தற்காலிக வேலை உலகத்தில் தப்பிப்பிழைப்பது எப்படி? ஐடி ஊழியர்களின் எதிர்காலம்!!

ஐடி துறையின் தற்காலிக வேலை கலாச்சாரத்தை எதிர்கொண்டு வாழ்க்கையில் நிலைத்தன்மை பெற எளிய வழிகள்!
தற்காலிக வேலை - Temporary Jobs
தற்காலிக வேலை - Temporary Jobs
ஜெயராமன் ரகுநாதன்

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார். இந்திய கார்ப்பரேட் உலகில் பல உயர் பதவிகள் வகித்த சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட்டான ஜெயராமன் ரகுநாதன் Knowledge Capital Investment Group என்னும் லாப நோக்கமற்ற நிறுவனத்தின் மூலம் கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார். பல முன்னணி இதழ்களில் இவர் எழுதிய சிறுகதைகளும் கட்டுரைகளும் வெளி வந்திருக்கின்றன. கல்கி மற்றும் மங்கையர் மலரில் தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு மேல் தகவல் தொழில் நுட்பக்கட்டுரைகள் எழுதியிருக்கிறார். ஏராளமான சிறுகதைகளையும் மேடை ஏற்றப்பட்ட ஆறு நாடகங்களையும் எழுதியிருக்கிறார். சிறந்த தொழில் முனைவோர் விருதும், மைலாப்பூர் அகாடமியின் சிறந்த நாடகாசிரியர் விருதும், ”வென்றார்கள் நின்றார்கள்” புத்தகத்துக்கான பரிசும் பெற்றவர். இவரின் ஆடியோ விஷுவல் உரைகளும் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.

Updated on

ன்றைய உலகம் ஒரு 'டிஜிட்டல்' யுகமாக மாறி வருகிறது. தகவல் தொழில்நுட்பத்தின் (Information Technology - IT) வெடிவளர்ச்சி நம் வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. பேப்பர் புத்தகங்கள் என்பது மறைந்து கம்ப்யூட்டர் ஸ்கிரீன் வந்து அதுவும் இப்போது மொபைல் ஸ்கிரீன் மட்டுமே என்பதாக உருவாகியிருக்கிறது. இது நன்மைக்கா தீமைக்கா என்றெல்லாம் பட்டி மன்றம் நடத்துவது வேஸ்ட். மாற்றத்தை ஒப்புக்கொண்டு அதற்கேற்றபடி நம்மை தயார்படுத்திக்கொள்வதுதான் சரி.

வேலைவாய்ப்பு நிலைகளும் அதனுடைய தாக்கத்திலிருந்து விலகவில்லை. பணி நியமனங்களும், வேலைவாய்ப்புகளும் பெரும்பாலும் தற்காலிக (temporary), ஒப்பந்த (contract-based), அல்லது ஃப்ரீலான்ஸ் (freelance) பணிகளாகவே மாறிக்கொண்டிருக்கின்றன.

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவுகள்:

ஆட்டோமேஷன் (Automation):

பல repetitive வேலைகள் மெஷின்கள், சாப்ட்வேர்கள் மற்றும் AI மூலம் தானாகவே செய்யப்படுகின்றன. உதாரணமாக, ஒரு மொழிபெயர்ப்பாளரின் வேலை இன்று ஒரு மென்பொருள் செயலியில் முடிக்கலாம்.

கிளவுட் தொழில்நுட்பம் (Cloud Computing):

ஒரே இடத்தில் அனைத்து பணியாளர்களும் இருக்க வேண்டிய தேவை குறைந்துவிட்டது. வீட்டிலிருந்தே வேலை செய்வது (work from home) வழக்கமாகியுள்ளது.

ஃப்ரீலான்ஸ் வேலைகள்:

நிறுவனங்கள் நிரந்தர ஊழியர்களை நியமிப்பதைவிட, தேவைக்கு ஏற்ப பணியாளர்களை வெளியூர்களிலிருந்து ஓட்ட நேர ஒப்பந்தத்தில் வேலை செய்ய வைக்கின்றன.

