

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது புதிய ஹிமாலயன் 440 பைக்கை (Royal Enfield Himalayan 440) நாளை வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 4-ம்தேதி) இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது.
ராயல் என்ஃபீல்ட் (Royal Enfield) இந்தியாவில் சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும், உலகின் மிகப்பழமையான மற்றும் தொடர்ச்சியான உற்பத்தியில் உள்ள மோட்டார் சைக்கிள் பிராண்ட் ஆகும்.
1901-ம் ஆண்டு இங்கிலாந்தில் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் இந்தியாவில் 1955-ம் ஆண்டு முதல் ‘என்ஃபீல்டு இந்தியா’ என்ற பெயரில் சென்னையில் தனது உற்பத்தியை தொடங்கியது. தமிழ்நாட்டில் உள்ள திருவொற்றியூர், ஒரகடம் மற்றும் வல்லம் வடகால் ஆகிய இடங்களில் இதன் ஆலைகள் அமைந்துள்ளன.
கிளாசிக் 350, ஹண்டர் 350, சூப்பர் மீடியோர் 650 மற்றும் புல்லட் போன்ற புகழ்பெற்ற பைக்குகளை தயாரிக்கும் இந்நிறுவனம், உலகளவில் பல நாடுகளுக்கு மோட்டார் சைக்கிள்களை ஏற்றுமதி செய்கிறது.
இந்நிலையில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ஆஃப் ரோடில் அசத்தும் வகையில் வடிவமைத்துளள புதிய ஹிமாலயன் 440 பைக்கை நாளை வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 4-ம்தேதி) இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இதனால், இந்த பைக் எப்போது சந்தையில் அறிமுகமாகும் என்று எதிர்பார்த்து காத்திருந்தவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஸ்கிராம் 440 பைக்கில் உள்ள அதே 443 சிசி, ஏர்/ ஆயில் கூல், சிங்கிள் சிலிண்டர் என்ஜினை, ராயல் என்ஃபீல்டின் வரவிருக்கும் ஹிமாலயன் 440-ல் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 6 ஆயிரத்து 250 ஆர்பிஎம் கொண்டது. இது 25bhp சக்தியையும் 34.5Nm டார்க்கையும் உருவாக்கும். மேலும், இதில் டிரிப்பர் நேவிகேஷன் மாட்யூல் இடம்பெற்றுள்ளது
6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ள ஹிமாலயன் 440, பழைய 411சிசி மாடலை விட நெடுஞ்சாலைகளில் குறிப்பிடத்தக்க அளவு மேம்பட்ட செயல்திறனை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயம், இதில் சேர்க்கப்பட்டுள்ள ஸ்விட்ச்சபிள் ஏபிஎஸ், டிரிப்பர் நேவிகேஷன் மற்றும் பைக்கில் முன்பக்கம் பொருத்தப்பட்டுள்ள 21 இன்ச் சக்கரம் /17-இன்ச் ஸ்போக்டு வீல்கள் ஆகியவை அதன் ஆஃப்-ரோடிங் திறன்களை அதிகரிக்கும்.
வரவிருக்கும் ஹிமாலயன் 440-ன் சமீபத்திய புகைப்படங்கள், ராயல் என்ஃபீல்டின் மற்ற ஆரம்ப நிலை மாடல்களில் காணப்படுவதைப் போன்ற, சிறிய எல்சிடி (LCD) திரையுடன் கூடிய ஒரு எளிய, அனலாக் ஸ்பீடோமீட்டரை வெளிப்படுத்தியுள்ளன. மேலும் இதில் டிஎஃப்டி டிஸ்ப்ளே, ஜிபிஎஸ் நேவிகேஷன் வசதி, ப்ளூடூத் வசதி உள்ளது.
ராயல் என்ஃபீல்டு மாடல்களில் 'லிங்க்டு ரியர் மோனோஷாக்' (linked rear monoshock) வசதியைக் கொண்ட முதல் மாடல்களில் ஒன்றாக ஹிமாலயன் 411 (Himalayan 411) திகழ்ந்தது; அதே அம்சம் ஹிமாலயன் 440 மாடலிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இருப்பினும் அதன் 'டிராவல்' (travel) மற்றும் சரிசெய்யும் வசதி (adjustability) ஆகியவற்றில் மாற்றங்கள் இருக்கலாம்.
ஹிமாலயன் 450-ஐ விட எளிமையான தொழில்நுட்ப வசதிகளுடன், நீண்ட தூர பயணம் மற்றம் கரடுமுரடான சாலைகளுக்கு ஏற்ற வகையில் ஹிமாலயன் 440 உருவாக்கப்பட உள்ளது.
இதன் எக்ஸ்-ஷோரூம் விலை இந்தியாவில் சுமார் ரூ.2.20 லட்சம் முதல் ரூ.2.50 லட்சம் வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீண்ட தூர மற்றும் சாகச பயணங்களை தற்போதுள்ள இளைஞர்கள் பலரும் விரும்புவதால் ஆஃப் ரோட் வாகனங்களை பலரும் விரும்பி வாங்கி வருகின்றனர்.
இதனால் நாளை அறிமுகமாக உள்ள இந்த ‘Royal Enfield Himalayan 440’ பைக் இந்திய சந்தையில் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
Reference: