ஜூன் மாதத்தில் மட்டும் 4,436 இவி ஸ்கூட்டர்கள் விற்பனை: மாஸ் காட்டும் River Indie!

ரிவர் இண்டி இ-ஸ்கூட்டர் ஜூன் மாதத்தில் அதிகபட்ச விற்பனையை எட்டியுள்ளது, அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து 43,805 யூனிட்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
River Indie EV|எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
River Indie EV|எலக்ட்ரிக் ஸ்கூட்டர்image credit-rideriver.com
Updated on

பெங்களூருவைச் சேர்ந்த மின்சார வாகன ஸ்டார்ட்அப் நிறுவனமான ரிவர் (River) மொபிலிட்டியின் இண்டி, உச்சபட்சமாக கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 4,436 யூனிட்கள் Indie EV ஸ்கூட்டர்களை சந்தையில் விற்பனை செய்து புதிய மாதாந்திர உச்சத்தைப் பதிவு செய்துள்ளது.

ரிவர் மொபிலிட்டி (River Mobility) என்பது பெங்களூரை மையமாகக் கொண்டு இயங்கும் ஒரு இந்திய எலக்ட்ரிக் வாகன (EV) ஸ்டார்ட்-அப் நிறுவனமாகும். கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் அரவிந்த் மணி மற்றும் விபின் ஜார்ஜ் ஆகியோரால் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், வாடிக்கையாளர்களை கவரும் வகையில் தனித்துவமான மற்றும் நடைமுறைக்கு உகந்த எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களைத் தயாரிப்பதில் கவனம் செலுத்தி வருகிறது.

River நிறுவனம் தற்போது இந்தியா முழுவதும் சுமார் 40 கடைகளை இயக்கி வருகிறது. பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், கொச்சி மற்றும் கோயம்புத்தூர் போன்ற தென்னிந்திய நகரங்களில் இது ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளது.

சமீபகாலமாக இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் களுக்கான மார்க்கெட் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், River நிறுவனத்தின் தயாரிப்பான இண்டி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனை தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருகிறது. எந்த அளவிற்கு என்றால், கடந்த ஜூன் மாதத்தில் மொத்தம் 4,436 இண்டி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ரிவர் மொபிலிட்டி நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

அதாவது இந்நிறுவனம் இந்திய மின்சார இருசக்கர வாகன சந்தையில் நுழைந்து மூன்று ஆண்டுகளுக்குச் சற்றுக் குறைவான காலத்திலேயே, ஜூன் 2026-ல் 4,436 யூனிட்கள் என்ற தனது அதிகபட்ச மாதாந்திர சில்லறை விற்பனையைப் பதிவு செய்து சந்தையில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதில் முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால் இந்த நிறுவனத்தில் இருந்து தற்போதைக்கு இண்டி (Indie) என்கிற ஒரேயொரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் மட்டுமே விற்பனை செய்யப்படுவதால், மேற்கூறப்பட்ட 4,436 விற்பனை எண்ணிக்கை மொத்தமும் ரிவர் இண்டி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உடையது மட்டுமே.

2023-ம் ஆண்டு அறிமுகம் ஆனதில் இருந்து இதுவரை (ஜூன்) மொத்தம் 43,805 யூனிட் இண்டி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

அதுவே 2026-ம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில்(ஜனவரி-ஜூன்) மட்டுமே சுமார் 21,383 ரிவர் இண்டி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதாவது, கடந்த 2025-ம் ஆண்டு முழுவதும் விற்பனை செய்யப்பட்டதை காட்டிலும், இந்த 2026-ம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களிலேயே அதிக இண்டி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.

அதன் விற்பனையில் ஏற்பட்ட பெரும் முன்னேற்றத்தின் விளைவாக, ரிவர் மொபிலிட்டி இப்போது மாதாந்திர சிறந்த 10 இ-2W OEM பட்டியலில் ஒரு வழக்கமான இடத்தைப் பிடித்துள்ளது.

கடந்த 2025-ம் ஆண்டில் அதிக எண்ணிக்கையில் எலெக்ட்ரிக் 2-வீலர்களை விற்பனை செய்த நிறுவனமாக ரிவர் மொபிலிட்டி ஒன்பதாவது இடத்தை பிடித்து இருந்தது.

175 நிறுவனங்களுக்கு மத்தியில் (2026) ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் ஆகிய மூன்று மாதங்களின் முடிவில் 8-வது இடத்தில் இருந்த ரிவர் மொபிலிட்டி, அடுத்த ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களின் முடிவில் 7-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
ஜெலோ நைட் பிளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்: நவீன வசதிகளுடன் வெறும் 59 ஆயிரம்தான்
River Indie EV|எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

இண்டி அனைவரையும் ஒரு ஈர்க்கக்கூடிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். இது ஆடம்பரமான அம்சங்களை விட, பயன்பாட்டை அதிகப்படுத்துவதில் கவனம் செலுத்தும் ஒரு பெரிய, விசாலமான மற்றும் வசதியான வாகனமாகும்.

