மருத்துவக் காப்பீடு கவரேஜை மலிவாக உயர்த்த 7 ஸ்மார்ட் வழிகள்!

குறைந்த பிரீமியத்தில் அதிக மருத்துவக் காப்பீடு பெற இதோ எளிய டிப்ஸ்.
மருத்துவக் காப்பீடு - Health Insurance Tamil
மருத்துவக் காப்பீடு - Health Insurance TamilAI Image
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on: 

மருத்துவக் காப்பீட்டில் கவரேஜை மலிவாக அதிகரிக்க டாப்-அப், சூப்பர் டாப்-அப் பாலிசிகள், ரெஸ்டோரேஷன் வசதி, பாலிசி அப்கிரேட், ஃபேமிலி ஃப்ளோட்டர் திட்டம், நோ-கிளைம் போனஸ், ஆட்-ஆன்கள், ரைடர்கள், போர்ட்டபிலிட்டி போன்ற ஸ்மார்ட் வழிகள் விளக்கப்படுகின்றன. அதிகரிக்கும் மருத்துவச் செலவுகளை சமாளிக்க குறைந்த பிரீமியத்தில் அதிக பாதுகாப்பு பெறுவது எப்படி என்பதையும் இந்த கட்டுரை தெளிவாக கூறுகிறது.

மருத்துவக் காப்பீடு நம் கவரேஜ் தொகையை அதிகரிப்பதற்கு சூப்பர் டாப்-அப், பாலிசியை புதுப்பிக்கும் பொழுது காப்பீட்டுத் தொகையை உயர்த்துவது போன்ற சில எளிய மற்றும் ஸ்மார்ட் வழிகள் உள்ளன. மருத்துவச் செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் தற்போதைய கவரேஜை மலிவான பிரீமியத்தில் அதிகரிப்பதற்கான சில வழிகள்.

டாப்-அப் மற்றும் சூப்பர் டாப்-அப் பாலிசிகள்:

குறைந்த பிரீமியத்தில் கவரேஜ் அதிகரிக்க இதுவே சிறந்த வழியாகும். தற்போதைய பாலிசியின் கவரேஜ் முடிந்த பிறகு, அதிக மருத்துவச் செலவுகளைச் சமாளிக்க இவை மிகவும் குறைந்த பிரீமியத்தில் கூடுதல் கவரேஜை வழங்கும்.

உதாரணத்திற்கு உங்களிடம் ரூ. 5 லட்சம் அடிப்படை பாலிசி இருந்தால், அதைத்தாண்டும் மருத்துவச் செலவுகளுக்கு ரூபாய் 10 லட்சம் சூப்பர் டாப் அப் பாலிசி மிகக்குறைந்த பிரீமியத்தில் கிடைக்கும்ரூ. ஒரு வருடத்தில் மொத்த மருத்துவச் செலவு ரூபாய் 5 லட்சத்தைத் தாண்டும்பொழுது, இந்த சூப்பர் டாப்-அப் பாலிசி மீதிப் பணத்தை ஏற்கும். புதிய தனிநபர் பாலிசி எடுப்பதை விட இதன் பிரீமியம் மிகவும் குறைவு.

ரெஸ்டோரேஷன் வசதி (Restoration Benefit):

உங்கள் பாலிசித்தொகை முழுவதும் காலியானால், இந்த வசதி மூலம் காப்பீட்டுத் தொகையை மீண்டும் தானாக நிரப்பிக் கொள்ளலாம். புதிய நோய்களுக்கு மட்டுமல்லாமல் ஒரே வருடத்தில் மீண்டும் அதே நோய்க்கான சிகிச்சை தேவைப்பட்டாலும் இது பொருந்தும்.

பாலிசியை அப்கிரேட் செய்தல்:

ஒவ்வொரு வருடமும் நமது பாலிசியைப் புதுப்பிக்கும் பொழுது கவரேஜ் தொகையை உயர்த்திக்கொள்ள வாய்ப்புண்டு. அதற்கு நாம் காப்பீட்டு நிறுவனத்தைத் தொடர்புகொண்டு அடிப்படை பாலிசியில் இருக்கும் காப்பீட்டுத் தொகையை (Sum Insured) உதாரணத்திற்கு ரூபாய் 3 லட்சத்திலிருந்து ரூபாய் 5 லட்சமாக உயர்த்தக் கோரலாம்.

