சொந்த வீடு கனவு நனவாக வேண்டுமா? கடன் வாங்குவது எப்படி லாபம்!

வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டுக்கு மாற ஸ்மார்ட் வழிமுறைகள்.
வீட்டுக்கடன் - Home Loan
வீட்டுக்கடன் - Home Loan
இந்திராணி தங்கவேல்

என் பெயர் இந்திராணி தங்கவேல். சொந்த ஊர் தஞ்சாவூர். வசிப்பது சென்னையில் உள்ள மாடம்பாக்கம். சிறு வயது முதலே எழுத வேண்டும் என்ற ஆர்வம் அதிகம் இருந்தது. ஆதலால் முதன்முதலாக மங்கையர் மலருக்கு ஒரு கட்டுரை எழுதி அனுப்பினேன். அது பிரசுரமாகியதால் அதிலிருந்து எழுதத் தொடங்கினேன். இன்று பாரம்பரியமிக்க கல்கி குழும பத்திரிகைகளில் எழுதி வருகிறேன். அது எனக்கு மன நிறைவு தருகிறது.

Updated on

திருமணமான புது தம்பதிகள் தனி வீட்டை வாங்க வேண்டும் என்ற பாரம்பரிய அறிவுரையை அடிப்படையாகக் கொண்டு, இந்த கட்டுரை வீட்டுக் கடன் எவ்வாறு ‘நல்ல கடன்’ ஆக மாறுகிறது என்பதை விளக்குகிறது. சொத்தின் மதிப்பு உயர்வு, வாடகை செலவைச் சேமிப்பாக மாற்றுவது, கட்டாயச் சேமிப்பு பழக்கம், வருமான வரிச் சலுகைகள், பணவீக்கத்திலிருந்து பாதுகாப்பு, வாடகை மூலம் செயலற்ற வருமானம் போன்ற பல நன்மைகள் விரிவாக கூறப்படுகின்றன.

'எலி வலையானாலும் தனி வலை' வேண்டும். அதனால் கடன் உடன் வாங்கி நகை, நட்டை அடகு வைத்தாவது "பெட்டி கவிழ்த்தார் போல" ஒரு வீட்டை வாங்கி விடுங்கள். அப்புறம் மாத மாதம் இஎம்ஐ கட்டினால் கடன் தீரப்போகுது.

இப்படித்தான் "சிறுக கட்டி பெருக வாழவேண்டும்" என்று திருமணமான புது தம்பதிகளை தனி குடித்தனம் வைக்க வரும்பொழுது அவர்களின் வாடகை வீட்டைப் பார்த்து பெரியவர்கள் கூறுவது உண்டு. பிறகு தம்பதியர் விழிப்புணர்வுடன் வீட்டுக் கடனுக்கு ஆகவேண்டிய வேலைகளை கவனிக்க ஆரம்பிப்பார்கள்.

அப்படி கடன் வாங்கி வீடு வாங்குவது என்பது வெறுமனே ஒரு மாதாந்திரச் செலவு (Expense) அல்ல; அது நீண்ட காலத்தில் ஒரு நபரின் நிகர சொத்து மதிப்பை (Net Worth) உயர்த்தும் "நல்ல கடன்" (Good Debt) என்றே நிதி நிபுணர்களால் கருதப்படுகிறது.

கடன் மூலம் வீடு வாங்குவது எவ்வாறு செல்வத்தைச் சேர்க்கும் வழியாக மாறுகிறது என்பதற்கான காரணங்கள் மற்றும் தகவல்கள் பற்றி இப்பதிவில் காண்போம்:

சொத்தின் மதிப்பு உயர்வு:

தனிநபர் கடன்கள் (Personal Loans) அல்லது வாகனக் கடன்கள் வாங்கி வாங்கும் பொருட்களின் மதிப்பு காலப்போக்கில் குறையும் (Depreciation). ஆனால், நிலம் மற்றும் வீட்டின் மதிப்பு காலப்போக்கில் தொடர்ந்து உயரும் (Appreciation). நீங்கள் 20 வருடக் கடனில் வீடு வாங்கினாலும், கடன் முடிவடையும்போது வீட்டின் சந்தை மதிப்பு நீங்கள் வாங்கிய விலையை விடப் பல மடங்கு உயர்ந்திருக்கும்.

வீட்டுக்கடன் - Home Loan
வீட்டுக்கடன் - Home Loan

வாடகைச் செலவு சேமிப்பாக மாறுவது:

சொந்த வீடு இல்லாதபோது நீங்கள் மாதாந்திர வாடகையாகக் கொடுக்கும் பணம் முழுமையாகத் திரும்ப வராத செலவாகும். ஆனால், அதே தொகையைக் கடனுக்கான தவணையாக செலுத்தும்போது, ஒவ்வொரு மாதமும் அந்த வீட்டின் மீது உங்களுக்கு உள்ள உரிமை (Equity) அதிகரித்துக்கொண்டே வருகிறது. கடன் முடிந்ததும் அந்த முழு சொத்தும் உங்களுடையதாகிறது.

