வங்கியா? தபால் நிலையமா? 7.5% வரை அதிக வட்டி தரும் தபால் நிலைய சேமிப்பு!

ஆபத்தில்லாத அதிக வருமானம் மற்றும் வரிச் சலுகை பெற தபால் நிலைய TD திட்டத்தின் முழு வழிகாட்டி.
கால வைப்பு - Post Office Investment
கால வைப்பு - Post Office Investment
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

பால் அலுவலக கால வைப்பு நிதி (Time Deposit - TD) என்பது வங்கிகளின் ஃபிக்சட் டெபாசிட் போன்ற பாதுகாப்பான முதலீட்டுத் திட்டமாகும். இது நம் பணத்தை சேமித்து வளர்ப்பதற்கு ஒரு நம்பகமான வழியாகும்.

கால அளவு மற்றும் வட்டி விகிதங்கள்:

தபால் அலுவலக கால வைப்புத் தொகையின் வட்டி விகிதம், இந்த சேமிப்புத் திட்டத்தின் முக்கிய ஈர்ப்புகளில் ஒன்றாகும். தபால் அலுவலகத்தில் ஒரு வருடம், இரண்டு வருடங்கள், மூன்று வருடங்கள் மற்றும் ஐந்து வருடங்கள் என நான்கு வகையான கால அளவுகளில் முதலீடு செய்யலாம். வட்டி கணக்கீடு காலாண்டுக்கு ஒரு முறை கூட்டு வட்டியாகக் கணக்கிடப்பட்டாலும், வட்டித் தொகை ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே நம் கணக்கில் செலுத்தப்படும்.

1 ஆண்டு முதலீடு 6.9% வட்டி

2 ஆண்டு முதலீடு 7.0% வட்டி

3 ஆண்டு முதலீடு 7.1% வட்டி

5 ஆண்டு முதலீடு 7.5% வட்டி

வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் போல 1 முதல் 5 ஆண்டுகள் வரை மொத்தமாகப் பணம் முதலீடு செய்யும் திட்டம் 6.9% முதல் 7.5% வரை வட்டி தருகிறது. சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப விகிதங்கள் இருப்பதை உறுதி செய்ய, அரசாங்கம் காலாண்டு தோறும் அவற்றை மாற்றி அமைக்கிறது. இருப்பினும் நம் நிதி இலக்குகளுக்கு ஏற்ற கால அளவைத் தேர்ந்தெடுத்து நம் சேமிப்பு சீராக வளர்வதைக்காணலாம்.

முக்கிய அம்சங்கள்:

தபால் அலுவலக கால வைப்புத் திட்டத்தின் அம்சங்களே இந்தியர்களிடையே இதனை மிகவும் பிரபலமான தேர்வாக ஆக்குகின்றன.

குறைந்தபட்ச முதலீடு:

குறைந்தபட்சம் ரூபாய் 1000 முதலீடு செய்யவேண்டும். அதிகபட்ச வரம்பு இல்லை.

கால வைப்பு - Post Office Investment
கால வைப்பு - Post Office Investment

பாதுகாப்பு:

இந்திய அரசால் நடத்தப்படுவதால் இத்திட்டத்திற்கு மத்திய அரசின் முழுமையான உத்தரவாதம் (Sovereign Guarantee) உள்ளது. நம் பணத்திற்கு 100% பாதுகாப்பு உண்டு.

வரிவிலக்கு:

5 ஆண்டு கால வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்தால், வருமான வரிச் சட்டம் பிரிவு 80C-ன் கீழ் ரூபாய்1.5 லட்சம் வரை வரி விலக்கு பெறலாம். மற்ற 1, 2, 3 வருட திட்டங்களுக்கு இந்த வரிச் சலுகை பொருந்தாது.