அதுமட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் விற்பனையாகி வரும் இண்டி ஈவி (Indie EV) ஸ்கூட்டர், ஓலா மற்றும் டிவிஎஸ் போன்ற முன்னணி நிறுவனங்களுக்கு போட்டியாக அசுர வளர்ச்சி கண்டுள்ளது.

River Indie EV|எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
River Indie EV|எலக்ட்ரிக் ஸ்கூட்டர்image credit-mobilityoutlook.com

ரிவர் இண்டி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சிறப்பு அம்சங்கள்

ரிவர் இண்டி (River Indie) என்பது இந்தியாவில் 'ஸ்கூட்டர்களின் SUV' (SUV of Scooters) என்று அழைக்கப்படும் ஒரு பிரீமியம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். மேலும் இது நிச்சயமாக ஒரு தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இதன் வடிவமைப்பு, தோற்றத்தை விட செயல்பாட்டிற்கே அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. இந்த ஸ்கூட்டரின் முன்பக்கத்தில் உள்ள கிராஷ் கார்டுகளும், பின்பக்கத்தில் உள்ள பேனியர் மவுண்ட்களும் இந்த ஸ்கூட்டருக்கு ஒரு முரட்டுத்தனமான தோற்றத்தை அளிக்கின்றன.

கூடுதலாக, ஃப்ளோர் போர்டில் பொருட்களை எடுத்துச் செல்வதை மிகவும் பாதுகாப்பானதாக மாற்றும் வகையில், கழற்றி மாட்டக்கூடிய ஃப்ளோர் கேஜ் ஒன்றும் உள்ளது. இதன் விலை ரூ.155 லட்சமாக (எக்ஸ் ஷோரூம்) உள்ளது.

தனித்துவமான மற்றும் உறுதியான வடிவமைப்பிற்குப் பெயர் பெற்ற இந்த இண்டி ஈவி ஸ்கூட்டர் ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 120 கி.மீ முதல் 160 கி.மீ வரை தடையின்றி பயணிக்க முடியும். தினமும் சுமார் 20 கி.மீ பயணம் செய்பவர்கள், பேட்டரியை மீண்டும் சார்ஜ் செய்வதற்கு முன் கிட்டத்தட்ட நான்கு நாட்கள் வரை தாராளமாக இந்த ஸ்கூட்டரைப் பயன்படுத்தலாம்.

மேலும் இதன் மிகக்குறைவான இருக்கை உயரம் மற்றும் பெரிய வடிவமைப்பு காரணமாக, குட்டையான மற்றும் உயரமான ஓட்டுநர்கள் இருவருக்கும் இது ஏற்றதாக உள்ளது.

இதில் 6.7kW எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. முன்பகுதியில் க்ராஷ் கார்டுகள், 14 இன்ச் அலாய் வீல்கள் மற்றும் தரமான டிஜிட்டல் டிஸ்ப்ளே ஆகியவை உள்ளன. இதில் உள்ள 6-இன்ச் TFT திரை போதுமான தகவல்களைக் காண்பிப்பதோடு, ஓட்டுநர்களுக்கு முக்கியமான தகவல்களை ஒரே பார்வையில் வழங்கும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
ஒரே சார்ஜில் 180 கிமீ ரேஞ்ச்! இந்தியாவில் களமிறங்கியது கீவே 'ஹைப்வோல்ட் ஆர்' எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!
River Indie EV|எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

இந்த ஸ்கூட்டர் அதன் மாடல்களிலேயே மிகப்பெரியதான 55 லிட்டர் கொள்ளளவு கொண்ட சேமிப்பு வசதியுடன் (43 லிட்டர் சீட் அடியில் மற்றும் 12 லிட்டர் க்ளோவ் பாக்ஸ்) சந்தையில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. சீட் அடியில் மளிகைப் பொருட்கள், ஒரு பேக் பேக், ஒரு பெரிய ஹெல்மெட் போன்ற அன்றாட அத்தியாவசியப் பொருட்களை வைப்பதோடு, சார்ஜரை வைப்பதற்கும் போதுமான இடம் உள்ளது.

கூடுதலாக, ஃப்ளோர் போர்டில் பொருட்களை எடுத்துச் செல்வதை மிகவும் பாதுகாப்பானதாக மாற்றும் வகையில், கழற்றி மாட்டக்கூடிய ஃப்ளோர் கேஜ் ஒன்றும் உள்ளது. இதன் விலை ரூ.155 லட்சமாக (எக்ஸ் ஷோரூம்) உள்ளது.

இதன் மூலம் சந்தையில் உள்ள மற்ற சாதாரண எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விட ரிவர் இண்டி எவ்வாறு ஒரு தனித்துவமான 'பயன்பாட்டு வாகனமாக' (Utility Vehicle) வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறிந்துகொள்ள முடியும். ஒருமுறை சார்ஜ் செய்தால் கிடைக்கும் மைலேஜ் மற்றும் அன்றாடப் பயன்பாட்டிற்குத் தேவையான பிரம்மாண்ட ஸ்டோரேஜ் வசதிகள் குறித்த முழுமையான புரிதல் உங்களுக்குக் கிடைக்கும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.

Reference:

logo
Kalki Online
kalkionline.com