பயன்படுத்தாத வங்கிக் கணக்கா? அபராதம் இன்றி செயலாக்குவது எப்படி?

KYC புதுப்பித்தல் மூலம் 3 நாட்களில் உங்கள் முடங்கிய கணக்கை மீண்டும் இயக்கும் வழி.
வங்கிக் கணக்கு - Bank KYC Renewa
வங்கிக் கணக்கு - Bank KYC Renewa
வெங்கடராமன் ராமசுப்ரமணியன்

Venkataraman Ramasubramanian (வெங்கடராமன் ராமசுப்ரமணியன்) பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் மூத்த தொழில்நுட்ப கட்டமைப்பாளராகப் பணிபுரிகிறார். தமிழில் இரண்டு புத்தகங்கள் எழுதியுள்ளார். தமிழ்க் கோராவில் சான்றமை எழுத்தாளர் விருது பெற்றவர். மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பியல் பொறியியலில் இளங்கலைப் பட்டம், வணிக மேலாண்மையில் முதுகலைப்பட்டம், யோகாவில் முதுகலைப்பட்டம் பெற்றவர். பல்வேறு சிறுகதைப் போட்டிகளில் பரிசு வென்றுள்ளார். வேதாத்திரி மகரிஷி மனவளக்கலையில் துணைப் பேராசிரியராக சேவை செய்து வருகிறார். எழுத்துக்கலை, தனிமனித நிதி, தமிழ் ஆர்வலர்.

Updated on: 

நீங்கள் உங்கள் வங்கிக் கணக்கை பலகாலம் பயன்படுத்தாமல் அது முடங்கினால், எவ்வாறு பணத்தை பெறுவது என்று நினைக்கிறீர்களா? முடங்கிய வங்கிக் கணக்கினை மறுபடி எவ்வாறு செயல்படுத்துவது என்பதைப் பற்றி விரிவாக பார்ப்போம்.

ஒரு வங்கிக் கணக்கு செயல்படாமல் இருந்தால் என்ன ஆகும் ?

ஒரு வங்கிக் கணக்கில் வாடிக்கையாளரால் தூண்டப்பட்ட பரிவர்த்தனைகள்(Customer Initiated Transaction) ஒரு வருட காலம் இல்லையென்றால், அது செயலற்ற வங்கிக் கணக்கு (Inactive) என கருதப்படும். பணம் வங்கிக் கணக்கில் இருக்கும்.

ஒரு கணக்கில் வாடிக்கையாளரால் தூண்டப்பட்ட பரிவர்த்தனைகள் இரண்டு வருட காலம் இல்லையென்றால், அது முடக்கப்பட்ட வங்கிக் கணக்கு (Dormant) என கருதப்படும். பணம் வங்கிக் கணக்கில் இருக்கும்.

ஒரு வங்கிக் கணக்கில் வாடிக்கையாளரால் தூண்டப்பட்ட பரிவர்த்தனைகள் பத்து வருட காலம் இல்லையென்றால், அது பாரத ரிசர்வ் வங்கியின் முதலீட்டாளர் கல்வி மற்றும் விழிப்புணர்வு கணக்கில் (Depositor Education and Awareness Fund) பற்று வைக்கப்படும். ஜூன் 30, 2026 இன் படி, இவ்வாறு கோரப்படாத வங்கிக் கணக்குகளின் பணம் மட்டும் 86 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது.

வாடிக்கையாளரால் தூண்டப்பட்ட பரிவர்த்தனைகள் பின்வருமாறு.

பணத்தை எடுப்பது, போடுவது

பணப்பரிவர்த்தனைகள் (நெஃப்ட்(NEFT), ஐஎம்பிஎஸ்(IMPS), யூபிஐ(UPI))

காசோலை பயன்படுத்துவது

பற்று அட்டை (Debit Card) பயன்படுத்துவது

இணைய வங்கி, கைப்பேசி வங்கி வாயிலாக கணக்கில் நுழைவது

கேஒய்சி (KYC - Know your customer) புதுப்பிப்பது இணைய வழியாக

இதையும் படியுங்கள்:
கிரெடிட் கார்ட் பில்: ஒரு நாள் தாமதமானாலும் ₹2500 நஷ்டமா? அதிர்ச்சித் தகவல்கள்!
வங்கிக் கணக்கு - Bank KYC Renewa

வங்கிக் கணக்கினை எவ்வாறு மீண்டும் செயலாக்குவது?