வட்டி வழங்குதல்:

வட்டித்தொகை ஆண்டுதோறும் கணக்கிடப்பட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

கணக்கு மாற்றம்:

ஒரு தபால் நிலையத்திலிருந்து நாட்டின் எந்த ஒரு தபால் நிலையத்திற்கும் நம் கணக்கை எளிதாக மாற்றிக்கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
முதல் பட்டதாரிகளுக்கான '50-30-20' நிதி மேலாண்மை ரகசியம்!
கால வைப்பு - Post Office Investment

தகுதி மற்றும் கணக்கு வகைகள்:

தபால் அலுவலக கால வைப்புத் திட்டங்கள், பல்வேறு தேவைகளுக்கு ஏற்ப பலவிதமான கணக்கு விருப்பங்களை வழங்குகின்றன. எந்த ஒரு இந்தியக் குடிமகனும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய முடியும். ஒருவர் தனியாகவோ (Single Account) அல்லது மூன்று நபர்கள் (Joint Account) வரை இணைந்தோ கூட்டு கணக்காகத் தொடங்கலாம்.

இது கூட்டாக முதலீடு செய்ய விரும்பும் குடும்பங்கள் அல்லது தம்பதியினருக்கு பயனுள்ளதாக இருக்கும். கூட்டுக் கணக்கு வைத்திருப்பவர்கள் முதிர்வு நேரத்தில் வட்டியையும் அசலையும் எவ்வாறு பகிர்ந்தளிப்பது என்பதை தீர்மானிக்கலாம். மேலும் பத்து வயதுக்கு மேற்பட்ட மைனர் குழந்தைகள் பெயரிலும் கணக்கைத் தொடங்க முடியும். இதன் மூலம் தனிநபர்கள் முதல் குடும்பங்கள் வரை அனைவரும் தபால் அலுவலக கால வைப்புத் திட்டத்தின் மூலம் பயனடையலாம்.

தபால் அலுவலக கால வைப்புத் திட்டத்தின் வருமானம், அது வழங்கும் பாதுகாப்பைக் கருத்தில் கொள்ளும்பொழுது மிகவும் கவர்ச்சிகரமானதாக உள்ளது. நிலையான வருமானம், குறைந்த இடர் கொண்ட முதலீட்டு வாய்ப்புகளைத் தேடுபவர்களுக்கு மிகவும் கவர்ச்சிகரமானதாக உள்ளது.

இந்தியாவில் அலுவலக தபால் கால வைப்புத் தொகை மற்றும் வங்கி வைப்பு தொகை என இரண்டுமே பிரபலமான முதலீட்டுத் தேர்வுகளாகும். இருப்பினும் சில நேரங்களில், குறிப்பாக நீண்ட காலங்களுக்கு தபால் அலுவலகக் கால வைப்புத் தொகை சற்று அதிக வட்டி விகிதங்களை வழங்குகிறது.

முன்கூட்டியே திரும்பப் பெறுதல்:

தபால் அலுவலக கால வைப்புத் திட்டத்தின் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்று, முன்கூட்டியே பணம் எடுப்பதற்கான வசதியாகும். கணக்கைத் தொடங்கிய 6 மாதங்களுக்குப் பிறகு தேவைப்பட்டால் பணத்தை எடுக்கலாம். இருப்பினும் முன்கூட்டியே பணம் எடுக்கும் சமயங்களில், தபால் அலுவலகத்தின் கால வைப்பு வட்டி விகிதம் முதலில் ஒப்புக்கொள்ளப்பட்ட விகிதத்தை விடக் குறைவாக இருக்கும். மேலும் அபராதங்களும் விதிக்கப்படலாம். இந்த நெகழ்வுத்தன்மை நிதி நெருக்கடி காலங்களில் உதவியாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
வெறும் 10,000 ரூபாயில் கார்ப்பரேட் பாண்ட்ஸ் முதலீடு செய்வது எப்படி?
கால வைப்பு - Post Office Investment

தேவையான ஆவணங்கள்:

தபால் அலுவலக கால வைப்புக் கணக்கை தொடங்குவதற்கு அடிப்படை ஆவணங்கள் தேவைப்படுகின்றன. ஆதார் கார்டு, பான் கார்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டை போன்ற முகவரிச் சான்று தேவைப்படும்.

பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் ஆகியவை கணக்கைத் தொடங்குவதற்கு தேவையான ஆவணங்களின் பட்டியலை முழுமையாக்குகின்றன.

Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.

Reference:

logo
Kalki Online
kalkionline.com