பெண் குழந்தைக்கான சுகன்யா சம்ருத்தி திட்டம்: யார் தொடங்கலாம்? எவ்வளவு சேமிக்கலாம்? முழு விவரம்!

பிறந்தது முதல் 10 வயது வரை மட்டுமே வாய்ப்பு; அரசின் முழு வரிவிலக்கு உத்தரவாதம்.
சுகன்யா சம்ருத்தி திட்டம்
Post Office Scheme - சுகன்யா சம்ருத்தி திட்டம்
ரா.வ.பாலகிருஷ்ணன்

ரா.வ.பாலகிருஷ்ணன் ஒரு பொறியியல் பட்டதாரி. கல்லூரிப் படிப்புக்குப் பின் எழுத்தின் மீது ஆர்வம் கொண்டு கவிதை, கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். கல்கி ஆன்லைனில் கட்டுரை எழுதுவதில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்ற இவர், செய்திகளை உடனுக்குடன் தருவதில் தேர்ந்தவர். பொருளாதாரம் பசுமை தொடர்பான கட்டுரைகளையும் சிறப்பாக எழுதி வருகிறார்.

Updated on: 

வருங்கால நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய இன்றைய சேமிப்பே நமக்கு உதவியாக இருக்கும். அஞ்சல் துறை மற்றும் வங்கிகள் நமக்கு பாதுகாப்பான முதலீட்டை ஊக்குவித்து வருகின்றன.

அஞ்சல் துறை திட்டங்கள் பாதுகாப்பானவை என்பதால், பொதுமக்கள் பலரும் முதலீடு செய்து வருகின்றனர். அவ்வகையில் பெண் குழந்தைகளின் வருங்காலத்தை சிறப்பானதாக மாற்ற அஞ்சல் துறையின் சுகன்யா சம்ருத்தி திட்டம் (செல்வ மகள் சேமிப்புத் திட்டம்) முக்கியப் பங்காற்றுகிறது.

பெண் குழந்தைகளுக்கு என்றே பிரத்யேகமாக கொண்டு வரப்பட்ட இத்திட்டத்திற்கு மற்ற திட்டங்களைக் காட்டிலும் வட்டி அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தின் சிறப்பம்சங்களை இப்போது பார்ப்போம்.

கணக்கு தொடங்குவதற்கான வயது வரம்பு:

* பெண் குழந்தை பிறந்ததில் இருந்து அக்குழந்தைக்கு 10 வயது முடிவடையும் வரை, குழந்தையின் பெயரிலேயே செல்வ மகள் சேமிப்புக் கணக்கைத் தொடங்கலாம்.

கணக்கை யார் தொடங்கலாம்?

* பெண் குழந்தையின் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர் அஞ்சல் அலுவலகம் அல்லது அங்கீகரிக் கப்பட்ட வங்கிகளில் செல்வ மகள் சேமிப்புக் கணக்கைத் தொடங்க முடியும்.

வரம்பு:

* ஒரு குடும்பத்தில் 2 பெண் குழந்தைகளுக்கு மட்டுமே செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்க முடியும்.

* ஒருவேளை முதல் அல்லது இரண்டாம் பிரசவத்தில் இரட்டையர் அல்லது மும்மையர் பெண் குழந்தைகள் பிறந்தால், முறையான மருத்துவச் சான்றிதழுடன் விண்ணப்பிக்க முடியும். இதற்கு மட்டும் விதிவிலக்கு உண்டு

selva magal semippu thittam - சுகன்யா சம்ருத்தி திட்டம்
selva magal semippu thittam - சுகன்யா சம்ருத்தி திட்டம்

எவ்வளவு சேமிக்கலாம்?

* ஒரு நிதியாண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.250 செலுத்த வேண்டும். அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் வரை சேமிக்கலாம். இதற்கு இடைப்பட்டத் தொகையை பெற்றோர்களே தங்களின் நிதி நிலைமைக்கு ஏற்ப தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

செலுத்தும் காலம்:

* செல்வ மகள் சேமிப்புக் கணக்கு தொடங்கிய நாளில் இருந்து 15 ஆண்டுகள் வரை மாதந்தோறும் பணம் செலுத்தவேண்டும்.

வட்டி விகிதம்:

* அஞ்சல் துறையின் சிறுசேமிப்புத் திட்டங்களிலேயே செல்வ மகள் சேமிப்புத் திட்டத்திற்குத்தான் அதிக வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. தற்போதைய வட்டி விகிதம் 8.2%.

வரிச் சலுகை:

* முதலீட்டுப் பணம், வட்டித் தொகை மற்றும் முதிர்வுத் தொகை என அனைத்திற்கும் மத்திய அரசு விதிகளின் படி வரி விலக்கு வழங்கப்படும்.

இதையும் படியுங்கள்:
ITR தாக்கல் செய்யத் தவறி விட்டீர்களா? டிசம்பர் 31-க்குள் செய்யவேண்டியது என்ன?
சுகன்யா சம்ருத்தி திட்டம்

பணத்தை எப்போது எடுக்கலாம்?

* முழுத்தொகை: சேமிப்புக் கணக்கு தொடங்கிய தேதியில் இருந்து 21 ஆண்டுகள் முடிந்த பிறகு, முதிர்வுத் தொகையை எடுத்துக்கொள்ளலாம். பெண்ணுக்கு 18 வயது முடிந்ததும், திருமணம் நிச்சயமானால் பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.

* பெண்ணின் திருமணத்திற்கு 1 மாதத்திற்கு முன்போ அல்லது 3 மாதங்களுக்குப் பின்னரோ கணக்கை முடித்துக் கொண்டு முழுத் தொகையையும் எடுத்துக்கொள்ளும் வசதி இருக்கிறது.

* பகுதித் தொகை: பெண் குழந்தை 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பிறகு அல்லது 18 வயதுக்குப் பின் உயர்கல்விக்காக 50% பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.

இன்று உங்கள் பெண் குழந்தைக்கு நீங்கள் ஏற்படுத்திக் கொடுக்கும் இந்த நிதிப் பாதுகாப்பு, அவர்களின் வருங்காலத்தை சிறப்பாக மாற்ற உதவும். இதுவரை செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில் கணக்கு தொடங்காதவர்கள், இனியும் தாமதிக்காமல் உடனே கணக்கைத் தொடங்குங்கள்.

இதையும் படியுங்கள்:
அஞ்சல் துறை vs வங்கி முதலீடு: எதில் லாபம் அதிகம்? முழுமையான வழிகாட்டி!
சுகன்யா சம்ருத்தி திட்டம்
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.