ஹைபிரிட் + டீசல் பவர்! 29 ADAS பாதுகாப்பு அம்சங்களுடன் களமிறங்கிய ‘Kia Sorento’!

கியா நிறுவனம் தனது புதிய சொரெண்டோ (Kia Sorento) எஸ்யூவி (SUV) காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது.
கியா சொரெண்டோ
கியா சொரெண்டோ image credit-autocarindia.com
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on

கியா நிறுவனம் தனது புதிய சொரெண்டோ (Kia Sorento) 7-சீட்டர் எஸ்யூவி (SUV) காரை இந்தியாவில் ரூ.27.99 லட்சம் தொடக்க எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் உயர்ரக மாடலின் விலை ரூ. 40.39 லட்சம் வரை செல்கிறது (சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை).

செல்டோஸுக்கு மேலாக நிலைநிறுத்தப்பட்டுள்ள சொரெண்டோ, இந்தியாவில் கியாவின் முதன்மை பெட்ரோல் மற்றும் டீசல் எஸ்யூவி மாடலாகும். 6 மற்றும் 7 இருக்கை அமைப்புகளில் இது கிடைக்கிறது.

சொரெண்டோவில் 1.6 லிட்டர் பெட்ரோல் ஸ்ட்ராங் ஹைப்ரிட் (Hybrid) மற்றும் 2.2 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் என இரண்டு பவர்டிரெய்ன் தேர்வுகளில் வழங்கப்படுகிறது. ஹைபிரிட் மாடலில் பெட்ரோல் என்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் இணைந்து 238 ஹெச்பி பவர் வழங்குகின்றன.

கியா சோரெண்டோ (Kia Sorento) 2.2 லிட்டர் டர்போ-டீசல் எஞ்சின் 192bhp ஆற்றலையும் 442Nm டார்க் (torque) திறனையும் வெளிப்படுத்துகிறது. இது 8-ஸ்பீடு DCT டிரான்ஸ்மிஷன் அமைப்பைக் கொண்டுள்ளது; தற்போது மேனுவல் கியர்பாக்ஸ் வசதி இல்லை.

டீசல் என்ஜின் 193 ஹெச்பி பவர் மற்றும் 442 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுகிறது. ஹைபிரிட் மாடலில் ஆல்வீல் டிரைவ் வசதி கிடைக்கிறது. டீசல் மாடலின் உயர்நிலை வேரியண்டிலும் ஆல் வீல் டிரைவ் (AWD) வசதியைக் கொண்டுள்ளது.

இதில் கார்னிவல் பாணியிலான முகப்பு விளக்குகள், வெளிப்புறத்தில் நேர்த்தியான, செங்குத்தான எல்இடி ஹெட்லைட்டுகள் (LED DRL), டைகர்-நோஸ் கிரிஸ் மற்றும் 18 அங்குல அலாய் வீல்கள் இடம்பெற்றுள்ளன.

பக்கவாட்டில் பார்க்கும்போது, ​​அதன் பெரிய இரு-வண்ண அலாய் சக்கரங்கள், எஸ்.யு.வி. (SUV) தோற்றம், அகலமான வீல் ஆர்ச்சுகள் மற்றும் கருப்பு நிற ரூஃப் ரெயில்கள் (black roof rails) ஆகியவை தனித்துவமான அம்சங்களாகத் தெரிகின்றன.

உட்புறத்தைப் (கேபின்) பொறுத்தவரை, கியா சோரெண்டோ (Kia Sorento) வாகனமானது, 12.3 அங்குல இரட்டைத்திரை கொண்ட டேஷ்போர்டு, HUD திரை, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஹெட்-அப் டிஸ்பிளே, பனோரமிக் சன்ரூப், வென்டிலேட்டட் முன் மற்றும் இரண்டாம் வரிசை இருக்கைகள், 12 ஸ்பீக்கர்களைக் கொண்ட போஸ் (Bose) சவுண்ட் சிஸ்டம் மற்றும் ஜெனரேட்டிங் ஏஐ குரல் வழி கட்டளைகள் (GenAI) உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

இதில் 12 ஸ்பீக்கர்களைக்கொண்ட 'போஸ்' (Bose) ஒலி அமைப்பும், ஜெனரேட்டிவ் ஏஐ (GenAI) குரல் கட்டளை வசதியும் இடம்பெற்றுள்ளன.