மருத்துவக் காப்பீடு - Health Insurance Tamil
மருத்துவக் காப்பீடு - Health Insurance TamilAI Image

ஃபேமிலி ஃப்ளோட்டர் திட்டத்திற்கு ஆறுதல் (Family Floater Plan):

தனிநபர் பாலிசி வைத்திருந்தால், நம் குடும்பத்தினர் அனைவருக்கும் சேர்த்து ஒரு விரிவான ஃபேமிலி ஃப்ளோட்டர் திட்டத்திற்கு மாறுவதன் மூலம் அதிகபட்ச கவரேஜைப்பெற முடியும்.

தனித்தனியாக பாலிசி எடுப்பதற்கு பதிலாக குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் ஒரே பாலிசியில் கொண்டு வரலாம். இது ஒரே பிரீமியத்தில் குடும்பத்தில் உள்ள எவர் ஒருவருக்கும் அல்லது அனைவருக்கும் அந்த மொத்த கவரேஜ் தொகையும் பயன்படும். இது தனிநபர் பாலிசிகளைவிட அதிக கவரேஜை மலிவாகத் தரும்.

இதையும் படியுங்கள்:
ஃபேமிலி ஃப்ளோட்டர் vs சீனியர் சிட்டிசன் பாலிசி: எது பெஸ்ட்?
மருத்துவக் காப்பீடு - Health Insurance Tamil

நோ-கிளைம் போனஸ் (No Claim Bonus):

எந்த ஒரு மருத்துவக் கோரிக்கையும் (claim) செய்யாத வருடங்களுக்கு காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கும் பரிசு இதுவாகும். ஒவ்வொரு ஆண்டும் க்ளெய்ம் செய்யாமல் இருந்தால் நம் பாலிசி நிறுவனம் காப்பீட்டுத் தொகையை குறிப்பிட்ட சதவீதத்தில் இலவசமாக உயர்த்திக் கொடுக்கும். அதாவது கிளைம் செய்யாத ஒவ்வொரு வருடத்திற்கும் காப்பீட்டுத் தொகை ஒரு குறிப்பிட்ட சதவீதத்தில் (எ.கா. 10% - 50%வரை) அதிகரிக்கப்படும்.

ஆட்-ஆன்கள் மற்றும் ரைடர்கள் (Add-ons and Riders):

அடிப்படை பாலிசியுடன் கூடுதல் கட்டணம் செலுத்தி சில முக்கிய தேவைகளை இணைக்கலாம். தீவிர நோய்கள் அல்லது விபத்துக் காப்பீடு போன்ற கூடுதல் நன்மைகளுக்குத் தனி ரைடர்களை சேர்த்துக்கொள்ளலாம்.

புற்றுநோய், மாரடைப்பு போன்ற கடுமையான நோய்கள் கண்டறியப்பட்டால், மொத்தமாக ஒரு குறிப்பிட்ட தொகை வழங்கப்படும். மருத்துவமனை அறையின் வாடகை மீதான கட்டுப்பாடுகளை நீக்க இந்த ரைடர் உதவும். விபத்து மரணம் மற்றும் நிரந்தர ஊனத்திற்கான (Accidental Disability) ரைடர்களையும் சேர்க்கலாம்.

போர்ட்டபிலிட்டி வசதியைப் பயன்படுத்துதல்:

தற்போதைய காப்பீட்டு நிறுவனத்தின் சேவையோ அல்லது கவரேஜ் தொகையோ திருப்தி அளிக்கவில்லை எனில் வேறு நல்ல நிறுவனத்திற்கு பாலிசியை மாறலாம். இவ்வாறு மாற்றும் பொழுது பழைய பாலிசியில் பெற்ற காத்திருப்பு காலம் (Waiting Period) மற்றும் நோ-கிளேய்ம் போனஸ் போன்ற பலன்கள் மாறாமல், புதிய நிறுவனத்தில் அதிகக் கவரேஜைப் பெறமுடியும்.

இதையும் படியுங்கள்:
அசாத்ய ரோக் யோஜனா: புற்றுநோய், இதய நோய்களுக்கு ₹5 லட்சம் வரை இலவச சிகிச்சை!விண்ணப்பிப்பது எப்படி?
மருத்துவக் காப்பீடு - Health Insurance Tamil

இந்தக் வழிகாட்டியைப் பின்பற்றுவதன் மூலம், அதிகப் பணம் செலவழிக்காமல் உங்கள் குடும்பத்திற்குத் தேவையான மருத்துவப் பாதுகாப்பை இரட்டிப்பாக்க முடியும். எதிர்பாராத மருத்துவச் செலவுகளிலிருந்து உங்கள் சேமிப்பை முழுமையாகப் பாதுகாக்கும் நிதித் தெளிவைப் பெறுவீர்கள்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.

Reference:

logo
Kalki Online
kalkionline.com