

குடும்பம் என்ற மரத்தின் ஆணிவேராக நிதி மேலாண்மை இருக்கிறது. நிதி மேலாண்மை சரியாக இருக்கும் குடும்பங்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றன. குடும்ப பட்ஜெட்டைத்தாண்டி பற்றாக்குறை ஏற்பட்டால் குடும்பத்தின் மகிழ்ச்சி காணாமல் போய்விடுகிறது. ஆகவே குடும்பத்தின் மகிழ்ச்சியை தீர்மானிக்கும் நிதி மேலாண்மை ஆலோசனைகளை இப்பதிவில் காண்போம்.
குடும்ப பட்ஜெட் மூலம் சீராகும் நிதி மேலாண்மை:
குடும்பத்தில் நிதி மேலாண்மை வெளிப்படைத் தன்மை உடையதாக இருக்கவேண்டும். அவ்வாறு இல்லாத குடும்பங்களில் பிரச்னை தலை தூக்கிவிடும். கணவன் மனைவி இருவரின் குடும்ப பின்னணியும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒருவர் சிக்கனமான குடும்பத்தைச் சேர்ந்தவராகவும், மற்றொருவர் தாராளமாக செலவும் செய்திருக்கலாம்.
இந்த நிலை திருமணத்திற்கு பிறகு தொடரும்போது பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் நிதி மேலாண்மையில் இருவரும் வெளிப்படைத் தன்மையை உருவாக்கி வரவுக்கு மீறிய செலவை கட்டுப்படுத்த வேண்டும்.
வெளிப்படையான நிதி மேலாண்மை ஏன் அவசியம்?
நிதி நிர்வாகத்தின் முக்கியத்துவத்தை கணவன், மனைவி இருவரும் புரிந்துகொண்டு ஆசைப்பட்டதை எல்லாம் வாங்குவதற்கு பதிலாக வருவாய்க்கு ஏற்றபடி செலவு செய்யப் பழகிக்கொள்ள வேண்டும்.
உலகம் முழுவதும் ஏற்படும் பொருளாதாரம் மாற்றங்கள் காரணமாக நிதி சிக்கல்களை சந்திக்கும் சூழல் உருவாக்கியுள்ளதால் கணவன் மனைவி இருவரது வாழ்க்கை, பிறக்கப்போகும் குழந்தைகளின் வாழ்க்கை, அடிப்படை தேவைகள், முதலீடுகள் என அனைத்தையும் திட்டமிட்டே வாழவேண்டிய சூழலை உருவாக்கிக் கொள்ளவேண்டும். இதற்கு நிதியைத் திட்டமிடுவது மிகவும் முக்கியமாகும்.
பட்ஜெட் போட்டு செலவு செய்வது;
வீட்டில் ஏற்படும் செலவுகளை பட்டியலிட்டு அதற்கேற்றார் போல் செலவு செய்யும் போது தேவையான வற்றிற்கு செலவு செய்தும், தேவையில்லாதவற்றையும், தேவைக்கு அதிகமாக செலவு செய்வதும் கட்டுப்படுத்தப் படும்.
தம்பதிகளின் வருமானத்தில் செலவு எவ்வளவு, சேமிப்பு எவ்வளவு என கணக்கு பார்ப்பதோடு ஹெல்த் இன்சூரன்ஸ், ஹவுசிங் லோன், கார் லோன் போன்றவற்றிற்கான வட்டியையும் கணக்கிட்டு நிதி மேலாண்மையை திட்டமிடும்போது செலவுகள் கண்டிப்பாக குறையும்.
மனைவிக்கு தெரியாமல் ஆண்கள் செலவு செய்வது;
திருமணத்திற்கு பின்னர் சண்டை உருவாவதற்கு கணவன் அல்லது மனைவியின் உறவினருக்கு அதிகமாக செலவு செய்வதும் ஒரு காரணமாக இருக்கிறது. உறவினர்களின் குடும்ப நிகழ்ச்சி, சீர் செய்வது, வீட்டை மேம்படுத்துவது என செலவுகள் வந்துகொண்டே இருக்கும் என்பதால் ஆண்கள் மனைவிக்கு தெரியாமல் நண்பர்களுக்கு பணம் செலவழிப்பது அவுட்டிங் செல்வதை தவிர்க்க வேண்டும்.
தேவைக்கு மட்டுமே செலவு;
பெண்களும் தேவைக்கு அதிகமாக மளிகை பொருட்களை வாங்காமல், பயன்படாத பொருட்களை ஷாப்பிங் செய்யாமல் தேவைப்படுவதை மட்டுமே வாங்கினால் பணம் வீணாவது தடுக்கப்படும். மேலும் ஆசைப்படுவதை எல்லாம் வாங்குவதைவிட தேவையானதை மட்டும் வாங்கும் பழக்கத்தை பெண்கள் ஏற்படுத்திக் கொண்டு சேமிப்புக்கான வழி உருவாகி பணம் செலவழிப்பது, வீட்டு நிர்வாகம் இரண்டிலும் பெண்கள் முன்மாதிரியாக திகழ்வார்கள்.
பொழுதுபோக்கும் முக்கியமே;
பட்ஜெட்டில் ஒரு பகுதியை வெளியிடங்களில் சாப்பிடுவது, அவுட்டிங் செல்வதற்கு என ஒதுக்குவதோடு, மருத்துவ காப்பீடு, குழந்தைகளின் கல்வி, எதிர்காலத்திற்கான வசதிகள், வீடு கார் வாங்குவது போன்ற இலக்குகளை நிர்ணயித்து சேமிப்பை உருவாக்கினால் அன்பு அதிகரித்து நிதி மேலாண்மை முறைப்படுத்தப்படும்.
கணவன் மனைவி இருவரும் இணைந்து நடத்தும் குடும்பம் என்ற நிறுவனத்தில் இருவரும் முக்கிய பங்குதாரர்களாக இருப்பதால் அவரவர்களின் பொறுப்பை உணர்ந்து ஒருவருக்குத் தெரியாமல் மற்றவர் செலவு செய்வது, மற்றவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டும் போது ஏற்றுக்கொள்வது போன்றவற்றை கடைபிடித்தால் இல்லத்தில் நிதிநிலைமையில் பணம் இல்லை என்ற பேச்சுக்கே இடம் இருக்காது.
இப்பதிவில் உள்ள ஆலோசனைகளைப் பின்பற்றுவதன் மூலம், தம்பதியரிடையே தேவையற்ற பணத் தகராறுகள் முற்றிலுமாக நீங்கி, பரஸ்பர நம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் மாதாந்திர வருமானத்திற்குள் தேவையில்லாத செலவுகளைக் கட்டுப்படுத்தி, அவசர காலத்திற்கான சேமிப்பையும், குழந்தைகளின் எதிர்காலத்திற்கான காப்பீடுகளையும் மிக எளிதாக உங்களால் உருவாக்க முடியும்.
Reference: Financial Planning for Couples: How to Manage Money Together