

கே.டி.எம் (KTM) என்பது ஆஸ்திரியாவைச் சேர்ந்த, பஜாஜ் ஆட்டோவுடன் (Bajaj Auto) கூட்டு சேர்ந்து இந்தியாவில் இயங்கும் ஒரு முன்னணி இருசக்கர வாகன (பைக்) தயாரிப்பு நிறுவனமாகும்.
2012-ல் அறிமுகமான இந்த நிறுவனம், மஹாராஷ்டிராவின் சாகனில் உள்ள பஜாஜ் ஆலையில் பைக்குகளைத் தயாரித்து, உள்நாட்டு விற்பனை மற்றும் உலகளாவிய ஏற்றுமதி செய்து வருகிறது. டியூக் (Duke), RC மற்றும் அட்வென்ச்சர் (ADV) போன்ற மாடல்கள் மூலம் இந்தியாவில் மிகவும் பிரபலம். கே.டி.எம் பைக்குகள் அவற்றின் அதிரடி செயல் திறன் மற்றும் கையாளுதலுக்காக (handling) அறியப்படுகின்றன, மேலும் இளைஞர்கள் மத்தியில் இந்த நிறுவன இருசக்கர வாகனங்கள் மிகவும் பிரபலமானவை.
இந்நிலையில் கே.டி.எம். நிறுவனம் தீவிர சாகச மோட்டார் சைக்கிள் ஆர்வலர்களுக்காக, 390 அட்வென்சர் ஆர் மோட்டார் சைக்கிளை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
கே.டி.எம். 390 அட்வென்ச்சர் ஆர் என்பது 390 அட்வென்ச்சர் வரிசையில் உள்ள உயர்-ரக மோட்டார் சைக்கிளாகும். இந்த பைக் ஆஃப்-ரோடு பயணங்களுக்கு மிகவும் உகந்த வேரியண்ட் ஆகும், மேலும் இதில் அனைத்து மேம்பட்ட நவீன அம்சங்களும் உள்ளன.
இதில் 399 சி.சி. சிங்கிள் சிலிண்டர் என்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 44 பி.எச்.பி. பவரையும், 39 என்.எம். டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த 390 அட்வென்ச்சர் ஆர் பைக்கின் எடை 183 கிலோ மற்றும் இதன் எரிபொருள் டேங்க் கொள்ளளவு 14 லிட்டர் ஆகும். இந்த பைக்கின் வடிவமைப்பு அதன் பெரிய டேங்க், நீளமான முன்பகுதி மற்றும் மெலிதான பின்பகுதியுடன் மிகவும் பயனுள்ள வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த பைக்கில் க்ரூஸ் கண்ட்ரோல், கார்னரிங் ஏபிஎஸ், டிராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் ஒரு H50 TFT டிஸ்ப்ளே போன்ற பல அம்சங்கள் உள்ளன. இந்த இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் ப்ளூடூத் இணைப்பு மற்றும் நேவிகேஷன் வசதிகள் இடம்பெற வேண்டும்.
இந்த மோட்டார் சைக்கிளில் சஸ்பென்ஷனுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. எண்டி யூரார் ஆர்-ல் உள்ளது போன்று டபுள்யூ அபக்ஸ் 230 எம்.எம். சஸ்பென்ஷன் இடம் பெற்றுள்ளது.
ஸ்டாண்டர்டு மாடலில் முன்புறம் 200 எம்.எம்., பின்புறம் 205 எம்.எம். சஸ்பென்ஷன் இடம்பெற்றிருக்கும்.
அட்வென்சர் மோட்டார் சைக்கிள் என்பதால் அதற்கேற்ப சஸ்பென்ஷன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பிரத்யேகமான கே.டி.எம்., ஆர்-சீரிஸ் வண்ணங்கள், இது மற்ற கே.டி.எம் 390 அட்வென்ச்சர் மாடல்களிலிருந்து இதை வேறுபடுத்தி அறிய உதவுகிறது.
இதேபோல் அட்வென்ச்சர் ஆர், முன்புற சக்கரம் 21 அங்குலம், பின்புற சக்கரம் 18 அங்குல அமைப்பை கொண்டுள்ளது. முன் மற்றும் பின் சக்கரங்களில் டிஸ்க் பிரேக்குகளுடன், கேடிஎம் 390 அட்வென்ச்சர் ஆர் பைக்கில் ஆன்டி-லாக்கிங் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளது. அதாவது அட்வென்ச்சர் ஆர் மாடலில் 30 மிமீ கூடுதல் சஸ்பென்ஷன் டிராவல், 35 மிமீ கூடுதல் கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் ஆஃப்-ரோடு பயன்பாட்டிற்காக உகந்ததாக்கப்பட்ட டியூப் கொண்ட ஸ்போக் சக்கரங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இதன் விளைவாக, இருக்கையின் உயரமும் 50 மிமீ அதிகரித்துள்ளது. தற்போது பெரும்பாலான மோட்டார் சைக்கிள்களில் டியூப்லெஸ் டயர்கள்தான் இடம் பெற்றுள்ளன. ஆனால் இதில் டியூப் டயர்கள் உள்ளன.
மொத்தத்தில் 390 அட்வென்சர் ஆர் இந்தியாவில் விற்கப்படும் மிகவும் தீவிரமான சிறிய திறன் கொண்ட ஆஃப்-ரோடு சாகச மோட்டார் சைக்கிள்களில் ஒன்றாகும்.
இது ஒரே ஒரு வேரியண்ட் மற்றும் ஒரு வண்ணத்தில் மட்டுமே கிடைக்கிறது. இந்த பைக்கின் ஷோரூம் விலை சுமார் ரூ.3.78 லட்சம். அட்வென்சர் எஸ் மோட்டார் சைக்கிளை விட விலை குறைவு.