இன்ப அதிர்ச்சி.!! 2 வாரங்களில் ரூ.11,240 சரிவு.! இன்னும் எவ்வளவு குறையும்?

தங்கம், வெள்ளி விலை நிலவரம்.!
தங்கம் விலை
Gold rate
ரா.வ.பாலகிருஷ்ணன்

ரா.வ.பாலகிருஷ்ணன் ஒரு பொறியியல் பட்டதாரி. கல்லூரிப் படிப்புக்குப் பின் எழுத்தின் மீது ஆர்வம் கொண்டு கவிதை, கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். கல்கி ஆன்லைனில் கட்டுரை எழுதுவதில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்ற இவர், செய்திகளை உடனுக்குடன் தருவதில் தேர்ந்தவர். பொருளாதாரம் பசுமை தொடர்பான கட்டுரைகளையும் சிறப்பாக எழுதி வருகிறார்.

Updated on: 

இன்று (நவம்பர் 19) 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூ.1,880 குறைந்து ரூ.95,840-க்கு விற்பனையாகிறது. இன்று வெள்ளி விலை 1 கிராம் ரூ.5 குறைந்து ரூ.180-க்கு விற்பனையாகிறது.

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிந்து வருகிறது. டாலரின் மதிப்பு உயர்ந்து வருவதே இதற்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. உலக சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விற்பனை டாலரிலேயே வணிகம் செய்யப்படுகிறது. இதனால் மற்ற நாடுகள் அவர்களுடைய கரன்சியில் தங்கத்தை வாங்குவது, அதிக செலவை ஏற்படுத்தும்.

டாலரின் மதிப்பு உயர்ந்து வரும் தற்போதைய சூழலில், தங்க முதலீடுகள் குறைந்துள்ளன. இதுதவிர டிசம்பர் மாதத்தில் அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகிதம் உயர்தத்ப்பட இருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன. இதன் காரணமாகவும் தங்கம் விலை குறைந்து வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்புதான் அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டது. அப்போதே அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில் மீண்டும் வட்டி விகிதம் உயர இருப்பது, தங்கத்தின் விலையை பெருமளவு குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்றைய தங்கம் விலை நிலவரம்:

நேற்று (நவம்பர் 18) தங்கம் விலை ஒரு கிராம் ரூ.255 குறைந்து ரூ.12,215-க்கும், ஒரு சவரன் ரூ.2,040 குறைந்து ரூ.97,720-க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலை 1 கிராம் ரூ.5 குறைந்து ரூ.185-க்கு விற்பனையானது.

இன்றைய விலை நிலவரம்:

தங்க நகைப் பிரியர்கள் அனைவருக்கும் நிம்மதி அளிக்கும் வகையில், இன்று (நவம்பர் 19) தங்கத்தின் விலை சரசரவென சரிந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.235 குறைந்து ரூ.11,980-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1,880 குறைந்து, ரூ.95,840-க்கு விற்பனையாகிறது. கடநத் 2 வாரஙக்ளில் 11,240 ரூபாய் குறைந்துள்ளது தஙக்ம் விலை.

வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.5 குறைந்து, ரூ.180-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ.1,80,000-க்கு விற்பனையாகிறது.

Gold & Silver Price
Gold & Silver
இதையும் படியுங்கள்:
மகளிர் உரிமைத் தொகை: நவம்பர் மாதப் பட்டியல் வெளியீடு – உங்கள் பெயர் உள்ளதா? சரிபார்ப்பது எப்படி?
தங்கம் விலை

தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், தங்கம் வாங்க நினைப்போர் இப்போதே வாங்கலாமா அல்லது இன்னும் விலை குறையும் எனக் காத்திருக்கலாமா என்ற குழப்பத்தில் உள்ளனர். இந்நிலையில் தங்கம் விலை மேலும் 4% முதல் 5% வரை குறையும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில மாதங்களாக தங்கத்தில் முதலீடு செய்தவர்கள், அதனை விற்று லாபத்தை ஈட்டி வருகின்றனர். இதனால் சநதையில் தங்க முதலீடு தொடர்ந்து குறைந்து வருகிறது. பலமான டாலர் மதிப்பு, நிதிக் கொள்கை மற்றும் அமெரிக்க பத்திர வருவாய் உயர்வால் வருமானம் குறையும் சொத்துக்களில் இருந்து முதலீட்டாளர்கள் வெளியேறி வருகின்றனர். இதன் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி விலையில் சரிவு இருக்கும் என்றே கூறப்படுகிறது.

தங்கம் வாங்க திட்டமிட்டவர்களுக்கு தற்போதைய சரிவு நல்வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்த சரிவு எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்று தெரியாது. சந்தையில் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் போது, விலையும் உயர்ந்துவிடும் என்பதால், இந்த சரிவை பயன்படுத்திக் கொள்வதே சிறந்தது

இதையும் படியுங்கள்:
பறவைக் காய்ச்சலை ஒழிக்க இந்தியாவின் முதல் H5N1 தடுப்பூசி அறிமுகம்!
தங்கம் விலை
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.