வெளிநாடு வாழ் இந்தியர்கள் கவனத்திற்கு! OCI கார்டு பற்றி நீங்கள் அறியாத உண்மைகள்!

OCI கார்டு என்றால் என்ன? இந்தியாவில் வாழ்நாள் விசா, சொத்து வாங்கும் உரிமை மற்றும் பல சலுகைகள் பற்றிய முழுமையான தகவல்!
OCI கார்டு
OCI கார்டுImage credit: AI Image
Updated on
Kalki Strip
Kalki Strip

OCI கார்டு என்றால் என்ன? அதன் நோக்கம் என்ன?

இந்தியாவின் வெளிநாட்டு குடியுரிமை கார்டு (Overseas Citizenship of India (OCI) என்பது இந்தியாவையும், உலகம் முழுவதும் பரவியுள்ள இந்திய வம்சாவளியினரையும் இணைக்கும் ஒரு சிறப்புப் பயண மற்றும் வசிப்பிட (residency) ஆவணமாகும். இது ஒன்றும் இரட்டை குடியுரிமை போன்றது கிடையாது. 2005இல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வெளிநாட்டினர் இந்தியாவில் சுதந்திரமாக வசிக்கவும், பணியாற்றவும், இங்கு பயணம் செய்யவும் அனுமதிக்கும் வாழ்நாள் விசா போன்றது (வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும்). இதன் நோக்கம் உலகம் முழுவதும் உள்ள இந்திய வம்சாவளியினருடன் கலாச்சார மற்றும் பொருளாதாரத் தொடர்புகளைப் பேணுவதற்கான இந்தியாவின் முயற்சி ஆகும்.

OCI கார்டு வைத்திருப்பவர்களுக்குக் கிடைக்கும் சலுகைகள் என்ன?

OCI கார்டு இந்தியாவுக்கு பலமுறை வந்து செல்லும்படி வசதி கொண்ட வாழ்நாள் விசாவாகச் செயல்படுகிறது. இதை வைத்திருப்பவர்கள் எவ்வளவு காலம் இந்தியாவில் தங்கினாலும், வெளிநாட்டினர் பிராந்தியப் பதிவு அலுவலகத்தில்' (Foreigners Regional Registration Office (FRRO) அதற்கான பதிவு செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள்.

A old man kept OCI card
OCI கார்டுImage credit: AI Image

சொத்துரிமை (விவசாய நிலம் தவிர), தொழில் வாய்ப்புகள், உள்நாட்டு விமானக் கட்டணம் அல்லது நினைவுச் சின்னங்களுக்கான நுழைவுக் கட்டணம் போன்ற பெரும்பாலான விஷயங்களில் இது வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு (NRIs) இணையான உரிமைகளை வழங்குகிறது. இருப்பினும் இது அரசியல் உரிமைகளை வழங்குவதில்லை; அதாவது OCI கார்டு வைத்திருப்பவர்களால் வாக்களிக்கவோ, தேர்தலில் போட்டியிடவோ அல்லது அரசியலமைப்பு சார்ந்த பதவிகளை வகிக்கவோ முடியாது; முழுமையான குடியுரிமை உரிமைகளும் பெறவே முடியாது.

OCI கார்டு பெறுவதற்குத் தேவையான தகுதிகள் என்ன?

இதற்கான தகுதிகள் 1955-ஆம் ஆண்டின் குடியுரிமைச் சட்டத்தின் பிரிவு 7A-இன் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளன. ஜனவரி 26, 1950 அன்று அல்லது அதற்குப் பிறகு இந்தியக் குடிமக்களாக இருந்த அல்லது அக்காலத்தில் குடிமக்களாவதற்குத் தகுதி பெற்றிருந்த வெளிநாட்டினருக்கு இது பொருந்தும். அத்தகைய நபர்களின் குழந்தைகள், பேரக்குழந்தைகள் மற்றும் கொள்ளுப் பேரக்குழந்தைகளும் இதற்குத் தகுதியுடையவர்கள்.

