செபி ஒப்புதல்: என்.எஸ்.இ ஐபிஓவில் முதலீடு செய்யலாமா?

₹30,000 கோடி மதிப்பிலான என்.எஸ்.இ ஐபிஓ குறித்த அதிமுக்கியத் தகவல்கள்.
NSE IPO - stock market updates Tamil
NSE IPO - stock market updates Tamil
ஷாராஜ்

இலக்கியவாதி மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர். 6 சிறுகதைத் தொகுப்புகள், 5 நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு, மூன்று சிறார் கதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். நாவல் போட்டிகளிலும், ஓவியப் போட்டிகளிலும் ஓரிரு பரிசுகள் / விருதுகள் / பதக்கங்கள் பெற்றுள்ளார். இவரது உலக சிறுவர் கதைகள் மற்றும் நாட்டுப்புறக் கதைகள், 2024-ல், ஓர் அங்குலச் சிறுவன், அமேஸான் கானகத்தில் வழி மறந்த சிறுமி, ஆகாயத்தைத் தின்ற மனிதர்கள் ஆகிய மூன்று நூல்களாக வெளியாகியுள்ளன. இவ் வரிசையில் இன்னும் சில தொகுப்புகள் வரவுள்ளன.

Updated on

ந்தியப் பங்குச்சந்தையில் பத்தாண்டுகளுக்கும் மேலாக உள்ள முதலீட்டாளர்கள் தேசியப் பங்குச்சந்தையின் (NSE) தொடக்கப் பொதுப் பங்கு (IPO) வெளியீட்டை (NSE IPO) நீண்டகாலமாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். அது தாமதமாகிக்கொண்டே இருந்த நிலையில் சமீப காலமாக தேசியப் பங்குச்சந்தையின் IPO வெளியாகும் என்ற செய்திகள் வந்துகொண்டிருந்தன.

இதனால் சீனியர் முதலீட்டாளர்கள் முதல் ஜுனியர் முதலீட்டாளர்கள் வரை (இங்கே சீனியர், ஜுனியர் என்பது முதலீட்டுக்காலம் அடிப்படையிலானது) இந்த வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

(04-09-26) அன்று இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இறுதியாக வெளியாகியுள்ளது. சந்தைக் கட்டுப்பாட்டு அமைப்பான செபி (SEBI), NSE-ன் ஐபிஓ வெளியீட்டிற்கான ஒப்புதலை அளித்துள்ள செய்தி, முதலீட்டாளர்களைப் பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

10 ஆண்டு காலக் காத்திருப்பின் பின்னணி

தேசியப் பங்குச்சந்தை தனது ஐபிஓ வெளியீட்டிற்கான முதல் முயற்சியை 2016-ஆம் ஆண்டிலேயே தொடங்கியது. ஆனால், அதன் பின் எழுந்த 'கோ-லொகேஷன்' (Co-location) தொழில்நுட்ப முறைகேடு வழக்குகள், செபியின் விசாரணைகள் மற்றும் நிர்வாகச் சிக்கல்கள் காரணமாக இந்த ஐபிஓ வெளியீடு பல ஆண்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

பொதுப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படாவிட்டாலும், NSE-ன் பங்குகள் பட்டியலிடப்படாத சந்தையில் (Unlisted Market) கடந்த பல ஆண்டுகளாகவே மாபெரும் வரவேற்பைப் பெற்று வந்தன. போட்டி நிறுவனமான பிஎஸ்இ (BSE) 2017-ல் பட்டியலிடப்பட்டு முதலீட்டாளர் களுக்குப் பல மடங்கு லாபம் தந்த நிலையில், NSE-ன் ஐபிஓ எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு உச்சத்திலிருந்தது. தற்போது நிலுவையில் இருந்த அனைத்து வழக்குகளும் முடிவுக்கு வந்த நிலையில், 10 ஆண்டு கால நீண்ட காத்திருப்புக்குப் பிறகு செபி இந்த ஐபிஓவிற்குப் பச்சைக்கொடி காட்டியுள்ளது.

முக்கியத் தகவல்களும் உத்தேச கால அட்டவணையும்

செபியின் ஒப்புதல் கிடைத்ததைத் தொடர்ந்து, இந்த மெகா ஐபிஓவிற்கான பணிகளில் என்.எஸ்.இ தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

• சுமார் 14.89 கோடி பங்குகள் விற்பனைக்கு வரவுள்ளன. இதன் மொத்த மதிப்பு தோராயமாக ₹30,000 கோடி.

• விலை வரம்பு செப்டம்பர் 11 அளவில் அறிவிக்கப்படக்கூடும்.

• விண்ணப்பங்கள் (Subscription) செப்டம்பர் 15–18 க்கு இடையே திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

• பட்டியலிடல் (Listing) செப்டம்பர் 24–25 அளவில் நடைபெறக்கூடும்.

