ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 750: அட்வென்ச்சர் பிரியர்களுக்கு செம ட்ரீட்!

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது புதிய ஹிமாலயன் 750 ரக அட்வென்சர் பைக்கை உருவாக்கி வருகிறது.
என்ஃபீல்டு ஹிமாலயன் 750
என்ஃபீல்டு ஹிமாலயன் 750image credit-thebikejunction.com
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது புதிய ஹிமாலயன் 750 (Royal Enfield Himalayan 750) அட்வென்ச்சர் பைக்கை உருவாக்கி வருகிறது. தற்போது இந்தியாவில் விற்பனையாகி வரும் ஹிமாலயன் 450 பைக்கின் அடுத்தகட்ட மாடலாக ஹிமாலயன் 750 உருவாக்கப்பட்டு வருகின்றன. ஹிமாலயன் 450-ஐ விட அதிக சக்தி மற்றும் நீண்டதூரப் பயணத்தை மையமாக கொண்டு தயாராகிறது.

அந்த வகையில் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 750 என்பது புதிய 750சிசி இரட்டை சிலிண்டர் (Twin-cylinder) எஞ்சினுடன் வெளிவரவிருக்கும் ஒரு முன்னணி சாகச மோட்டார்சைக்கிள் (ADV) ஆகும்.

இதில் சுமார் 750 சிசி பேரலல்-ட்வின் என்ஜின் இடம் பெற உள்ளது. பவர், டார்க் போன்ற விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்றாலும் இது சுமார் 55 பிஹெச்பி பவர் மற்றும் 60 என்எம் டார்க் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இருக்கும்பட்சத்தில் இது ராயல் என்ஃபீல்டின் இதுவரை இல்லாத மிகவும் சக்திவாய்ந்த மோட்டார்சைக்கிளாக இதை மாற்றக்கூடும்.

ஹிமாலயன் 450-ஐப் போலல்லாமல், வரவிருக்கும் 750 மாடல் முதன்மையாக சுற்றுப்பயணங்களுக்காக வடிவமைக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதில் ஒரு பெரிய எரிபொருள் தொட்டி, தாழ்வான மற்றும் எளிதில் அணுகக்கூடிய இருக்கை, நிலையான விண்ட்சீல்ட் மற்றும் சென்டர் ஸ்டாண்ட் ஆகியவை இடம்பெற்றுள்ளன, இது நீண்ட தூரப் பயணங்களில் சௌகரியத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதைக் காட்டுகிறது.

ஹிமாலயன் பைக்களில் உள்ள 21-அங்குல சக்கரங்களுக்குப் பதிலாக 19-அங்குல சக்கரம் மற்றும் சற்று உயரமான இருக்கை அமைப்பு ஆகியவை இடம்பெற வாய்ப்புள்ளது.

19 அங்குல முன்சக்கரம், 17 அங்குல பின்சக்கரம், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய யுஎஸ்டி முன்பக்க போர்க் மற்றும் சஸ்பென்ஷன் அமைப்பில் ஷோவா USD ஃபோர்க்குகள் மற்றும் ரிமோட் ப்ரீலோட் அட்ஜஸ்டருடன் கூடிய பின்புற மோனோஷாக் ஆகியவையும் எதிர்பார்க்கப்படுகிறது.

Royal Enfield Himalayan 750
Royal Enfield Himalayan 750image credit-indiacarnews.com

இத்துடன் ரெடிஸ்டைன் சென்ட்யூரோ டயர்கள் வழங்கப்படுகின்றன. சஸ்பென்ஷனுக்கு முழுமையாக அட்ஜஸ்ட் செய்யக்கூடிய யூனிட், பிரேக்கிங்கிற்கு முன்புறத்தில் இரு டிஸ்க்குகள், பின்புறம் ஒற்றை டிஸ்க் வழங்கப்படுகிறது.

ஹிமாலயன் 450-ல் உள்ள 21 இன்ச் சக்கரத்திற்கு பதிலாக இதில் 19 இன்ச் முன் சக்கரம் வழங்கப்படலாம். இதன் LED முகப்பு விளக்கு, தற்போதுள்ள பெரும்பாலான ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள்களைப் போலவே காட்சியளிக்கிறது. மேலும், ராயல் என்ஃபீல்டு பைக்குகளில் முதல் முறையாக, இதில் 'ரைடு-பை-வயர்' த்ராட்டில் வசதியும் இடம்பெறும்.

இதையும் படியுங்கள்:
'Flying Flea C6' : கிளாசிக் லுக்... மாடர்ன் டெக்னாலஜி... ராயல் என்ஃபீல்டு எலெக்ட்ரிக் பைக்!
என்ஃபீல்டு ஹிமாலயன் 750

மேலும் குரூஸ் கண்ட்ரோல் (Cruise Control), டிராக்ஷன் கண்ட்ரோல், டிஎப்டி திரை, பெரிய விண்ட்ஸ்கிரீன், ட்ரெட்புரூஃப் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS), வட்ட வடிவ டிஎஃப்டி டிரிப்பர் டேஷ் (TFT Tripper Dash) மற்றும் முன்பக்கத்தில் இரட்டை டிஸ்க் பிரேக்குகள் போன்ற வசதிகளுடன் நீண்டதூர சாகர பயணத்திற்கு ஏற்ற பைக்காக ஹிமாலயன் 750 உருவாகிறது. இந்த விலை மற்றும் அறிமுக தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

நீண்ட தொலைவுக்கு பயணம் மேற்கொள்ள விரும்பும் அட்வென்சர் ரைடுகளுக்கு ஏற்ற வகையில் புளூடூத் இணைப்பு, டிராக்‌ஷன் கன்ட்ரோல், ரைடு மோடுகள் போன்ற வசதிகளும் இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாதத் தொடக்கத்தில் லடாக்கின் லே பகுதியில் நடைபெற்ற ராயல் என்ஃபீல்ட் விழாவில் ஹிமாலயன் 750 பைக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. முன்னதாக ஹிமாலயன் 750 மாசஸ் டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படங்கள் பலமுறை இணையத்தில் லீக் ஆகியிருக்கின்றன.

என்ஃபீல்டு ஹிமாலயன் 750 இந்தாண்டு இறுதிக்குள் அல்லது 2027 பிப்ரவரி மாதத்திற்குள் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் வருகிற நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் EICMA 2026 நிகழ்வில் வைத்து புதிய அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அறிவிப்பை நிறுவனம் விரைவில் வெளியிடும் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
முரட்டுத்தனமான லுக்...ராயல் என்ஃபீல்டு ‘Classic 350 Gorkha Edition’ ராணுவ பாணியில் மாஸ் என்ட்ரி!
என்ஃபீல்டு ஹிமாலயன் 750

இதன் தோராயமான விலை ரூ. 4 லட்சம் முதல் ரூ. 4.50 லட்சம் வரை இருக்கும் எனத் தெரிகிறது.

Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.

Reference:

logo
Kalki Online
kalkionline.com