கட்டாயச் சேமிப்பு:

பெரும்பாலான மனிதர்களுக்குப் பணத்தைக் கையிருப்பில் வைத்தால் தேவையில்லாத செலவுகள் ஆகிவிடும். வங்கிக் கடன் தவணை (EMI) என்பதும் ஒருவகையான 'கட்டாயச் சேமிப்பு' தான். சுயக் கட்டுப்பாட்டுடன் சேமிக்க முடியாதவர்கள்கூட, EMI கட்ட வேண்டும் என்பதற்காகவே வீணான செலவுகளைக் குறைத்துச் சொத்தைச் சேர்த்துவிடுவார்கள். இது இப்படி லாபம் ஆகும்போது நாம் சேமித்தது நமக்கு சுமையாகத் தெரியாதபடி ஒரு கட்டாயச் சேமிப்பாக மாறிவிடுகிறது.

வரிச் சலுகைகள்:

இந்திய வருமான வரிச் சட்டத்தின்படி, வீட்டுக்கடன் வாங்குபவர்களுக்குப் பெரிய அளவில் வரிச் சலுகைகள் கிடைக்கின்றன:

அசல் தொகை (Principal): பிரிவு 80C-ன் கீழ் ஆண்டிற்கு ₹1.5 லட்சம் வரை வரி விலக்கு பெறலாம்.

வட்டித் தொகை (Interest): பிரிவு 24B-ன் கீழ் ஆண்டிற்கு ₹2 லட்சம் வரை வரி விலக்கு பெறலாம்.

பயன்: இந்த வரிச் சேமிப்பு உங்கள் ஒட்டுமொத்த வரிப் சுமையைக் குறைத்து, மறைமுகமாகப் பணத்தைச் மிச்சப்படுத்துகிறது.

இதையும் படியுங்கள்:
வீட்டுக் கடன் காப்பீடு: உங்கள் குடும்பத்தின் நிம்மதியை உறுதிசெய்யும் ரகசியம்!
வீட்டுக்கடன் - Home Loan

பணவீக்கத்திற்கு எதிரான பாதுகாப்பு:

காலப்போக்கில் பணவீக்கத்தால் பொருட்களின் விலை உயரும், பணத்தின் மதிப்பு குறையும்.ஆனால் உங்கள் வங்கி EMI தொகை நிலையாக (Fixed EMI) இருக்கும். 10 ஆண்டுகளுக்குப் பிறகு பணவீக்கத்தால் உங்கள் வருமானம் உயர்ந்துவிடும், ஆனால் வீட்டுக் கடன் தவணை அதே அளவில் இருப்பதால் அதைக் கட்டுவது உங்களுக்குப் பெரிய சுமையாக இருக்காது.

செயலற்ற வருமானம்:

நீங்கள் வாங்கிய வீட்டை வாடகைக்கு விடும் பட்சத்தில், வரும் வாடகை வருமானத்தைக் கொண்டே கடன் தவணையின் (EMI) ஒரு பகுதியைச் சமாளிக்க முடியும். கடன் அடைபட்ட பிறகு, அந்த வாடகை உங்கள் வாழ்நாள் முழுமைக்குமான மாதாந்திர நிலையான வருமானமாக மாறும்.

முக்கியமான எச்சரிக்கை & ஆலோசனைகள்:

20/40/30 விதி: வீட்டின் விலையில் குறைந்த பட்சம் 20% முன்பணத்தை (Down Payment) கைவசம் வைத்திருக்க வேண்டும்.

உங்கள் மாதாந்திர வருமானத்தில் 40%-க்கு மேல் வீட்டுக்கடன் EMI போகக்கூடாது.

உங்களிடம் குறைந்தது 6 மாத EMI மற்றும் குடும்பச் செலவிற்கான அவசரகால நிதி (Emergency Fund) தனியாக இருக்க வேண்டும். இதை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் .இப்படி இஎம்ஐ கட்டுப்பவர்கள்.

இதையும் படியுங்கள்:
பர்சனல் லோன் EMI கட்ட தவறினால் என்னவாகும்? தவிர்க்கும் எளிய வழிகள்!
வீட்டுக்கடன் - Home Loan

ஆதாரம்:

கடனைப் பயன்படுத்தி அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களை வாங்குவது, எதிர்காலத்தில் மூலதன மதிப்பையேற்றி நிதிப் பாதுகாப்பையும் நிகரச் சொத்து மதிப்பையும் (Net Worth) பெருக்கும் 'நல்ல கடன்' (Good Debt) அமைப்பாகும்" என நிதி மேலாண்மை நெறிமுறைகள் சுட்டிக்காட்டுகின்றன.

Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.

Reference:

logo
Kalki Online
kalkionline.com