அத்துடன் ஒரு இந்தியக் குடிமகனையோ அல்லது ஏற்கனவே OCI அட்டை வைத்திருப்பவரையோ திருமணம் செய்துகொண்டவர்கள்; OCI கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். (திருமணம் பதிவு செய்யப்பட்டு குறைந்தது இரண்டு ஆண்டுகள் நீடித்திருந்தால்) இதற்குத் தகுதி பெறுவர். ஆனால், முக்கியமாக பாகிஸ்தான், வங்கதேசம் அல்லது இந்திய அரசால் அறிவிக்கப்பட்ட பிற நாடுகளுடன் வம்சாவளித் தொடர்பைக் கொண்ட நபர்கள் இதில் சேர்க்கப்படுவதில்லை.

இதையும் படியுங்கள்:
'புரமோஷன் வேணாம் சாமி... நிம்மதி போதும்' என முடிவெடுக்கும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள்!
OCI கார்டு

மற்ற நாடுகளிலும் இந்த வசதி உள்ளதா?

இத்தகையத் திட்டங்களை வழங்கும் நாடுகளில் இந்தியா மட்டுமல்ல. போர்ச்சுகல் போன்ற நாடுகள் வம்சாவளியினருக்குக் குடியுரிமை பெறுவதற்கான வழிகளை வழங்குகின்றன. ஹங்கேரி இன ரீதியாக ஹங்கேரியர்களாக இருப்பவர்களுக்கு இதுபோன்ற குடியுரிமை வசதிகள் வழங்கப்படுகின்றன.

இஸ்ரேலின் ‘Law of Return’ உலகம் முழுவதும் உள்ள யூதர்களுக்குக் குடியேறவும், குடியுரிமை பெறவும் உரிமையை அளிக்கிறது. இந்தியாவின் OCI திட்டத்தைப் போலவே, இந்த முயற்சிகளும் வெளிநாடுகளில் வசிக்கும் தங்கள் சமூகத்தினருடனானத் தொடர்புகளை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளாகும்.

ஆக, OCI கார்டு என்பது இந்தியாவிற்கும் அதன் புலம்பெயர் சமூகத்திற்கும் இடையிலான ஒரு பாலமாகும். இது தேசிய நலன்களைக் கவனமாகப் பாதுகாக்கும். அதேவேளையில் குறிப்பிடத்தக்க சலுகைகளையும் வழங்குகிறது. வெளிநாடுகளில் வாழும் லட்சக்கணக்கான மக்களுக்கு இது ஒரு கருவியாகவும், அவர்களின் பாரம்பரியத்துடனான ஒரு இணைப்பாகவும் விளங்குகிறது.

இதையும் படியுங்கள்:
அமெரிக்காவிற்குள் ஒளிந்திருக்கும் 'குட்டி இந்தியா'!
OCI கார்டு

கூடுதல் தகவல் (Update): முன்பு OCI கார்டு வைத்திருப்பவர்கள் தங்களது பாஸ்போர்ட்டை புதுப்பிக்கும் போதெல்லாம் OCI கார்டையும் புதுப்பிக்க வேண்டும் என்ற விதி இருந்தது. ஆனால், இப்போது இந்திய அரசு விதிகளத் தளர்த்தியுள்ளது. அதன்படி, ஒரு நபர் 20 வயது நிறைவடையும் போது மட்டும் தனது புதிய பாஸ்போர்ட்டுடன் இணைத்து OCI கார்டை ஒருமுறை புதுப்பித்தால் போதுமானது. 50 வயதிற்குப் பிறகு புதுப்பிக்கத் தேவையில்லை (புதிய பாஸ்போர்ட் விவரங்களை ஆன்லைனில் மட்டும் பதிவேற்றினால் போதும்).

வாசகர்களே! உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்கள் வெளிநாட்டு குடியுரிமை பெற்று இந்தியாவில் முதலீடு செய்யவோ அல்லது அடிக்கடி வந்து செல்லவோ விரும்பினால், இந்தத் தகவல் அவர்களுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும். இந்த கட்டுரையை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே!

logo
Kalki Online
kalkionline.com