டிஜிட்டல் பிளாட்பாம்கள் (Digital Platforms):

Fiverr, Upwork, Freelancer போன்ற இணையதளங்களில் பணிகள் போடப்படுகின்றன. ஒவ்வொரு பணி முடிந்ததும் பணியாளர் வேறு பணி தேடவேண்டும்.

தற்காலிக வேலை - Temporary Jobs
தற்காலிக வேலை - Temporary Jobs

தற்காலிக வேலைவாய்ப்புகள் – நடுத்தரவர்க்கம் மீது தாக்கம்:

1. பணிஓய்வு நம்பிக்கையின்மை:

தற்காலிக வேலைகளில் பணி ஓய்வு (retirement), வேலை உத்தரவாதம் (job security) என்பவை இல்லாமல் போய்விடுகின்றன. பிங்க் ச்ளிப் என்று சொல்லப்படுகிற “சீட்டைக்கிழித்து” வீட்டுக்கு அனுப்பும் பழக்கம் இன்று ஐ டி மட்டுமல்லாது எல்லா துறையிலும் நடக்கிறது

2. மருத்துவ காப்பீடு, பணி நலன்கள் இல்லாமை:

டெம்பரரி ஊழியர்களுக்கு ESI, PF, Bonus, Gratuity போன்ற சலுகைகள் பெரும்பாலும் கிடைக்காது. அதே சமயம் மருத்துவ செலவுகள் உயர்ந்து கொண்டே வருகிறது.

3. நிரந்தரமற்ற தன்மை:

சிறிய தவறுகளுக்கே "Project Over" என்று கூறி வேலையை நிறுத்துகிறார்கள். யாருக்கும் நேரமில்லை. பொறுமையாக கற்றுக்கொடுக்கும் எண்ணமும் இல்லை. இது மன அழுத்தத்தையும், வாழ்வாதார சிக்கல்களையும் உருவாக்குகிறது.

4. தொடர்ந்து வேலையை தேடும் அவசர நிலை:

ஒரு வேலை முடிந்ததும், மற்றொரு வேலைக்காக ஓடவேண்டும். ஸ்திரமான வேலை என்பது பழங்கதையாகப்போய்விட்ட து. இது குடும்ப வாழ்க்கையையும் பாதிக்கிறது.

ஊக்கத்தக்க மாற்றங்களும் உள்ளன:

அதே நேரத்தில், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி சில நல்ல வாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளது:

• வசதியான வேலை நேரம்:

வீட்டிலிருந்து வேலை (Work from Home) செய்வது மூலம் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட முடிகிறது. நீண்ட பயண நேரத்தையும் செலவையும் குறைத்துவிடுகிறதே!

• நிறைய வேலை வாய்ப்புகள்:

இலங்கை, பங்களாதேஷ், இந்தியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்கு உலகளாவிய வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன. ஒரு கம்ப்யூட்டரும் இண்டர்னெட்டும் அசாத்திய திறமையும் இருந்தால் வீட்டிலிருந்தபடியே அமோகமாக சம்பாதிக்க முடியும்.

இதையும் படியுங்கள்:
மாதாந்திர முதலீடே இல்லாமல் வீட்டிலிருந்தே வருமானம் பெருக்க 10 எளிய வழிகள்!
தற்காலிக வேலை - Temporary Jobs

• திறமைக்கு முக்கியத்துவம்:

Degree இல்லாமலே கூட, திறமை இருந்தால் பணியாளர்கள் வேலை பெற முடிகிறது. எடுத்துக்காட்டு: வீடியோ எடிட்டிங், UI/UX டிசைன், டிஜிட்டல் மார்கெட்டிங். இண்டர்வ்யூ என்பது இப்போதெல்லாம் சர்டிஃபிகேட்டை சரி பார்ப்பதெல்லாம் இல்லை. ஒரு சின்ன வேலை கொடுத்து செய்யச்சொல்லி அதன் முடிவைப்பார்த்து அப்பாயிண்ட்மெண்ட்.

