வருமான வரி நோட்டீஸை அலட்சியப்படுத்தினால் என்ன நடக்கும்? முழு விவரம்!

இன்கம் டாக்ஸ் நோட்டீஸை மிஸ் பண்ணா ஜெயில் வரை போக நேரிடும்!
வருமான வரி (Income Tax) - Income Tax Notice,
வருமான வரி (Income Tax) - Income Tax Notice,
கே.எஸ்.கிருஷ்ணவேனி

"கே.எஸ்.கிருஷ்ணவேனி, வைஷ்ணவ் கல்லூரியின் முன்னாள் மாணவி. கல்கி, மங்கையர் மலர், விகடன் போன்ற இதழ்கள் மற்றும் நாவல்களை படித்து, எழுதும் ஆர்வமும் மேலோங்க, 1992-ல், சமையல் குறிப்புகள் குறித்த சிறு கட்டுரைகளை எழுதத் தொடங்கினார். அவை 'மங்கையர் மலர்' ​​இதழில் தொடர்ந்து வெளியாகின. மேலும் பல இதழ்களில் எழுதிப் பல பரிசுகளை வென்றுள்ளார். 'பட்டிமன்றங்களில்' பங்கேற்ற அனுபவமும் உண்டு. தற்போது கல்கி ஆன்லைனில் எழுதி வருகிறார். ஆர்வம் மிக்கவர். பல்வேறு பிரிவுகளில் பல தலைப்புகளில் சுவாரஸ்யமான கட்டுரைகளை எழுத வல்லவர். மிக விரைவாக எழுதவும் கூடியவர்."

Updated on: 

வருமான வரித்துறை இந்த டிஜிட்டல் உலகத்தில் மின்னஞ்சல் மூலம் வருமான வரி நோட்டீசை அனுப்புவது வழக்கம். வரி செலுத்துபவர்கள் அந்த நோட்டீசை கவனித்து அதற்கு பதில் அளிக்க வேண்டும். ஒருவேளை வரி செலுத்துபவர்கள் வருமான வரித் துறையின் நோட்டீசை கவனிக்க தவறினால் பல சிக்கல்கள் ஏற்படும்.

வருமான வரித் துறையிடமிருந்து (Income Tax Department) வரும் நோட்டீசை கவனிக்காமல் விட்டாலோ அல்லது அதற்கு பதில் அளிக்கத் தவறினாலோ கடுமையான அபராதம், கணக்கு முடக்கம் மற்றும் சட்டரீதியான சிறை தண்டனை போன்ற கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்.

தற்போது வருமானவரித்துறை அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதால், மின்னஞ்சல் (E-mail) மற்றும் எஸ்எம்எஸ் (SMS) மூலமாகவே நோட்டீஸ்களை அனுப்புகிறது. இந்த நோட்டீஸ்களை புறக்கணித்தால் அல்லது அலட்சியப்படுத்தினால் எதிர்கொள்ள வேண்டிய முக்கிய விளைவுகள் மற்றும் சிக்கல்கள் பற்றி இப்பதிவில் காணலாம்.

ஒரு தலைபட்சமான வரி விதிப்பு:

நாம் பதிலளிக்காத பட்சத்தில் பிரிவு 144ன் கீழ் வருமான வரி அதிகாரிகளே தன்னிச்சையாக நம்மிடம் உள்ள தரவுகளின் அடிப்படையில் நம்முடைய உண்மையான வருமான விவரங்களை அறிந்துகொண்டு வரியைக் கணக்கிடுவார்கள். இது பொதுவாக நாம் செலுத்தவேண்டிய தொகையைவிட மிக அதிகமாக இருக்கும். நம் தரப்பு விளக்கத்தைக் கேட்காமலேயே பெரிய தொகையை வரியாகச் செலுத்தும்படி உத்தரவு பிறப்பிக்கப்படலாம்.

