8.05% வட்டியுடன் ஆர்பிஐ பாண்ட்: உங்கள் பணத்திற்கு 100% அரசு கேரண்டி!

வங்கி எஃப்டிகளை விட அதிக லாபம் தரும் ஆர்பிஐ பான்ட் முதலீட்டு விவரங்கள் இதோ!
ஆர்பிஐ பாண்ட் - RBI Bonds
ஆர்பிஐ பாண்ட் - RBI BondsAI Image
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

ந்திய அரசின் முழு உத்தரவாதத்துடன் 7 ஆண்டு காலத்திற்கு வழங்கப்படும் ஆர்பிஐ மிதக்கும் வட்டி பத்திரங்கள், குறைந்தபட்சம் ரூ.1,000 முதலீட்டில் தொடங்கி, அதிகபட்ச வரம்பின்றி முதலீடு செய்ய அனுமதிக்கின்றன. தற்போதைய ஆண்டு வட்டி 8.05% ஆகும்; மார்ச் 1, செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் அரையாண்டு வட்டி வங்கிக் கணக்கில் வரவு. பங்குச்சந்தை ஆபத்தின்றி நிலையான வருமானம் விரும்புவோருக்கு இது சிறந்த தேர்வு.

ஆர்பிஐ பாண்ட் (RBI Bond) என்பது இந்திய அரசால் வழங்கப்படும் மிகப் பாதுகாப்பான முதலீட்டு பத்திரமாகும். இது முற்றிலும் அரசாங்க உத்தரவாதம் கொண்டது. குறைந்தபட்ச முதலீடு ரூபாய் 1000 ஆகும். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் சில முக்கிய தனியார் வங்கிகள் மூலமாக இந்தப் பத்திரங்களை வாங்கலாம்.

இதன் முக்கிய அம்சங்கள்:

இந்திய அரசின் உத்தரவாதத்துடன் இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும் பாதுகாப்பான முதலீட்டுத் திட்டமே ஆர்பிஐ பத்திரங்கள் ஆகும். இதன் முதலீட்டு காலம் 7 ஆண்டுகள் ஆகும். இது மிதக்கும் வட்டி (Floating Rate) விகிதத்தைக் கொண்டுள்ளது. தற்போதைய வட்டி விகிதம் ஆண்டுக்கு 8.05% ஆகும்.

வட்டித்தொகை ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்பட்டு வழங்கப்படும். அதாவது அரையாண்டுக்கு ஒரு முறை மார்ச் 1, செப்டம்பர் 1 வட்டி வழங்கப்படும். இது தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC) விகிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மூலதனப் பாதுகாப்பையும் நிலையான வருமானத்தையும் நாடும் முதலீட்டாளர்களுக்கு இந்தப் பத்திரங்கள் பொருத்தமானவை. குறைந்தபட்சம் ரூபாய் 1,000 முதலீடு செய்ய வேண்டும். அதிகபட்ச வரம்பு இல்லை.

இதையும் படியுங்கள்:
போஸ்ட் ஆபீஸ் சேமிப்புத் திட்டங்கள்: ரூ.100 முதலீட்டில் லட்சங்களில் லாபம் பெற சூப்பர் வழி!
ஆர்பிஐ பாண்ட் - RBI Bonds

இதன் நன்மைகள்:

மத்திய அரசின் நேரடி உத்திரவாதம் இருப்பதால் இழப்பு பற்றிய பயம் இல்லை.

வட்டித்தொகை ஆறு மாதங்களுக்கு ஒருமுறை முதலீட்டாளர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

இதில் கிடைக்கும் வட்டிக்கு வருமான வரி செலுத்த வேண்டும். வரி விலக்கு கிடையாது.

முன்கூட்டியே திரும்பப் பெறும் வசதி உள்ளது. 7 ஆண்டுகள் முடிவதற்கு முன்பே (Lock-in period) பணத்தை எடுக்க அனுமதிக்கப்படுகிறது. ஆனால் மூத்த குடிமக்களுக்கு மட்டுமே இந்தக் காலகட்டத்தில் சில தளர்வுகள் உண்டு.

பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கங்கள் இல்லாமல், நிலையான வருமானம் மற்றும் அரசுப் பாதுகாப்பு தேடுபவர்களுக்கு இத்திட்டம் மிகவும் உகந்தது.

யார் முதலீடு செய்யலாம்?

இந்தியக் குடிமக்கள் மற்றும் கூட்டுக் குடும்பங்கள்(HUFs) இதில் முதலீடு செய்யத் தகுதியுடையவர்கள். என்.ஆர்.ஐ (NRI) அனுமதிக்கப்படுவதில்லை.

இந்தப் பத்திரத்தின் குறைந்தபட்ச சந்தாத் தொகை ரூபாய் 1,000. அதன் பிறகு ரூபாய் 1,000 இன் மடங்குகளில் முதலீடுகள் செய்யப்படலாம். அதிகபட்ச முதலீட்டு வரம்பு எதுவும் இல்லை.

சந்தாவை ரொக்கமாக (குறிப்பிட்ட வரம்புகளுக்கு உட்பட்டு), வரைவோலைகள், காசோலைகள் அல்லது பணம் பெறும் அலுவலகத்தால் ஏற்றுக்கொள்ளக்கூடிய வேறு எந்த மின்னணு முறையிலும் செலுத்தலாம்.

ஆர்பிஐ பாண்ட் - RBI Bonds
ஆர்பிஐ பாண்ட் - RBI BondsAI Image

ரிசர்வ் வங்கியின் மாறும் வட்டி விகிதப் பத்திரங்கள், பத்திரப் பேரேட்டுக் கணக்கில் (BLA) மின்னணு வடிவில் வெளியிடப்படும். பத்திரதாரருக்கு சந்தா செலுத்தியதற்கான ஆதாரமாக 'படிவம் A'ல் உரிமைச் சான்றிதழ் வழங்கப்படும்.

எஸ்பிஐ (SBI), எச்டிஎஃப்சி (HDFC Bank), ஐசிஐசிஐ (ICIC Bank) மற்றும் ஆக்சிஸ் வங்கி (Axis Bank) போன்ற முக்கிய அரசு மற்றும் தனியார் வங்கிகள் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

ரிசர்வ் வங்கியின் நிலையான இருப்புப் பத்திரங்கள் மாற்றத்தக்கவை அல்ல. எனவே அவற்றை பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்ய முடியாது. இருப்பினும் பத்திரதாரர் இறக்கும் பட்சத்தில், பரிந்துரைக்கப்பட்டவர்/சட்டபூர்வ வாரிசுக்கு மாற்றுவதற்கு அனுமதிக்கப் படுகிறது.

வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் அல்லது நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெறுவதற்காக இதை அடமானம் வைக்க முடியாது.

இதையும் படியுங்கள்:
பேராசையால் வீழ்ந்த இங்கிலாந்து: உலகின் முதல் பங்குச்சந்தை ஏமாற்று வித்தை 'சவுத் ஸி பபுள்' வரலாறு!
ஆர்பிஐ பாண்ட் - RBI Bonds

முதலீட்டாளர்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஆகிய இரு வழிகளிலும் இந்த பத்திரங்களை வாங்கலாம்.

இந்த வழிகாட்டியைப் படிப்பதன் மூலம், பங்குச்சந்தை அபாயங்கள் ஏதுமின்றி உங்கள் மூலதனத்தை 100% பாதுகாத்து, வழக்கமான வங்கி எஃப்டிகளை விட கூடுதல் வட்டி வருமானத்தைப் பெறுவதற்கான தெளிவான முதலீட்டுப் பாதையை நீங்கள் கண்டடைவீர்கள்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.

Reference:

logo
Kalki Online
kalkionline.com