தேசியப் பங்குச்சந்தை: ஒரு பார்வை

1992-ல் தொடங்கப்பட்டு 1994-ல் செயல்பாட்டுக்கு வந்த தேசியப் பங்குச்சந்தை, இந்தியாவின் மிகப்பெரிய பங்குச்சந்தையாகும். டெரிவேட்டிவ்ஸ் (F&O) வர்த்தகத்தில் உலகளவில் முன்னணியில் இருக்கும் இந்நிறுவனம், நாட்டின் மூலதனச் சந்தையின் முதுகெலும்பாக இயங்கி வருகிறது. மிக வலுவான நிதிநிலை, தொடர்ச்சியான லாபம் மற்றும் சந்தையில் தனக்கென வைத்துள்ள ஏகபோகப் பங்கு ஆகியவை இதன் கூடுதல் பலங்கள்.

NSE IPO - stock market updates Tamil
NSE IPO - stock market updates TamilImage credit: Gemini

OFS பொறிமுறையும் முதலீட்டாளர் கவனமும்

இந்த ஐபிஓவின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், இது முழுக்க முழுக்க 'ஆஃபர் ஃபார் சேல்' (Offer for Sale - OFS) ஆகும்.

பொதுவாக ஒரு நிறுவனம் ஐபிஓ வரும்போது இரண்டு வழிகளில் பங்குகளை வெளியிடும்:

1. புதிய மூலதன நிதி (Fresh Issue): இதில் திரட்டப்படும் பணம் நேரடியாக நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் விரிவாக்கத்திற்கும் பயன்படும்.

2. ஆஃபர் ஃபார் சேல் (OFS): இதில் ஏற்கனவே உள்ள பழைய முதலீட்டாளர்கள் (எ.கா: எஸ்.பி.ஐ, எல்.ஐ.சி. போன்ற அமைப்புகள்) தங்கள் வசம் உள்ள பங்குகளை விற்று வெளியேறுவார்கள்.

என்.எஸ்.இ-ன் இந்த ஐபிஓவில் திரட்டப்படும் ₹30,000 கோடியும் நிறுவனத்தின் கணக்கிற்குப் போகாது. பழைய முதலீட்டாளர்களுக்கே முழுமையாகச் சென்று சேரும்.

பொதுவாக, முழுக்க முழுக்க OFS ஆக இருக்கும் பங்குகளையோ அல்லது நிறுவன வளர்ச்சிக்குப் பணம் பயன்படாத ஐபிஓக்களையோ நீண்ட காலத்திற்கு வைத்திருப்பதைத் தவிர்க்கலாம்; பட்டியலிடப்படும் அன்றே (Listing Gains) லாபம் பார்த்துவிட்டு வெளியேறுவதே நல்லது என்பது பொதுவான சந்தைப் பார்வையாகும்.

இதையும் படியுங்கள்:
பங்குச்சந்தையில் 'காப்பி கேட்' முதலீடா? கிணற்றில் குதிப்பதற்குச் சமம்!
NSE IPO - stock market updates Tamil

சிறு முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

தேசியப் பங்குச்சந்தையைப் பொறுத்தவரை இருவேறு கருத்துகள் நிலவுகின்றன:

• எதிர்மறைப் பார்வை: நிறுவனம் புதிய மூலதனத்தைப் பெறவில்லை என்பதால், இதன் மூலம் நிறுவனத்திற்கு உடனடிப் பணப்புழக்கம் எதுவும் கூடிவிடப்போவதில்லை. எனவே நீண்டகாலப் பார்வையில் இது உகந்ததல்ல எனச் சிலர் கருதுவர்.

• நேர்மறைப் பார்வை: என்.எஸ்.இ ஏற்கனவே தனக்கான சொந்த நிதியிலும் லாபத்திலும் மிக வலிமையாக இயங்கி வரும் ஒரு ஏகபோக நிறுவனம் (Monopoly Business). அதற்குப் புதிய கடன் தேவைகளோ அல்லது விரிவாக்கத்திற்கு வெளிப்புற நிதியோ தேவையில்லை.

சிறு – குறு முதலீட்டாளர்களுக்கான ஆலோசனை

மேலே சொன்னது பொதுவான OFS ஐபிஓக்களுக்கான சந்தைப் பார்வை என்றாலும், NSE-ன் விஷயத்தில் சில கூடுதல் காரணங்களால் வேறுபட்ட அணுகுமுறை பரிசீலிக்கத்தக்கது. ஒருவேளை உங்களுக்கு இந்த ஐபிஓவில் லாட் (Lot) ஒதுக்கீடு கிடைத்தால், அதை உடனடியாக விற்காமல் நீண்ட காலத்திற்கு வைத்திருப்பதே (Hold) சிறந்த உத்தியாக இருக்கும்.

காரணம், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் பங்குச்சந்தையின் பங்கேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சந்தையின் வளர்ச்சி என்.எஸ்.இ-ன் வருவாயை நேரடியாக உயர்த்தும்.

எனவே, OFS ஆக இருந்தாலும், நாட்டின் தலையாய நிதி நிறுவனமான என்.எஸ்.இ-ன் பங்குகளை நீண்டகாலச் சொத்தாக வைப்பது பிற்காலத்தில் கணிசமான கூட்டு லாபத்தை (Compounding Returns) ஈட்டித் தர வாய்ப்புள்ளது.

இதையும் படியுங்கள்:
பங்குச்சந்தை அச்சமா? IPO அலைகளில் பெரிய மீன்களைப் பிடிக்க எளிய வழிகள்!
NSE IPO - stock market updates Tamil
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.

Reference:

logo
Kalki Online
kalkionline.com