பெரும் நிதி அபராதம் (Heavier Penalties):

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பதில் அளிக்கத் தவறினால், வருமான வரிச் சட்டங்களின் கீழ் கூடுதல் வட்டியுடன் அபராதம் விதிக்கப்படும். நோட்டீசைப் புறக்கணிக்கும் ஒவ்வொரு முறைக்கும் பிரிவு 272A(1)ன் கீழ் ரூபாய் 10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம். வருமானத்தை மறைத்திருப்பது உறுதியானால், செலுத்தவேண்டிய வரியுடன் சேர்த்து 50% முதல் 200% வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

வருமான வரி (Income Tax) - Income Tax Notice,
வருமான வரி (Income Tax) - Income Tax Notice,

வட்டி மற்றும் ரீஃபண்ட் முடக்கம் (Interest & Loss of Refunds):

நிலுவையில் உள்ள வரித்தொகைக்கு மாதாந்திர வட்டி (பிரிவு 234A/B/C) கணக்கிடப்பட்டு அசல் தொகையை விடப் பல மடங்கு உயரும். அத்துடன் நமக்கு வரவேண்டிய வருமானவரி ரீஃபண்ட் ஏதேனும் இருந்தால், அது உடனடியாக நிறுத்தப்பட்டு நிலுவை வரியுடன் சரி செய்யப்படும்.

வங்கி கணக்கு மற்றும் சொத்துக்கள் முடக்கம் (Asset Attachment):

தொடர்ந்து நோட்டீஸ்களை புறக்கணித்தால் வரித்துறை நிலுவை வரியை வசூலிக்க நம் வங்கி கணக்குகளை முடக்க உத்தரவிடலாம். மிகத் தீவிரமான சூழ்நிலைகளில் நிலுவை வரியை வசூலிக்க நம்முடைய அசையும்/அசையா சொத்துக்களைப் பறிமுதல் செய்யவும் சட்டத்தில் இடம் உண்டு.

சட்டரீதியான வழக்கு மற்றும் சிறை தண்டனை (Prosecution):

வரியை செலுத்தாமல் திட்டமிட்டு ஏமாற்றுவது நிரூபிக்கப்பட்டால், பிரிவு 276Cன் கீழ் குற்றவியல் வழக்கு தொடரட்டும். ரூபாய் 25 லட்சத்திற்குள் வரி ஏய்ப்பு நிரூபிக்கப்பட்டால் 3 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூபாய் 25 லட்சத்திற்கு மேல் வரி ஏய்ப்பு நிரூபிக்கப்பட்டால் 6 மாதங்கள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

உடனடியாக செய்யவேண்டியவை:

நோட்டீஸ் வந்தால் அது சாதாரணத் தகவலுக்கானதா (பிரிவு 143(1)), திருத்தப்பட்ட கணக்கிற்கானதா (பிரிவு 139(9)) அல்லது வரி ஏய்ப்பு புகாரா (பிரிவு 148) என்பதை பார்க்கவேண்டும்.

நோட்டீஸில் குறிப்பிட்டுள்ள கடைசி தேதிக்கு முன்பாக வருமான வரி இணையதளத்தில் லாகின் செய்து பதிலளிக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
வங்கிக்கணக்கில் 10 லட்சம் டெபாசிட் செய்தால் ஐடி நோட்டீஸ் வருமா? வருமான வரித்துறையின் புதிய விதிகள்!
வருமான வரி (Income Tax) - Income Tax Notice,

நோட்டீஸ் சொல்வது சரி என்றால் நிலுவை வரியைச் செலுத்தி கணக்கை சரி செய்யவேண்டும்.

எனவே ஏதேனும் நோட்டீஸ் வந்திருந்தால் பயப்படாமல் வருமானவரித் துறையின் e-Filing Portal தளத்திற்குச் சென்று 'Pending Actions' -> 'e-Proceedings' பகுதி வழியே அதன் உண்மைத்தன்மையை சரிபார்த்து, அதற்குரிய காலக்கெடுவிற்குள் (பொதுவாக 15 நாட்களுக்குள்) தேவையான ஆவணங்களுடன், தகுந்த தணிக்கையாளர் (Chartered Accountant) உதவியுடன் ஆன்லைனிலேயே பதிலளிக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
FD வட்டிக்கு இனி TDS பிடிக்கக்கூடாதா? 15G, 15H ரத்து: புதிய Form 121 பற்றி தெரியுமா?
வருமான வரி (Income Tax) - Income Tax Notice,
logo
Kalki Online
kalkionline.com