்தால் சம்பாதிப்பது எளிதாக இருக்கலாம். ஆனால், உடல் சோர்வு அல்லது புதிய தொழில்நுட்பங்களை ஏற்க மறுப்பது பணம் சம்பாதிப்பதை மிகவும் சவாலானதாக மாற்றக்கூடும். சம்பாதிக்கக் கஷ்டப்படுபவர்கள் எப்படி மீண்டு வரலாம்?
பணம் சம்பாதிக்கச் சிரமப்படுபவர்கள் பகுதி நேர வேலை (part‑time work), சுயதொழில் அல்லது தங்களின் திறன் சார்ந்த சேவைகள் மூலம் வரும் சிறிய, நிலையான வருமான வழிகளில் கவனம் செலுத்தினால் இந்நிலையை மாற்றலாம். அதேசமயம் அவர்கள் தங்கள் நிதியை நிலைப்படுத்தவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் தேவையற்ற செலவுகளைக் குறைக்கவேண்டும்.
இதோடு குறுகிய காலப் படிப்புகள் அல்லது இணையவழிக் கற்றல் மூலம் நடைமுறைக்கு தேவையான திறன்களை வளர்த்துக்கொள்வது. கடினமான காலக்கட்டங்களில்கூட அவர்களை மேலும் போட்டித்தன்மை மிக்கவர்களாக மாற்ற உதவுகிறது. இறுதியாக சக வயதினர், சில வழிகாட்டிகளுடன்(mentors) தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வது; இதுவரை உங்களுக்குப் புலப்படாத வாய்ப்புகளுக்கான (New opportunities) கதவுகளைத் தீர்க்கலாம், சம்பாதிக்க வேண்டிய போராட்டத்தையும் படிப்படியாகக் குறைக்கலாம்.