செயலற்ற வங்கிக்கணக்கு எனில் செயலாக்குவது மிகவும் எளிதானது. பணப்பொறியில் (ATM) பணம் எடுப்பது அல்லது கணக்கில் பணத்தைப் போடுவது போன்ற செயல்கள் செய்யப்பட்டால், வங்கிக் கணக்கு மறுபடி செயலுக்கு வந்துவிடும்.

முடக்கப்பட் வங்கிக் கணக்கு எனில் செயலாக்குவதற்கு மறுபடி கேஒய்சி புதுப்பிக்க வேண்டும். அதனை காணொலி மூலமாகவோ அல்லது வங்கியின் ஏதாவது ஒரு கிளைக்கு செல்வதன் மூலமாகவோ செய்ய முடியும். பின்வரும் ஆவணங்கள் தேவைப்படும். மூன்று நாட்களுக்குள் வங்கிக் கணக்கு மறுபடி செயலுக்கு வந்துவிடும். இதற்கு எந்த ஒரு கட்டணமும் கிடையாது.

ஆதார் அட்டை (அசல் மற்றும் கையெழுத்திட்ட நகல்)

பான் அட்டை (அசல் மற்றும் நகல்)

சமீபத்திய கடவுச்சீட்டு புகைப்படம்

வங்கிக் கணக்கு அறிக்கை (இருப்பின்)

பூர்த்தி செய்யப்பட்ட வங்கிக்கணக்கு செயலாக்க படிவம்

வங்கிக் கணக்கிலுள்ள பணம் பாரத ரிசர்வ் வங்கியின் முதலீட்டாளர் கல்வி மற்றும் விழிப்புணர்வு கணக்கில் இருந்து எடுப்பதற்கு வங்கியின் ஏதாவது ஒரு கிளைக்கு செல்ல வேண்டும். முன் குறிப்பிட்டவாறு கேஒய்சி புதுப்பித்து, பணம் கோரலுக்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வதன் மூலம், பணத்தைப் பெறமுடியும்.

வங்கிக் கணக்கு - Bank KYC Renewa
வங்கிக் கணக்கு - Bank KYC Renewa

வங்கிக் கணக்கின் தற்போதைய நிலையை எவ்வாறு அறிவது?

பாரத ரிசர்வ் வங்கி உட்காம் (https://udgam.rbi.org.in/unclaimed-deposits/) என்ற இணைய தளத்தை வங்கியின் கணக்கு நிலையை அறிவதற்காக தொடங்கியுள்ளது. இங்கு உங்களது விபரங்களைப் பூர்த்தி செய்வதன் மூலம், உங்களுக்கு ஏதாவது கோரப்படாத கணக்குகள் உள்ளனவா என்று அறிந்துகொள்ளலாம்.

மேலும், அந்தப் பணத்தை கோருவதற்கான விபரங்களையும் அறிந்துகொள்ள முடியும். ஆனால், பணத்தின் கோரலை வங்கியின் வாயிலாகவே செய்ய முடியும். இதில் பல்வேறு வங்கிகள் இணைந்துள்ளன.

எனவே, உங்களது விபரங்களைப் பதிவுசெய்து கொண்டு, உங்களது தகவல்களை உள்ளீடு செய்வதன் மூலம், கோரப்படாத வங்கிக் கணக்குகள், முதலீடுகள் போன்றவற்றை அறிந்துகொள்ள முடியும்.

வங்கிக் கணக்குகள் முடங்காமல் எவ்வாறு காத்துக் கொள்வது?

வரும் முன் காப்பதென்பது வந்த பின் காப்பதை விட மேலானது. வங்கிக் கணக்கு முடங்காமலிருக்க பின்வரும் விஷயங்களைச் செய்யவேண்டும்.

தேவையற்ற வங்கிக் கணக்குகளை மூடி விடவேண்டும்.

வங்கிக் கணக்கில் வருடம் ஒருமுறையாவது ஏதாவது பணப் பரிவர்த்தனை செய்யவேண்டும்.

இணைய வங்கி, கைப்பேசி வங்கி போன்றவற்றை பயன்படுத்த வேண்டும்.

வங்கிக் கணக்கு முடக்குவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பாகவே உங்களுக்கு வங்கி கைப்பேசி, மின்னஞ்சலு முகவரி, வீட்டு விலாசம் போன்றவற்றிற்கு தெரிவிக்கும். அப்போதே, செயலுக்கு கொண்டு வந்துவிட்டால், பிரச்சனைகளை தவிர்த்துக்கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
வங்கியா? தபால் நிலையமா? 7.5% வரை அதிக வட்டி தரும் தபால் நிலைய சேமிப்பு!
வங்கிக் கணக்கு - Bank KYC Renewa
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.

Reference:

logo
Kalki Online
kalkionline.com