மார்க்கெட்டை கலக்க வந்துள்ள ‘Honda ZR-V’: பிரீமியம் தோற்றம், மைலேஜ்... காரின் சிறப்பம்சங்கள் இதோ!

22.8 கி.மீ மைலேஜ், லெவல்-2 ADAS பாதுகாப்புடன் கூடிய ஹோண்டாவின் புதிய பிரீமியம் மாடல்!
Honda ZR-V |ஹோண்டா இசட்.ஆர்-வி
Honda ZR-V |ஹோண்டா இசட்.ஆர்-விimage credit-global.honda
Updated on

ஹோண்டா நிறுவனம் தனது புதிய முதன்மை பிரீமியம் ஹைப்ரிட் எஸ்யூவி இசட்.ஆர்-வி (Honda ZR-V) மாடலை இந்தியாவில் ரூ.48 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் இந்தியாவில் ஆயத்த இறக்குமதி (Readymade Imports) செய்யப்பட்ட மாடலாக விற்பனை செய்யப்படுவதால் இதன் விலை மிகவும் அதிகமாக உள்ளது. மேலும் ஜப்பானில் இருந்து முழுமையாக தயாரிக்கப்பட்ட (CBU) மாடலாக இறக்குமதி செய்யப்படுவதால், ஆரம்ப கட்டத்தில் குறைந்த எண்ணிக்கையிலான கார்களே இந்தியாவுக்கு கொண்டு வரப்படுகின்றன. இருப்பினும் ஹோண்டா ZR-V ஹைபிரிட் எஸ்யூவிக்கு எதிர்பார்த்ததை விட அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த காரில், 2 லிட்டர், 4 சிலிண்டர், ஸ்ட்ராங் ஹைபிரிட் பெட்ரோல் இன்ஜின் வருகிறது. இந்த இன்ஜின், 'இ - சி.வி.டி.,' என்ற ஆட்டோ கியர்பாக்சில் இணைக்கப் பட்டுள்ளது. இரண்டு மின் மோட்டார்களுடன் இணைந்து செயல்படும் இந்த அமைப்பு 184 குதிரைத்திறன் மற்றும் 315 நியூட்டன் மீட்டர் இழுவிசை வழங்குகிறது. இதனுடன் இ-சிவிடி தானியங்கி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு லிட்டர் எரிபொருளுக்கு 22.8 கி.மீ. வரை மைலேஜ் தருவதாக ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. நகரப் பயன்பாட்டில் அதிக நேரம் எலக்ட்ரிக் மோடில் இயங்கும் வகையில் இந்த ஹைபிரிட் அமைப்பு வடிவமைக்கப்பட்டிருப்பதால், செயல்திறனும் எரிபொருள் சிக்கனமும் சமநிலையாக கிடைக்கும். பொதுவாக, கனரக சொகுசு வாகனங்கள் அதிக பெட்ரோலை பயன்படுத்தும் நிலையில், இந்த ஹைப்ரிட் தொழில்நுட்பமானது நகரப் பயணம் மற்றும் நெடுஞ்சாலைப் பயணம் ஆகிய இரண்டிற்கும் கணிசமான எரிபொருள் சேமிப்பை வழங்கும் திறன் கொண்டது.

வடிவமைப்பை பொறுத்தவரை, வழக்கமான எஸ்யுவி தோற்றத்தில் இருந்து மாறுபட்டு கிராஸ்ஓவர் பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது. 4.6 மீட்டர் நீளம் உள்ள இந்த காரில், மெல்லிய எல்இடி முகப்பு விளக்குகள், 18 அங்குல அலாய் சக்கரங்கள், டூயல் எக்ஸாஸ்ட் அமைப்பு மற்றும் நான்கு வண்ணத் தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

உட்புறத்தில் முழுக்க கருப்பு நிற வடிவமைப்பு, 9 அங்குல தொடுதிரை, 10.25 அங்குல முழு டிஜிட்டல் ஓட்டுனர் திரை, 12 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், அடாஸ் லெவல் 2, இரட்டை மண்டல தானியங்கி குளிர்சாதன வசதி, மின்சார முறையில் இயங்கும் முன் இருக்கைகள், ஒயர்லெஸ் போன் இணைப்பு வசதி மற்றும் சார்ஜிங், மின்சார டிக்கி கதவு மற்றும் ஆம்பியன்ட் விளங்குகள் போன்ற பல்வேறு சிறப்பு வசதிகள் இடம் பெற்றுள்ளன.