தற்காலிக வேலைகளில் நிலைத்தன்மை பெற என்ன செய்யலாம்?

1. பல திறமைகள் கற்றுக்கொள்க:

ஒரே துறையில் மட்டும் அல்லாமல், பல தொழில் நுட்பங்களை தெரிந்து வைத்திருப்பது மேலானது.

உதாரணம்: ஒரு மென்பொருள் டெவலப்பர், UI/UX ஞானமும் கற்றுக்கொள்வது.

2. மென்மையான திறன்கள் (Soft Skills):

தொடர்புத் திறன், நேர நிர்வாகத்திறன், குழு ஒத்துழைப்பு – இவை தொடரும் வாய்ப்புகளை தரும்.

3. முதலீட்டு சிந்தனை:

நிரந்தர வேலை கிடைக்காததால், சம்பளத்தை சரியாக முதலீடு செய்யவேண்டும். உதாரணம்: மியூச்சுவல் ஃபண்ட், பங்களிப்பு கொள்கைகள்.

4. தொழில் முனைவோராக மாறுதல்:

சொந்தமாக ஸ்டார்ட்அப் தொடங்குவது, தனி வாடிக்கையாளர்களுடன் பணியாற்றுவது போன்ற முயற்சிகள். சில வருடங்களுக்கு முன்பிருந்ததைவிட தொழில் முனைவோரை ஆதரிக்கும் எண்ணமும் செயல்பாடுகளும் அதிகரித்துவிட்டன.

இதையும் படியுங்கள்:
டிகிரி போதும்: மாதம் ரூ.1.80 லட்சம் ஊதியத்தில் விமான நிலைய ஆணையத்தில் பணி..!
தற்காலிக வேலை - Temporary Jobs

உங்களிடம் ஒரு நல்ல பிஸினஸ் ஐடியா இருக்குமானால் தொழில் தொடங்க ஆதரவு கொடுத்து உங்களை வழி நடத்த பல வாய்ப்புகள் பெருகிவிட்டன.

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி வேலை வாய்ப்புகளில் ஒரு புதிய யுகத்தை உருவாக்கியுள்ளது. ஆனால் அந்த யுகம் நிலைத்தன்மையை விட, தற்காலிகத்தன்மையை அதிகமாக கொண்டுள்ளது. இவ்வாறான சூழ்நிலைக்கு ஏற்றவாறு நாம் மாறவேண்டும்.

இதையும் படியுங்கள்:
கூடுதல் வேலை, சிக்கன வாழ்க்கை மூலம் கடனிலிருந்து விடுபடலாம்!
தற்காலிக வேலை - Temporary Jobs

கல்வி, திறமை வளர்ச்சி, நிதி மேலாண்மை என அனைத்திலும் புதிதாக நாம் நம்மை தயார்படுத்திக் கொள்வது அவசியம். இப்போது நிரந்தர வேலை என்ற கற்பனை மாறிக்கொண்டிருக்கிறது – அதற்கு பதிலாக, திறமையான தற்காலிகர் (Competen Temporary workforce) என்பதே எதிர்கால உலகின் நியதியாக மாறி வருகிறது.

இந்த வழிகாட்டியை வாசிப்பதன் மூலம், டிஜிட்டல் யுகத்தின் பணிப் பாதுகாப்பற்ற சூழலை உணர்ந்து, உங்கள் வேலைவாய்ப்பை உறுதிசெய்யும் நவீன திறன்களையும் நிதி ஸ்திரத்தன்மையையும் உடனடியாக வளர்த்துக்கொள்ள முடியும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.

Reference:

logo
Kalki Online
kalkionline.com