தபால் நிலைய சேமிப்பு கணக்கு: 4% வட்டியுடன் உங்கள் பணத்தை பாதுகாப்பாக பெருக்குவது எப்படி?

வெறும் 500 ரூபாயில் தொடங்கும் இந்த அரசின் சிறப்பு சேமிப்பு திட்டத்தின் முழு விவரங்கள் இதோ!
சேமிப்பு கணக்கு - Post Office SB
சேமிப்பு கணக்கு - Post Office SB
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on: 

தபால் அலுவலக சேமிப்பு திட்டத்தில் சேமிப்பு கணக்கு (Post Office Savings Account - SB) என்பது இந்திய அரசால் வழங்கப்படும் மிகவும் பாதுகாப்பான மற்றும் பிரபலமான சிறுசேமிப்புத் திட்டங்களில் ஒன்றாகும்.

இந்திய தபால் அலுவலக சேமிப்பு கணக்கு ஆண்டுக்கு 4% வட்டி விகிதத்தை வழங்குகிறது. இதை குறைந்தபட்சம் ரூபாய் 500 முதலீட்டில் தொடங்கலாம்.

இதன் முக்கிய அம்சங்கள்:

இக்கணக்கை தொடங்குவதற்கும் பராமரிப்பதற்கும் குறைந்தபட்சம் ரூபாய் 500 இருக்கவேண்டும். நிதியாண்டின் இறுதியில் கணக்கில் ரூபாய் 500க்கு குறைவாக இருந்தால் ரூபாய் 50 பராமரிப்பு கட்டணமாக பிடிக்கப்படும். இருப்பு பூஜ்ஜியமாக மாறினால் கணக்கு தானாகவே மூடப்படும்.

குறைந்தபட்ச வைப்புத் தொகை 500 ரூபாய்; அதிகபட்ச வைப்புத் தொகைக்கு வரம்பு எதுவும் இல்லை. இதற்கு பூட்டுதல் காலம் (Lock-in period) கிடையாது. இந்தியாவில் உள்ள எந்த ஒரு தபால் நிலையக் கிளைக்கும் நம் கணக்கை எளிதாக மாற்றிக்கொள்ள முடியும்.

கணக்கை தொடங்குவதற்கு தேவையான தகுதிகள்:

இந்தியக் குடிமகனாக இருக்கும் எந்த ஒரு தனிநபரும் இந்தக் கணக்கைத் தொடங்கலாம். ஒருவராகவோ (Single Account) அல்லது இரண்டு மூன்று நபர்கள் சேர்ந்தோ (Joint Account) கணக்கைத் தொடங்க முடியும். பத்து வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் தங்கள் பெயரிலேயே கணக்கை இயக்கலாம். 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு பாதுகாவலர்கள் மூலம் கணக்கைத் தொடங்கலாம்.

கூட்டுக் கணக்குகள் மற்றும் தனிநபர் கணக்குகள் ஆகிய இரண்டிற்கும் 4% வட்டி வழங்கப்படுகிறது. ஒரு நபருக்கு ஒரு கணக்கு மட்டுமே திறக்க முடியும்.

சேமிப்பு கணக்கு - Post Office SB
சேமிப்பு கணக்கு - Post Office SB

கூட்டுக் கணக்கு வைத்திருப்பவர்களில் ஒருவர் இறந்துவிட்டால், மற்றவர் அந்தக் கணக்கின் ஒரே உரிமையாளராகிவிடுவார். அவ்வாறு இறந்த நபருக்கு ஏற்கனவே அவர் பெயரில் ஒரு கணக்கு இருந்தால், அவர் அந்த கூட்டுக் கணக்கை மூடவேண்டியிருக்கும்.

கூட்டுக் கணக்கை தனிக்கணக்காக மாற்ற முடியாது. அதேபோல் தனிக் கணக்கையும் கூட்டுக் கணக்காக மாற்ற முடியாது.

கணக்கு தொடங்கும் நேரத்தில் பரிந்துரை செய்வது கட்டாயமாகும்.

தபால் அலுவலக சேமிப்புக் கணக்கை ரொக்கமாக மட்டுமே செலுத்துவதன் மூலம் திறக்க முடியும்.

கணக்கை செயல்பாட்டில் வைத்திருக்க, 3 நிதி ஆண்டுகளில் குறைந்தபட்சம் ஒரு பரிவர்த்தனையாவது செய்யப்பட வேண்டும்.

தேவையான ஆவணங்கள்:

தபால் அலுவலகத்தில் கணக்குத் தொடங்க அருகிலுள்ள கிளைக்குச் சென்று பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம் மற்றும் KYC படிவம்

ஆதார் அட்டை

பான் அட்டை

அடையாள மற்றும் முகவரிச் சான்றுகள் (வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம் போன்றவை) பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் வாரிசுதாரர் நியமனப் படிவம் (Nomination Form).

இந்த வழிகாட்டியைப் படிப்பதன் மூலம் அஞ்சலக சேமிப்புக் கணக்கைத் தொடங்குவதற்கான அனைத்து நடைமுறைகளையும் துல்லியமாகப் புரிந்துகொண்டு, அரசின் 4% வட்டி பலனுடன் உங்கள் எதிர்கால நிதிப் பாதுகாப்பை இன்றே உறுதியுடன் தொடங்க முடியும்.

இதையும் படியுங்கள்:
வங்கியா? தபால் நிலையமா? 7.5% வரை அதிக வட்டி தரும் தபால் நிலைய சேமிப்பு!
சேமிப்பு கணக்கு - Post Office SB
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.

Reference:

logo
Kalki Online
kalkionline.com