Honda ZR-V|ஹோண்டா இசட்.ஆர்-வி
Honda ZR-V|ஹோண்டா இசட்.ஆர்-விimage credit-honda.cz

பாதுகாப்பு அம்சங்களில் லெவல்-2 ஓட்டுநர் உதவி அமைப்பு (ADAS), 360 டிகிரி கேமரா, 8 ஏர் பேக்குகள், டயர் காற்றழுத்த கண்காணிப்பு, ஹோண்டா சென்சிங் ஏடிஏஎஸ் (Honda SENSING ADAS) பாதுகாப்புத் தொகுப்பு மற்றும் மலைப்பாதை ஏற்றம்-இறக்கம் உதவி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதையும் படியுங்கள்:
அட்டகாசமான புதிய வடிவமைப்புடன் அறிமுகமாகும் ‘ஹோண்டா ஷைன் 100 DX’
Honda ZR-V |ஹோண்டா இசட்.ஆர்-வி

Honda Sensing ADAS தொகுப்பின் கீழ் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் (Adaptive Cruise Control) முன்புற வாகனத்தின் வேகத்திற்கு ஏற்ப தானாகவே வேகத்தை மாற்றும். கொலிஷன் மிட்டிகேஷன் பிரேக்கிங் (Collision Mitigation Braking System) மோதல் அபாயத்தை கண்டறிந்து தானாகவே பிரேக் பயன்படுத்தும்.

இருப்பினும், அதன் விலைக்கேற்ப, பனோரமிக் சன்ரூப், குளிர்விக்கும் மற்றும் மசாஜ் வசதியுள்ள முன் இருக்கைகள் போன்ற அம்சங்கள் இதில் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், ஜப்பானிய அதிநவீன தொழில்நுட்பத்தின் நம்பகத்தன்மை, உயர்தர ஹைபிரிட் எஸ்யூவி வாங்க திட்டமிடுபவர்கள், நீண்ட கால நம்பகத்தன்மை மற்றும் எரிபொருள் சிக்கனத்தை எதிர்பார்ப்பவர்கள், அதிக தொழில்நுட்ப வசதிகள் மற்றும் சாலையில் ஒரு தனித்துவமான தோற்றத்தை விரும்பும் பயனர்களுக்கு இது ஒரு சிறந்த ப்ரீமியம் தேர்வாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஹோண்டா இசட்.ஆர்-வி ஹைபிரிட் எஸ்யூவிக்கு எதிர்பார்த்ததை விட அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. வெளிநாட்டிலிருந்து (CBU) இறக்குமதி செய்யப்படுவதால், இதன் முதல் கட்ட முன்பதிவுகள் உடனடியாக விற்று தீர்ந்துவிட்டன.

இதையும் படியுங்கள்:
வாவ்.. ஒரே நேரத்தில் 10 புதிய பைக்குகள்: வாகன சந்தையை அதிர வைத்த ஹோண்டா!
Honda ZR-V |ஹோண்டா இசட்.ஆர்-வி

மொத்தம் நான்கு நிறங்களில் வரும் ஹோண்டா இஸட்.ஆ-வி மாடல் காருக்கு, 3 ஆண்டு கார் உத்தரவாதமும், 8 ஆண்டு அல்லது 1.60 லட்சம் கி.மீ., பேட்டரி உத்தரவாதமும் வழங்கப்படுவதாக நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த புதிய ஹோண்டா இசட்.ஆ-வி (Honda ZR-V), Skoda Kodiaq, Volkswagen Tayron and Tiguan போன்ற பிரீமியம் எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியாக களமிறங்கியுள்ளது.

இந்த கட்டுரை மூலம் ஹோண்டா ZR-V காரின் இன்ஜின் திறன், மைலேஜ், பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் இறக்குமதி விவரங்களை முழுமையாக அறிந்துகொண்டு, உங்கள் அடுத்த சொகுசு கார் தேர்வை மிகச் சரியாக தீர்மானிக்க முடியும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.

Reference:

logo
Kalki Online
kalkionline.com