லாங் ரைடுக்கு பக்காவான சாய்ஸ்! நவீன வசதிகளுடன் வெளியான புதிய 'Royal Enfield Bullet 650'!

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது புதிய புல்லட் 650 மோட்டர் சைக்கிளை இந்தியாவில் ரூ.3.65 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகப்படுத்தி உள்ளது.
Royal Enfield Bullet 650
Royal Enfield Bullet 650image credit-bikedekho.com
Updated on

ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) உலகின் பழமையான மோட்டார் சைக்கிள் பிராண்டாகும். இது 1901-ம் ஆண்டு இங்கிலாந்தில் தொடங்கப்பட்டது. 1955-ல் இந்திய நிறுவனமான மெட்ராஸ் மோட்டார்ஸுடன் இணைந்து சென்னையில் உள்ள திருவொற்றியூரில் 'என்ஃபீல்ட் இந்தியா'ஆலை உருவானது. தற்போது இது சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஐஷர் மோட்டார்ஸ் (Eicher Motors) நிறுவனத்தின் துணை நிறுவனமாகும்.

இன்று உலகளவில் மிகச்சிறந்த பைக் தயாரிப்பு நிறுவனமாக வளர்ந்துள்ள இந்நிறுவனம் நவீன தொழில்நுட்பத்துடன் புல்லட், கிளாசிக் (Classic 350), இன்டர்செப்ட்டர் (Interceptor 650), மற்றும் இமாலயன் (Himalayan) போன்ற பைக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது புதிய புல்லட் 650 மோட்டர் சைக்கிளை இந்தியாவில் ரூ.3.65 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகப்படுத்தி உள்ளது. புல்லட் 650 பைக், மோட்டோவர்ஸ் 2025-ல் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டு, ஜனவரி 2026-ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பல தாமதங்களுக்குப் பிறகு, இறுதியாக தற்போது இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.

கேனான் பிளாக் மற்றும் பேட்டில்ஷிப் புளூ என இரண்டு நிறங்களில் கிடைக்கும் இந்த பைக், நிறுவனத்தின் 650 சிசி வரிசையில் புதிய சேர்க்கையாக வந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
சத்தமின்றி களத்தில் இறங்கிய புதுப்பிக்கப்பட்ட ராயல் என்ஃபீல்டு கெரில்லா 450
Royal Enfield Bullet 650

650சிசி வரிசையில் உள்ள மற்ற மாடல்களைப் போலவே, இதுவும் 647.95சிசி, காற்று மற்றும் எண்ணெய் குளிர்விக்கப்பட்ட, பேரலல்-ட்வின் இன்ஜின் வழங்கப் பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 46.4 ஹெச்.பி. சக்தி மற்றம் 52.3 என்.எம். டார்க் திறனை வெளிப் படுத்துகிறது. இதனுடன்ஸ்லிப்-அண்ட்-அசிஸ்ட் கிளட்ச் கொண்ட 6-ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. நீண்ட தூர பயணங்களுக்கும், நெடுஞ்சாலை சவாரிகளுக்கும் ஏற்ற வகையில் இந்த பைக் தயாரிக்கப்பட்டுள்ளது.

வடிவமைப்பை பொறுத்தவரை புல்லட்டின் பாரம்பரிய தோற்றம் அப்படியே தொடர்கிறது. டைகர் ஐ லைட்களுடன் கூடிய புகழ்பெற்ற வட்ட வடிவ ஹெட்லைட் அமைப்பு, கண்ணீர்த்துளி வடிவ எரிபொருள் டோங்க், கையால் வரையப்பட்ட தங்க நிற கோடுகள், குரோம் எக்ஸாஸ்ட் மற்றும் நிமிர்ந்த அமர்வு நிலை மற்றும் தடிமனான பின்புற ஃபெண்டர் ஆகியவை இதன் முக்கிய அம்சங்களாகும். அதேபோல் எல்.இ.டி. ஹெட்லைட், டைகர்-ஐ பைலட் விளக்குகள், யூ.எஸ்.பி. டைப்-சி சார்ஜிங்க போர்ட், செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளிட்ட வசதிகளும் இடம் பெற்றுள்ளன.

இந்த புல்லட், டூயல்-கிரேடில் ஃபிரேமில் கட்டமைக்கப்பட்டு, டெலஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் இரட்டை ஷாக் அப்சார்பர்கள் மூலம் சஸ்பென்ஷன் செய்யப்பட்டுள்ளது. இது 19-இன்ச் முன்புற மற்றும் 18-இன்ச் பின்புற ஸ்போக் வீல் அமைப்பில் இயங்குகிறது. மேலும் டூயல்-சேனல் ஏபிஎஸ் உடன் கூடிய 320மிமீ முன்புற மற்றும் 300மிமீ பின்புற டிஸ்க் பிரேக் அமைப்பு, பிரேக்கிங் பணிகளைக் கையாளுகிறது.

மொத்தத்தில் பாரம்பரிய புல்லட் தோற்றத்தையும் நவீன 650 சிசி செயல்திறனையும் ஒருங்கிணைக்கும் மாடலாக புதிய புல்லட் 650 களத்தில் இறங்கியுள்ளது. கிளாசிக் ஸ்டைலையும், சக்தி வாய்ந்த பயண அனுபவத்தையும் விரும்பும் வாடிக்கையாளர்களை இந்த பைக் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
'Flying Flea C6' : கிளாசிக் லுக்... மாடர்ன் டெக்னாலஜி... ராயல் என்ஃபீல்டு எலெக்ட்ரிக் பைக்!
Royal Enfield Bullet 650

இது 650சிசி பிளாட்ஃபார்மில் வெளிவரும் கடைசி மோட்டார்சைக்கிளாக இருக்கக்கூடும் என தெரிகிறது. ஏனெனில் இதற்குப் பிறகு, ராயல் என்ஃபீல்டு நிறுவனம் வரவிருக்கும் 750சிசி பிளாட்ஃபார்மில் கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com