அசல் ₹500 நோட்டை அடையாளம் காண்பது எப்படி? ரிசர்வ் வங்கியின் 5 முக்கியக் குறியீடுகள்!

உங்கள் கையில் இருப்பது அசலா, நகலா? 500 ரூபாய் நோட்டைச் சரிபார்க்க இதோ முக்கியக் குறிப்புகள்!
500 ரூபாய் நோட்டு
500 rs Note - 500 ரூபாய் நோட்டு
ரா.வ.பாலகிருஷ்ணன்

ரா.வ.பாலகிருஷ்ணன் ஒரு பொறியியல் பட்டதாரி. கல்லூரிப் படிப்புக்குப் பின் எழுத்தின் மீது ஆர்வம் கொண்டு கவிதை, கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். கல்கி ஆன்லைனில் கட்டுரை எழுதுவதில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்ற இவர், செய்திகளை உடனுக்குடன் தருவதில் தேர்ந்தவர். பொருளாதாரம் பசுமை தொடர்பான கட்டுரைகளையும் சிறப்பாக எழுதி வருகிறார்.

Updated on: 

இந்தியாவில் 2016 ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, புதிய 100, 200, 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதில் 2,000 ரூபாய் நோட்டுகள் மட்டும் திரும்பப் பெறப்படும் என 2023 ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி அறிவித்தது. கள்ள நோட்டுகளை ஓழிக்க எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையில், மத்திய அரசுக்கு வெற்றி கிடைத்தது என்றே சொல்ல வேண்டும்.

தற்போது புழக்கததில் இருக்கும் ரூபாய் நோட்டுகளில் 500 ரூபாய் நோட்டுகள்தான் அதிக மதிப்பு கொண்டதாக இருக்கிறது. ஆனால் மர்ம கும்பலைச் சேர்ந்த சிலர் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளனர்.

ஆகையால் உங்களிடம் இருக்கும் ரூபாய் நோட்டு உண்மையானதா அல்லது போலியானதா என்பதைக் கண்டறிய வேண்டியது அவசியமாகும். உண்மையான 500 ரூபாய் நோட்டுகளை எளிதில் அடையாளம் காண ரிசர்வ் வங்கியின் 5 குறிப்புகளைப் பின்பற்றினாலே போதுமானது.

5 குறிப்புகள்:

1. தேவநாகரி எழுத்து மற்றும் எண்:

500 ரூபாய் நோட்டின் இடது புறததில் இருக்கும் சிறிய வடிவமைப்பை வெளிச்சத்திற்கு நேர் எதிரே பிடித்துப் பார்த்தால், 500 என்ற எண்ணானது மிகத் தெளிவாகத் தெரியும். தேசத் தந்தை மகாத்மா காந்தியின் உருவப்படத்திற்கு இடது பக்கத்தில் தேவநாகரி எழுத்துருவில் ‘५००’ என்று அச்சிடப்பட்டிருக்கும்.

2. நிறம் மாறும் பாதுகாப்பு இழை:

500 ரூபாய் நோட்டின் நடுப் பகுதியில் இருக்கும் பாதுகாப்பு இழையில் ‘भारत’ மற்றும் ‘RBI’ ஆகிய எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருக்கும். ரூபாய் நோட்டை சாய்த்துப் பார்ததால், இந்த இழை பச்சை நிறத்திலிருந்து நீல நிறமாக மாறும்.

3. உயர்த்தப்பட்ட அச்சு:

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளும் 500 ரூபாய் நோட்டை பிடித்துப் பார்த்து எளிதில் அடையாளம் காண முடியும். இதற்காக மகாத்மா காந்தியின் உருவப்படம், அசோகத் தூண் சின்னம், மற்றும் ரூபாய் நோட்டின் இரண்டு ஓரங்களிலும் இருக்கும் 5 கோணக் கோடுகள் ஆகியவை தொட்டு உணரும் வகையில் சற்று மேடாக அச்சிடப்பட்டிருக்கும்.

500 ரூபாய் நோட்டு
ரூபாய் நோட்டு - 500 ரூபாய் நோட்டுIntel
இதையும் படியுங்கள்:
இன்ப அதிர்ச்சி.!! 2 வாரங்களில் ரூ.11,240 சரிவு.! இன்னும் எவ்வளவு குறையும்?
500 ரூபாய் நோட்டு

4. நிறம் மாறும் மை எண்:

500 ரூபாய் நோட்டின் கீழ் வலது புறத்தில் ரூபாய் சின்னத்துடன் உள்ள எண் (₹500), நிறம் மாறும் மையினால் அச்சிடப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டை நேராகப் பார்த்தால் பச்சை நிறத்திலும், லேசாக சாய்த்துப் பார்த்தால் நீல நிறத்திலும் தெரியும்.

5. மகாத்மா காந்தி உருவப்படம் மற்றும் வாட்டர் மார்க்:

ரூபாய் நோட்டின் வலது பக்கத்தில் இருக்கும் வெள்ளைப் பகுதியை வெளிச்சத்தில் பார்த்தால், மகாத்மா காந்தியின் உருவப்படமும், 500 என்ற எண்ணும் நிழல் வடிவில் மிகத் தெளிவாக தெரியும்.

ரிசர்வ் வங்கியின் இந்த 5 குறிப்புகளைக் கொண்டு 500 ரூபாய் நோட்டின் உண்மைத் தன்மையை எளிதில் கண்டுபிடித்து விடலாம்.

இதையும் படியுங்கள்:
வீட்டில் சோலார் பேனல் அமைக்கப் போறீங்களா? கட்டணச் சலுகைகளை வாரி வழங்கும் தமிழக அரசு!
500 ரூபாய் நோட்டு

கள்ள நோட்டுகளை ஒழித்துக் கட்ட மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சி எடுத்து வரும் சூழலில், பொதுமக்களும் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.

கூடுதல் சரிபார்ப்பு குறிப்பு:

500 ரூபாய் நோட்டின் மேல்புற இடது மற்றும் கீழ்ப்புற வலது பக்கங்களில் இருக்கும் வரிசை எண்கள், இடமிருந்து வலமாக செல்லச் செல்ல சிறியதில் இருந்து பெரியதாக வளர்ந்துகொண்டே போகும்.