

பிசினஸ் மற்றும் தொழில்முறை வாழ்வில் மிகப்பெரிய வெற்றி பெற பேரம் பேசும் உத்திகள் (Negotiation Skills) மிக அவசியமான ஒன்றாகும். இது வெறும் விலையைக் குறைப்பது மட்டுமல்ல, இரு தரப்பினருக்கும் லாபம் தரும் "வின்-வின்" (Win-Win) சூழ்நிலையை உருவாக்குவதாகும். இரு தரப்பினரும் லாபம் அடையும் வகையில் செயல்படுவது, சரியான தயாரிப்புடன் இருப்பது மற்றும் எதிர்தரப்பு கூறுவதைக் கவனித்து கேட்பது போன்ற உத்திகள் நீண்ட கால வெற்றியைத் தரும். பிசினஸில் மட்டுமல்ல தனிப்பட்ட வாழ்க்கையிலும் பலவற்றையும் சாதிக்க பேரம் பேசுவது அவசியம் தான்.
பிசினஸ் வெற்றிக்கு உதவும் முக்கியமான உத்திகள் சில:
முன்கூட்டியே திட்டமிடுவது:
பேச்சுவார்த்தைக்கு அதாவது சந்திப்புக்குச் செல்லும் முன்பு சந்தை நிலவரம் மற்றும் எதிர்தரப்பின் தேவைகளைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொண்டு நன்கு தயாராவது மிகவும் முக்கியமான உத்தியாகும். அடைய விரும்பும் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச லாப வரம்பை முன்கூட்டியே தீர்மானித்துக்கொள்வது நல்லது.
BATNA அறிதல்:
'Best Alternative to a Negotiated Agreement' எனப்படும் மாற்றுத் திட்டத்தை எப்போதும் கையில் வைத்திருக்க வேண்டும். இந்த ஒப்பந்தம் தோல்வியடைந்தால் அடுத்த கட்டம் என்ன என்பதில் தெளிவு அவசியம்.
இருதரப்பு வெற்றி அணுகுமுறை (Win - Win Approach):
பிஸினஸில் பேரம் பேசுவது என்பது எதிராளியை வீழ்த்துவது அல்ல. இருதரப்புக்கும் லாபகரமான முடிவை எட்டும் ஒரு முக்கியமான சிறந்த கலையாகும். ஒப்பந்தம் இருதரப்புக்கும் பலன் தரும்படி இருக்கவேண்டும். அப்போதுதான் உறவு நீண்ட காலம் நீடிக்கும். உங்களுக்கு மட்டும் லாபம் தேடாமல், எதிராளியும் திருப்தி அடையும் வகையில் ஒப்பந்தத்தை முடிக்க வேண்டும்.
இது நீண்டகால வணிக உறவுக்கு வழிவகுக்கும். நாம் பேசுவதைவிட எதிர்தரப்பு சொல்வதை முழுமையாக கவனமாகக் கேட்கவேண்டும். அவர்களின் பலம் மற்றும் பலவீனம் அதில் புரியும். எப்பேர்பட்ட சூழலிலும் புன்னகையுடன் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
விலையை மட்டும் குறைக்காமல், கூடுதல் சேவைகள், வாரண்டி அல்லது நீண்ட கால ஒப்பந்தங்கள் மூலம் மதிப்பை அதிகரிக்கலாம். வெளிப்படையான பேச்சுவர்த்தை மூலம் நீண்ட கால தொழில்முறை உறவை உருவாக்கலாம்.
கவனமாக கேட்பது:
எதிராளி என்ன சொல்கிறார் என்பதை முழுமையாகக் கேட்டு, அவர்களின் உண்மையான தேவையைப் புரிந்துகொள்வது அவசியம். அதிகம் பேசுவதைவிட எதிர்தரப்பினர் கூறுவதை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். அவர்களின் வார்த்தைகளில் இருந்தே அவர்களது உண்மையான தேவையை நாம் கண்டறிய முடியும். தெளிவற்ற இடங்களில் சரியான கேள்விகளை எழுப்பி, சந்தேகங்களை உடனுக்குடன் தீர்த்துக்கொள்ள வேண்டும்.
விட்டுக்கொடுத்தல்:
பிசினஸில் பிடிவாதம் எப்போதும் உதவாது. உங்களது லாபத்தை இழக்காமல், அதே நேரம் எதிர்தரப்பிற்கும் ஏதோ ஒரு வகையில் லாபம் கிடைக்கிறது என்ற உணர்வை ஏற்படுத்த வேண்டும். அடுத்ததாக நம்பிக்கை வளர்த்தல் என்பது மிகவும் முக்கியம். நீண்ட கால பிசினஸ் உறவுக்கு இரு தரப்பினரின் தேவைகளும் மதிக்கப்பட வேண்டியது அவசியம். ஆனால் அதேசமயம் எந்த ஒரு சலுகையையும் உடனடியாக ஒப்புக்கொள்ளாமல், யோசித்து நிதானமாக முடிவு எடுக்க வேண்டும்.
உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துதல்:
பேச்சுவார்த்தையின் பொழுது கோபமோ, அதீத உற்சாகமோ அல்லது அவசரத்தை வெளிப்படுத்தாமல் அமைதியாகவும் தெளிவாகவும் பேசுவது நல்ல பலனைத்தரும். உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம். தனிப்பட்ட கருத்துக்களைத் தவிர்த்து, பிசினஸ் லாப நஷ்டங்களை மட்டுமே மையமாக வைத்துப் பேசவேண்டும்.
உணர்ச்சிவசப்படாமல் நிதானமாகவும் தெளிவாகவும் நம் தரப்பு வாதங்களை வைக்கவேண்டும். சிறிய விஷயங்களில் விட்டுக்கொடுத்து, பெரிய இலக்குகளைப் பிடிக்க முயற்சிக்கலாம்.
'நான் சொல்வதுதான் சரி' என்ற எண்ணம் இல்லாமல், நெகிழ்வுத் தன்மையுடன்(flexibility) இருக்க வேண்டும். பேச்சுவார்த்தை கடினமாக மாறும் பொழுது உணர்ச்சிவசப்படாமல், நிதானமாகவும் தொழில்முறையாகவும் (Professional) நடந்துகொள்ள வேண்டும். முக்கியமாக வியாபாரத்தில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு இடமளிக்கக்கூடாது.
விலகத் தயாராக இருப்பது:
உங்களுக்கு செட்டாகாத டீல் என்றால் 'இல்லை' என்று கூறி அதிலிருந்து வெளியேறும் தைரியம் இருக்க வேண்டும். உங்கள் எல்லைக்கு மீறிய ஒப்பந்தமாக இருந்தால், தயங்காமல் அதில் இருந்து வெளியேறத் தயாராக இருக்கவேண்டும். எந்த ஒரு நஷ்டமான ஒப்பந்தத்திலும் அவசரப்பட்டு கையெழுத்திடக் கூடாது.
வெற்றி பெறுவதற்கு நம் பலம் மற்றும் பலவீனத்தை முன்கூட்டியே புரிந்துகொண்டு, அவசரப்பட்டு இறுதி முடிவை எடுக்காமல், யோசிக்க அவகாசம் எடுத்துக்கொள்வது, எப்போதும் நேர்மையாகவும் நம்பிக்கை குரியவராகவும் நடந்துகொள்வது போன்றவை வெற்றிபெற எளிய வழிகள் ஆகும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
Reference: