NRE | NRO | FCNR: வெளிநாடு வாழ் இந்தியர்கள் அறிய வேண்டிய வங்கி ரகசியங்கள்!

உங்கள் பணத்தை இந்தியாவிற்கு அனுப்பவும் முதலீடு செய்யவும் சிறந்த கணக்கை உடனே தெரிந்து கொள்ளுங்கள்.
NRI வங்கி கணக்குகள்
NRI வங்கி கணக்குகள்AI Image

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு (Non-residential Indians) மூன்று விதமாக வங்கி கணக்குகள் உள்ளன.

அவையாவன:

என்ஆர்ஈ - NRE - Non residential external - வெளிநாடு வாழ் இந்தியரின் அயல் கணக்கு

என்ஆர்ஓ - NRO - Non residential Ordinary - வெளிநாடு வாழ் இந்தியரின் சாதாரண கணக்கு

எஃப்சிஎன்ஆர் - FCNR - Foreign Currency Non Residential - வெளிநாடு வாழ் இந்தியரின் வெளிநாட்டுப் பணம்

இவற்றைப் பற்றிய வித்தியாசங்களைப் பார்ப்போம்.

1. பணத்தின் முதலீடு:

NRE - வெளிநாட்டில் சம்பாதித்த பணத்தை முதலீடு செய்யலாம். ஆனால், பணத்தின் இந்திய மதிப்பிற்கேற்ப, இந்திய பணத்தில் முதலீடு செய்யப்படும். பணம் இந்திய ரூபாயில் இருக்கும்.

NRO - இந்தியாவில் சம்பாதித்த பணத்தை முதலீடு செய்யலாம். உதாரணமாக, வெளிநாடு வாழ் இந்தியர், வீடு வாடகைக்கு விட்டால், பங்குகளில் ஈவுத் தொகை பெற்றால், அதனை இதில் முதலீடு செய்யலாம். பணம் இந்திய ரூபாயில் இருக்கும்.

FCNR - வெளிநாட்டில் சம்பாதித்த பணத்தை முதலீடு செய்யலாம். பணம் வெளிநாட்டு பணத்திலேயே இருக்கும்.

2. வட்டிக்கு வரி:

NRE - வெளிநாடு வாழ் இந்தியராகையால், இரட்டை வரி விதிப்பு முறைகளின் காரணமாக (Double taxation), வட்டிக்கு வரி கிடையாது.

NRO - இந்தியாவில் சம்பாதித்த பணமாகையினால், வருமான வரி விதிகளின் படி வட்டிக்கு வரி உண்டு.

FCNR - வெளிநாடு வாழ் இந்தியராகையால், இரட்டை வரி விதிப்பு முறைகளின் காரணமாக (Double taxation), வட்டிக்கு வரி கிடையாது.

3. பணப் பரிமாற்ற விதிகள்:

NRE - என்ஆர்ஓ கணக்கிற்கு பணத்தை மாற்றிக் கொள்ளலாம். அதாவது, வெளிநாட்டு பணத்தினை இந்தியாவிற்கு பயன்பாட்டிற்கு கொண்டுவருவது. எஃப்சிஎன்.ஆர் கணக்குடன் பணப்பரிமாற்றம் செய்யலாம். ஏனென்றால், அதுவும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி வெளிநாட்டுப் பணம் உள்ள கணக்கு.

NRO - என்ஆர்ஈ கணக்கிற்கு பணத்தை மாற்ற முடியாது. என்ஆர்ஈ என்பது அயல் கணக்கு. மாற்றித்தான் ஆகவேண்டுமென நினைத்தால், பட்டயக்கணக்காளரின் துணை கொண்டு மாற்ற முடியும்.

FCNR - இது கிட்டத்தட்ட என்ஆர்ஈ கணக்கு போன்றதாகையால், என்ஆர்ஈ கணக்குடன் பணப்பரிவர்த்தனைகள் செய்ய முடியும். இந்திய கணக்குகளுக்கு பணத்தை இந்திய ரூபாயில் அனுப்ப முடியும். இந்திய கணக்குகளிலிருந்து பணத்தைப் பெற முடியாது.

4. வட்டி விகிதம்:

NRE - வட்டி விகிதம் குறைவு

NRO - மற்ற இந்திய கணக்குகளைப் போல், அதிக வட்டி விகிதம் உண்டு

FCNR - வெளிநாட்டுப் பணமாகையால் வட்டி விகிதம் குறைவு

Indian Rupees
Indian Rupees

5. ரூபாயின் மதிப்பின் ஏற்றத்தாழ்வின் பாதிப்பு:

NRE - வெளிநாட்டிலிருந்து வரும் பணமாகையினால், ரூபாயின் மதிப்பின் ஏற்றத்தாழ்விற்கு ஏற்ப, பணத்தின் முதலீடு மாறுபடும். பணத்தை மறுபடி கொண்டு செல்ல எண்ணினாலும், ரூபாயின் மதிப்பிற்கு ஏற்ப பணம் மாறுபடும்.

NRO - ரூபாயின் ஏற்றத்தாழ்விற்கு ஏற்ப மாறுபடாது. ஏனென்றால், இது இந்தியாவில் மட்டும் இயங்கும் பணம்.

FCNR - இது வெளிநாட்டுப் பணத்திலேயே இருப்பதால், ரூபாயின் மதிப்பின் ஏற்றத்தாழ்வுகளால் பாதிக்கப்படாது.

6. பணம் வெளியே செல்வது (Repatriation):

NRE - எளிதில் கொண்டு செல்ல முடியும். வெளிநாட்டிலிருந்து வந்த பணம், எளிதாக மறுபடி கொண்டு செல்ல முடியும்.

NRO - எளிதில் கொண்டு செல்ல முடியாது. இந்தியாவில் சம்பாதித்த பணமாகையினால், பல்வேறு கட்டுப்பாடுகள் உண்டு. எவ்வாறு பணம் வந்தது, எவ்வளவு ஒரு வருடம் கொண்டு செல்ல முடியும் என்று பல்வேறு விதிமுறைகள் உண்டு. அமெரிக்க டாலர்கள் 1 மில்லியன் வரை இந்தியாவிலிருந்து கொண்டு செல்ல முடியும்.

FCNR - எளிதில் கொண்டு செல்ல முடியும். வெளிநாட்டிலிருந்து வந்த பணம், எளிதாக மறுபடி கொண்டு செல்ல முடியும்.

இதையும் படியுங்கள்:
வெளிநாடு வாழ் இந்தியர்கள் கவனத்திற்கு! OCI கார்டு பற்றி நீங்கள் அறியாத உண்மைகள்!
NRI வங்கி கணக்குகள்

7. கூட்டுக் கணக்கு:

NRE - இரண்டு பேர்களில் ஒருவர், இந்தியராக இருக்கலாம். ஆனால், அவர் வெளிநாடு வாழ் இந்தியர் உயிருடன் இல்லாத பட்சத்தில் தான் பயன்படுத்த முடியும்.

NRO - இரண்டு பேர்களில் ஒருவர், இந்தியராக இருக்கலாம். அவர், மற்ற கூட்டுக் கணக்குகளைப்போல், அதனைப் பயன்படுத்தலாம்.

FCNR - இரண்டு பேர்களில் ஒருவர், இந்தியராக இருக்கலாம். ஆனால், அவர் வெளிநாடு வாழ் இந்தியர் உயிருடன் இல்லாத பட்சத்தில் தான் பயன்படுத்த முடியும்.

8. உள்ளே வெளியே விதி:

NRE - உள்ளே வரும் போது வெளிநாட்டுப் பணம். எடுக்கும் போது இந்திய ரூபாய் பணம்

NRO - உள்ளே வரும் போதும்,வெளியே எடுக்கும் போதும், இந்திய ரூபாய் தான்.

FCNR - உள்ளே வரும் போதும், வெளியே எடுக்கும் போதும், வெளிநாட்டுப் பணம் தான்.

இதையும் படியுங்கள்:
'புரமோஷன் வேணாம் சாமி... நிம்மதி போதும்' என முடிவெடுக்கும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள்!
NRI வங்கி கணக்குகள்

9. நிதிக் குறிக்கோள்களுக்குப் பயன்படுத்துவது:

NRE - சேமிப்பு, நடப்பு, வைப்பு கணக்குகள். வைப்பு கணக்கு வட்டி விகிதம் அதிகம். மேலும், 7 நாட்கள் முதல் வைப்பு கணக்குகள் தொடங்க முடியும். எனவே, நீர்ப்புத்தன்மை அதிகம். மிக குறுகிய காலக் குறிக்கோள்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

NRO - சேமிப்பு, நடப்பு, வைப்பு கணக்குகள். குறைந்தபட்சம் 1 வருடம் முதல் 5 வருடங்களுக்கான வைப்பு கணக்குகள் வைத்திருக்க முடியும். எனவே, ஒரு வருடத்திற்குள்ளான பணத்தை வைத்திருந்தால், நீர்ப்புத் தன்மைக்கு பாதகம் நேரும்.

FCNR - வைப்பு கணக்கு மட்டுமே. குறைந்தபட்சம் 1 வருடம் முதல் 5 வருடங்களுக்கான வைப்பு கணக்குகள் வைத்திருக்க முடியும். எனவே, ஒரு வருடத்திற்குள்ளான பணத்தை வைத்திருந்தால், நீர்ப்புத் தன்மைக்கு பாதகம் நேரும்.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களது நிதிக் குறிக்கோள்களுக்கு ஏற்ற முதலீட்டினைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ள முடியும்.

10.
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.

Reference

logo
Kalki Online
kalkionline.com