கேபின் முழுவதும் கையுறை வைக்கும் பெட்டி (glovebox), ஆர்ம்ரெஸ்ட் ஸ்டோரேஜ், பாட்டில் மற்றும் கோப்பை வைப்பதற்கான இடங்கள் உள்ளிட்ட சேமிப்பு வசதிகளும் இதில் உள்ளன.

Kia Sorento  - கியா சொரெண்டோ
Kia Sorento -கியா சொரெண்டோimage credit-carwale.com

மேலும் இது நார்மல் (Normal), ஈக்கோ (Eco), ஸ்மார்ட் (Smart) மற்றும் ஸ்போர்ட் (Sport) ஆகிய நான்கு டிரைவ் மோடுகளையும் கொண்டுள்ளது.

பாதுகாப்புக்காக 7 முதல் 10 ஏர்பேக்குகள் வரை வழங்கப்பட்டுள்ளன. டாப் வேரியண்டில் லெவல்-2 ADAS வசதிகள் (29 தானியங்கி பாதுகாப்பு அம்சங்களுடன்), 360 டிகிரி கேமரா, பிளைண்ட் வியூ மானிட்டர், ரிமோட் பார்க்கிங் அசிஸ்ட், டிஜிட்டல் ரியர் வியூ மிரர் மற்றும் முன் பின் டேஷ்கேம் உள்ளிட்ட மேம்பட்ட பாதுகாப்பு வசதிகளும் இடம்பெற்றுள்ளன.

மேலும் இதில் 12 பார்க்கிங் சென்சார்கள், TPMS, ESC, HAC, VSM மற்றும் முன்பக்க மோதல் எச்சரிக்கை மற்றும் அதைத் தவிர்க்கும் உதவி அமைப்பு ஆகியவை உள்ளன.

இதில் ஸ்மோக்கி பிளாக் மற்றும் கிரே (Smokey Black and Grey), பிரீமியம் பிளாக் மற்றும் ஆலிவ் பிரவுன் (Premium Black and Olive Brown) என இரண்டு இரட்டை வண்ண லெதரெட் (leatherette interior) உட்புற தீம்கள் உள்ளன.

இதையும் படியுங்கள்:
ஒரே சார்ஜில் 647 கி.மீ பயணம்! ஸ்கோடாவின் அதிரடி எலக்ட்ரிக் கார் அறிமுகம்!
கியா சொரெண்டோ

கியா சொரெண்டோவில் 179 லிட்டர் பூட் ஸ்பேஸ் உள்ளது, மூன்றாவது வரிசை இருக்கைகளை மடிப்பதன் மூலம் இதை மேலும் 813 லிட்டராக விரிவுபடுத்தலாம்.

மேலும், இதில் ஸ்மார்ட் பவர் டெயில்கேட் மற்றும் ஆன்டி-பிஞ்ச் சென்சார்கள் இடம்பெற்றுள்ளன.

இதில் 10 விதமாகச் சரிசெய்யக்கூடிய மின்-இயக்க முன் இருக்கைகள், முதல் இரண்டு வரிசைகளிலும் காற்றோட்ட வசதி கொண்ட இருக்கைகள், 10 ஏர்பேக்குகள் மற்றும் 12 ஸ்பீக்கர்களைக் கொண்ட 'போஸ்' (Bose) ஒலி அமைப்பு ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இதையும் படியுங்கள்:
எலெக்ட்ரிக் கார்களுக்கு செக் வைத்த கியா! ரூ.15 லட்சத்தில் கெத்தாக அறிமுகமாகும் சைரோஸ் ‘Syros EV’.
கியா சொரெண்டோ

இந்தியாவில் கியா சோரெண்டோ Gravity Grey, Glacier White Pearl, Imperial Blue, Aurora Black Pearl, Pewter Olive, Magma Red, Ivory Silver, Dark Gun Metal ஆகிய 8 நிறங்களில் கிடைக்கிறது.

Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.

Reference:

logo
Kalki Online
kalkionline.com