

ராயல் என்ஃபீல்டு இந்தியாவில் சென்னையை தலைமையிடமாக கொண்டு மோட்டார் சைக்கிள்களை தயாரிக்கும் நிறுவனமாகும். இது உலகில் இன்றளவும் வழக்கத்தில் உள்ள மிக பழமையான மோட்டார் சைக்கிள் நிறுவனமாகும். 1901-ல் இங்கிலாந்தில் தொடங்கி, 1955-ல் இந்தியாவிற்கு வந்து, தற்போது சென்னையில் உலகளாவிய தயாரிப்பு மையத்தைக் கொண்டுள்ளது.
இதன் தனித்தன்மையான மோட்டார் சைக்கிள் ராயல் என்ஃபீல்டு புல்லட், தனது தனிப்பட்ட அதிரவைக்கும் ஒலியுடன் கூடிய உயர்திறன் இயந்திரங்கள் இந்த நிறுவனத்தின் மதிப்புமிக்க மோட்டார் சைக்கிள் வகைகளில் குறிப்பிடத்தக்கது. சென்னையில் உள்ள வல்லம்-ஒரகடம் உள்ளிட்ட இடங்களில் உள்ள அதிநவீன தொழிற்சாலைகளில் பைக்குகள் தயாரிக்கப்படுகின்றன.
புல்லட், கிளாசிக் 350, இன்டர்செப்டர் 650 போன்ற கிளாசிக் பைக்குகளுக்குப் பெயர் பெற்ற இந்நிறுவனம், 2025-ல் 10 லட்சத்திற்கும் அதிகமான பைக்குகளை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம், பிளையிங் பிளீ சி6 (Flying Flea C6)என்ற எலெக்ட்ரிக் மோட்டர் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இது இந்த நிறுவனம் சந்தைப்படுத்தியுள்ள முதல் எலெக்ட்ரிக் பைக் என்பது குறிப்பிட்த்தக்கது.
இதில் 3.91 கிலோவாட் ஹவர் பேட்டரி இடம் பெற்றுள்ளது. இதிலுள்ள பி.எம்.எஸ்.எம் மோட்டர் அதிகபட்சமாக 20 எச்.பி பவரை வெளிப்படுத்தும். 3.7 நொடிகளில், 60 கிலோ மீட்டர் வேகத்தை எட்டும். 154 கிமீ IDC ரேஞ்ச் மற்றும் அதிக பட்சமாக மணிக்கு 115 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லும்.
இது 15.4 kW (21 bhp) மற்றும் 60 Nm டார்க்கை வெளிப் படுத்தும் செயல்திறன் கொண்ட எலெக்ட்ரிக் பைக். இதில் 5 ரைடிங் மோடுகள், கார்னரிங் ABS மற்றும் கிராஃபிக் டிஸ்ப்ளே கொண்ட வட்ட வடிவ TFT திரை போன்ற தொழில்நுட்பங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த பைக் 1940-ம் ஆண்டுகளின் கிளாசிக் ஸ்டைலை நினைவூட்டும் வகையில், நவீன தொழில்நுட்பம் மற்றும் அதீத வேகத்திறனுடன்'கிரிடர் ஃபோர்க்' (Girder Fork) முன்பக்க சஸ்பென்ஷன் கொண்ட தனித்துவமான தோற்றத்தை வழங்குகிறது. அந்த பைக் 124 கிலோ மட்டுமே இருப்பதால், பைக் பிரியர்கள் கையாள்வதற்கு மிகவும் எளிதானது.
மெக்னீசியம் பேட்டரி உறை, வார்ப்பட அலுமினிய சேசிஸ், வார்ப்பு அலாய் சக்கரங்கள் ஆகியவை FF.C6-ல் எடையைக் குறைத்து, செயல்திறனை மேம்படுத்துகின்றன.
க்ரூஸ் கண்ட்ரோல், சாய்வுக் கோணத்தை உணரும் ஏபிஎஸ், ஆட்டோ-ஹோல்ட் மற்றும் மாற்றிக் கொள்ளக்கூடிய கால் மிதிப்பான்கள் மூலம், உங்கள் சவாரி அனுபவத்தை நீங்கள் விரும்பும் அளவுக்கு நிதானமாகவோ அல்லது ஆக்ரோஷமாகவோ மாற்றிக்கொள்ளலாம்.
முழுமையாக சார்ஜ் செய்தால் 154 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கலாம். இதனுடன் வழங்கப்படும் சார்ஜர் மூலம் சார்ஜ் செய்தால் 65 நிமிடங்களில் 20 சதவீதத்தில் 80 சதவீமாக சார்ஜ் ஆகிவிடும் என நிறுவன தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மிகவும் அசத்தலான வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மோட்டார் சைக்கிளில் எல்.இ.டி லைட்டுகள், கூகுளுடன் இணைந்த நேவிகேஷன் வசதி, வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் USB-C போர்ட்கள், ரைடிங் மோட்கள் உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இதில் பாதுகாப்பு வசதிகளுக்காக 'லீன்-ஆங்கிள் ஏபிஎஸ்' (Lean-angle ABS) மற்றும் டிராக்ஷன் கன்ட்ரோல் போன்ற அதிநவீன அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
ராயல் என்ஃபீல்டின்'பிளையிங் பிளீ C6' மாடல் ரூ.2.79 லட்சம் விலையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களின் சுமையைக் குறைக்க, 'பேட்டரி-ஒரு-சேவையாக' (BaaS) என்ற புதிய திட்டத்தின் கீழ் ரூ.1.99 லட்சத்திற்கும் இந்த பைக்கை வாங்க முடியும். இதற்கான முன்பதிவுகள் கடந்த ஏப்ரல் 10-ம்தேதியில் இருந்து தொடங்கியது.